ஜெர்சி நம்பர் '7' ஏன் அனைவருக்கும் பிடித்திருக்கிறது?

MS Dhoni
MS Dhoni

ந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் விளையாடி மகிழும் ஒரு பொழுது போக்கும் கூட என்று இதைச் சொல்லலாம். இந்தியாவில் தேசப்பற்றை வெளிக்காட்டும் விளையாட்டாகக் கருதப்படுகிறது கிரிக்கெட். உலகக் கோப்பையில் கிரிக்கெட் வீரர்கள் ஜெயித்தால் பட்டாசு வெடிப்பதும், தோற்றால் திட்டித் தீர்ப்பதுமாக அதீத அன்பை காட்டும் ரசிகர்களும் இந்த விளையாட்டுக்கு உண்டு. அத்தகைய கிரிக்கெட் விளையாட்டில் ஜெர்சி நம்பர் 7 யாருடையது என்று தெரியுமா?

கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவோடு வந்த பல ஆயிரம் பேர்களில் அவரும் ஒருவர். ஒரு கிரிக்கெட் அணிக்கு மொத்தம் 11 பேர் தேவைப்படும். அப்படி விளையாட வந்த அவனை பத்தோடு பதிணொன்று என்று அனைவரும் நினைத்தார்கள். ராஞ்சியில் இருந்து வந்து முதல் மேட்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். வாய்ப்பு ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்று சொல்வதை பொய் என நிரூபிக்க தனது கடும் உழைப்பால் உயர்ந்து பல மைல் கற்களை அடைந்த அந்த ஜெர்சி நம்பர் 7 வேறு யாருமேயில்லை, ‘தல’ என்று அனைவராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.தோனிதான்.

இன்று தாரக மந்திரமாக பல ரசிகர்களின் உதட்டில் உச்சரிக்கப்படும் தோனி என்ற பெயர் அவர் முதல் சிக்ஸ் அடிக்கும் வரையில் ஒருவராலும் கவனிக்கப்படாமல் தான் இருந்தார் என்பதே உண்மை.

‘Work hard in silence let your success make the noise’ என்று ஒரு பிரபல பழமொழி உண்டு. இங்க 'ஜெயிச்சிடுவேன்னு சொன்னா உலகம் நம்பாது. ஆனால், ஜெயிச்சவன் சொன்னா நம்பும்.' அதுதான் வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்கும் மரியாதை.

‘இன்றைக்கு உங்களை யாரும் கவனிக்கவில்லை, இன்றைக்கு உங்களை யாரும் கொண்டாடவில்லை’ என்று வருத்தப்பட வேண்டாம். தொடர்ந்து உங்களுடைய உழைப்பை கொடுங்கள், தொடர்ந்து உங்கள் இலக்கை நோக்கி ஓடுங்கள், தொடர்ந்து உங்கள் பெஸ்ட்டை கொடுத்துக்கிட்டேயிருங்க. நாம செய்யற எல்லா காரியங்களும் வெற்றியிலேயே முடியணும்ங்குறது இல்லை. சில நேரங்களில் வெற்றி கிடைக்கலாம், சில நேரங்களில் தோல்வி கிடைக்கலாம். ஆனால், இறுதியாக நாம் போட்ட உழைப்பு, வியர்வைக்கான பலன் நிச்சயம் நம்மை வந்து சேரும். அப்போது உங்களை ஏளனம் செய்தவர்கள் உங்களை அன்னார்ந்து பார்க்கும் நிலைமை வரும். அந்த நாள் வரும் வரை விடாமுயற்சியுடன் போராடியாக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தாமரை இலைத் தண்ணீரும், பஞ்சு திரியும்!
MS Dhoni

நீங்க உங்க வாழ்க்கையில் ஒரு விஷயத்தை நம்பி உழைச்சிக்கிட்டிருக்கீங்களா? கீப் கோயிங். அந்த பாசிட்டிவிட்டியும், விடாமுயற்சியும் உங்களுக்கான வெற்றியை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும்.

உண்மையான வெற்றி எது தெரியுமா? இருட்டில் கஷ்டப்பட்டிருக்கும் போது உதவிக்கு யாரும் வந்திருக்க மாட்டார்கள். ஆனால், வெற்றி பெற்று வெளிச்சத்திற்கு வந்த பின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் பட்ட கஷ்டங்களை Autobiography புத்தகமாக வெளியிடும் போது படிக்க ஆயிரம் பேர் முட்டிமோதிக்கொண்டு வருவார்கள். அதுவே இத்தனை காலம் கடினமாக உழைத்ததற்கு கிடைக்கும் வெற்றியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com