Motivation article
Motivation articleImage credit - pixabay

துயரங்களை ஏற்க வேண்டாம். ஒப்புக் கொள்ளலாம்!

Published on

வாழ்க்கையில் கஷ்டமே வரக்கூடாது. எல்லாம் சந்தோஷமாக நடக்க வேண்டும் என்பது குழந்தைத் தனமான உளறல். போக்குவரத்து நெரிசலானதும் கோபப்பட்டு புலம்புவதால் என்ன பயன்?. இதுதான் இப்போது நிதர்சனமான நிலை என்று அமைதியாகக் கஷ்டத்தை ஒப்புக் கொள்வது சந்தோஷம். நாம் கஷ்டத்தை நிராகரிக்க போராடுகிறோம். சினிமா மாதிரி சட்டென்றுமாற வேண்டும் என பார்க்கிறோம். அப்படி நடக்காவிட்டால் துயரம் அடைகிறோம்.

ஆங்கிலத்தில் Agree, Accept என இரு வார்த்தைகள் உள்ளன. போக்கு வரத்து நெரிசலை மாற்றவே முடியாது என ஏற்றுக் கொண்டால் உங்கள் வலி குறையும். இது பொய்யாகி விடாதா என்று போராடுவதால் களைப்படைகிறோம். துயரங்களை ஏற்காதீர்கள். ஆனால் ஒப்புக் கொள்ளுங்கள்.

ஒரு பெரு வணிகர் நஷ்டம் ஏற்பட்டதால் காரை விற்று  ஆட்டோவில் சென்றார். மகன் அது கௌரவக் குறைவு என்றான். அதற்கு அவர் " நமக்கு கார் வச்சுக்க வசதி இல்லை. எதுக்கு ஜம்பம். பஸ்ல போனா  எனக்கு சங்கடம். வசதி வந்ததும் கார் வாங்குவேன். நீ உன் வேலையைப் பார்" என்றாராம். அந்த மாதிரி மனிதர்கள் நிஜத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.

வறுமை, அறியாமை, உடற்பருமன், அகங்காரம் இவையெல்லாம் மனித குலத்தை ஆட்.டிப்படைக்கும் ஒரே காரணம், அவை இருப்பதை ஒப்புக் கொள்ள மறுப்பதுதான். ஒரு முறை பெர்னார்ட் ஷாவிடம் ஒருவர் "நாகரீகம் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் " என கேட்டார்.

அவர்  அதற்கு " உண்மையில் இது நல்ல விஷயம்தான். உலகத்தில் யாராவது அதை முயற்சித்துப் பார்ப்பது நல்லது என நினைக்கிறேன்‌" என்றாராம். உலகில் பலரிடம் நாகரிகம் இல்லை என்பதை வெளிப்படுத்திய ஷா அது தன்னிடமும் இல்லை என  ஒப்புக் கொள்கிறார். அதுவே நாகரிகத்தின் தொடக்கம்.

கொஞ்சம்  நிறம் குறைந்தவர்கள், குள்ளமானவர்கள் தங்கள் யதார்த்த நிலையை மறைப்பதற்காக அவஸ்தைபடுவார்கள். ஆனால் அதுதான் யதார்த்தம் என ஏற்றுக்கொண்டுவிட்டவர்களோ நிம்மதியாய் இருப்பார்கள். சில மனிதர்கள் வெயில் காலத்தில் ச்சே என்ன வெயில் என்று வெயிலை திட்டுகிறார்கள். மழைக்காலத்தில் என்ன மழை என சலித்துக் கொள்கிறார்கள்.  பனிக்காலத்தில் பணியைப் பற்றி சலிக்கிறார்கள். இதுதான் உலகின் இயற்கை என் ஒப்புக் கொண்டவர்கள் வெயிலுக்கு விசிறியும், மழைக்கும் குடையும், பனிக்கு கதகதப்பான உடைகளை உண்டு பண்ணிக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு கஷ்டங்கள் தேவை!

logo
Kalki Online
kalkionline.com