நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார் தெரியுமா?

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர்
நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர்

ந்த ஒரு செயலுக்கும் அங்கீகாரம் என்பது மிக அவசியமாகிறது. சாதாரண மனிதர்கள் சாதனை மனிதர்களாக மாறும்போது அவர்களின் சாதனைகளுக்கு உலகம் தலை வணங்கி  விருதுகள், பரிசுகள், பாராட்டுகள் வழங்கி கௌரவிக்கிறது. அந்த வகையில் நோபல் பரிசு என்பது உலகின் மிகச்சிறந்த விருதாகக் கருதப்படுகிறது.

முதல் நோபல் பரிசு 1901 ஆம் ஆண்டு இயற்பியல், வேதியியல் ,மருத்துவம், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
பின் மேலும் பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

எந்த  விஷயத்திலும் முதல் என்பது வெகு மதிப்பு மிக்கதாக ஆகிறது. இப்படி நோபல் பரிசு பெற்ற இந்தியர்களில் முதல் நபராகப் பெருமை பெற்று விளங்குபவர் என்றென்றும் நாம் நினைவு கூறத் தக்க வகையில் நமது தேசத்தின் தேசிய கீத பாடலான "ஜன கன மன" இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் ஆவார் .

இவர் 1913 ல் அவரது கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலி எனும் நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். ரவீந்திரநாத் தாகூர் 1861 ம் ஆண்டு வங்காளத்தில் ஒரு மதப் பிரிவாக இருந்த பிரம்ம சமாஜத்தின் தலைவரான தேவேந்திரநாத் தாகூர் என்பவரின் இளைய மகனாகப் பிறந்தார்.

வீட்டில் கல்வி கற்றாலும் பதினேழாவது வயதில் முறையான பள்ளிப் படிப்பிற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார் . அங்கு அவர் தனது படிப்பை முடிக்கவில்லை. எனினும் சமூகத்தோடு இயைந்து பெற்ற அனுபவங்கள் மூலமாகவே இவர்  சிறந்த தத்துவவாதியாக விளங்கினார்.

மனிதர்களின் இடத்தில் நெருக்கமாகப் பழகி அவர்களின் உணர்வுகளைப் புரிந்து இலக்கியங்களை வடித்தார். இவர் ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல எழுத்தாளர், நாடக ஆசிரியர், இசையமைப்பாளர், சிறந்த ஓவியர், தத்துவவாதி மற்றும் சமூக  சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். இந்திய இலக்கியம், இசை மற்றும் இந்தியக் கலைகளில்  குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளித்துள்ளார்.

சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் மூலம் இவர் மேற்கத்திய நாடுகளில் வேகமாக அறியப்பட்டார். உலகிற்கு அவர் இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தின் அடையாளமாகவே மாறினார் என்றால் மிகையல்ல. தாகூர் 1915 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மாவீரர் பட்டம் பெற்றார். ஆனால் சில ஆண்டுகளில் அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த பட்டத்தை தூக்கி எறிந்தார். இவரது தேச பக்திக்கு இந்நிகழ்வு ஒரு சான்று.

இவரின் இலக்கிய, சமூக பங்களிப்புக்காகச் சர்வதேச அளவில் விருதுகள் இவரைத் தேடி வந்தது. அதில் மிகச் சிறப்பு வாய்ந்த விருதுதான் நோபல் பரிசு இவர் கூறிய சில பிரபலமான மேற்கோள்கள் பலரின் வெற்றிக்குக் காரணமாக உள்ளது.

தாகூர் புகழ்பெற்ற மேற்கொள்கள்

"தண்ணீரை பார்த்துக் கொண்டு மட்டும் கடலைக் கடக்க முடியாது"

"உங்கள் வாழ்க்கையில் சூரியன் மறைந்து விட்டதால் நீங்கள் அழுகிறீர்கள் என்றால் உங்கள் கண்ணீர் நட்சத்திரங்களை பார்ப்பதை தடுக்கும்"

"மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம்"

"ஆழமாக கனவு காணுங்கள் ஏனென்றால் ஒவ்வொரு கனவும் இலக்குக்கு முந்தியுள்ளது"

"நாம் தாழ்மையில் சிறந்தவர்களாக இருக்கும் போது பெரியவர்களை நெருங்குகிறோம்"

தொகுப்பு:சேலம் சுபா  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com