ஞானியைப்போல எப்போது வாழ முடியும் தெரியுமா?

Do you know when you can live like a sage?
Lifestyle story
Published on

ருவர் எவ்வளவுக்கு எவ்வளவு தன் வாழ்க்கை வசதிகளை சுருக்கி கொள்ள முடியும் என்பதற்கு  ஆமை ஓட்டிற்குள் தன் உடம்பை சுருக்கி கொள்வதை எடுத்துக்காட்டாக கூறுவதுண்டு. 

பெரிய பங்களா, படகு போன்ற கார் அதனைச் சுற்றிய பெரிய தோட்டம் என்று பிரமாண்டமாய் வாழ்பவர்கள் ஏராளம் உண்டு. இன்னும் சிலர் பெட்டி கவிழ்த்தார் போல் சின்ன வீடு, சிரமமில்லாத வாழ்க்கை, எளிமையான உணவு என்று வாழ்க்கையினை திறம்பட நடத்துவர். மேலும் பலர் சாதாரண குடிசையில் எப்படி இருந்தால் என்ன? எவ்வளவு பெரிய வீட்டில் வசித்தால் என்ன? மூன்று வேளை தான் உண்ண முடியும். உறங்குவதற்கு சிறிது இடம் கிடைத்தால் போதும். இதைவிட பெரிய வீட்டில்  வசிப்போரும் இதைத்தானே செய்கிறார்கள் என்று கூறுவாரும் உண்டு. ஆக அவரவர் மனநிலைக்கு ஏற்ப வீடு விசாலப்படுவதை அறிய முடிகிறது.

"வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு"  என்பது இதைத்தான். 

கிரேக்க தலைநகர் ஏதென்ஸில் இருந்த டயோஜெனீஸ் என்னும் ஞானியை ஒருநாள் மகா அலெக்சாண்டர் சந்திக்க நேர்ந்தது. அப்போது ஒரு பீப்பாயையே தம் இருப்பிடமாகக் கொண்டிருந்தார் ஞானி.

ஞானியிடம் சென்று 'நான் அலெக்ஸாண்டர்' என்றார் அரசர்.

 'நான் டயோனெஜீஸ்!'

தங்களுக்கு நான் ஏதேனும் உதவி செய்யலாமோ? என்று கேட்டார் அலெக்சாண்டர். 

'ஆம் வெயிலை மறைக்காமல் நில்லும்...' என்றார் டயோனெஜீஸ்! 

இதையும் படியுங்கள்:
நம் செயலும், பேச்சும்தான் நாம் யார் என்பதை நிர்ணயிக்கிறது தெரியுமா?
Do you know when you can live like a sage?

அவ்விடம் விட்டு அகன்று, தம் சகாக்களைப் பார்த்து 'நான் அலெக்சாண்டராக இல்லாதிருந்தால் டயோஜெனீசாக இருக்கவே விரும்புவேன்' என்றார் அலெக்ஸாண்டர். 

உள்ளதை கொண்டு நல்லது செய். இருப்பதைக் கொண்டு நிறைவுகொள் என்பதற்கு சிறந்த வாழ்வியல் முறை இதுதான். ஞானி அப்படி வாழ்ந்து விட முடியும். ஆனால் மகா அரசன் அப்படி வாழ்ந்து விட முடியுமா? அதனால்தான் "நான்அரசனாக இல்லாமல் சாதாரண குடிமகனாக இருந்திருந்தால் ஞானி போல் வாழ்ந்திருக்க முடியும். வாழ்ந்திருப்பேன்" என்பதை மகா அலெக்சாண்டர் இப்படி கூறி உள்ளார். எளிமையான வாழ்வே இயல்பான வாழ்க்கை முறை என்பதை எடுத்துக்காட்டும் குட்டிக்கதை இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com