உங்கள் மனசாட்சியை புறக்கணிக்காதீர்கள்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

னதிற்கு ஒரு காவல்காரன் உண்டு. தவறான எண்ணம் எதையும் அவன் எளிதில் உள்ளே அனுமதிப்பதில்லை. அந்த காவல்காரனுக்கு பெயர்தான் மனசாட்சி. சில சமயங்களில் நாம்தான் அந்த காவல்காரனை அதட்டி அவனை பேசாமல் இருக்க சொல்லிவிட்டு தீய எண்ணங்களை நம்முள்ளே அனுமதித்து விடுகிறோம். அந்த எண்ணங்கள் நம்மை தீயவழியில் நடத்தி நாசமாக்கிய பிறகுதான் நமது காவல்காரன் அன்றே நமக்கு நல்லது செய்யத்தானே சரியாக கடமை ஆற்றினான். நாம்தானே அவனை தடுத்துவிட்டோம் என்று எண்ணி எண்ணி மனம் குமுறுகிறோம்.

மகாத்மா காந்தி சொன்னார்:" நான் என் மனசாட்சியை தெய்வத்தின் குரலாக மதிக்கிறேன். அதனால் அதற்கு கட்டுப்பட்டு என் செயல்களில் ஈடுபடுகிறேன்!." அவர் வாழ்க்கை இன்னமும் எல்லோருக்கும் பாடமாக வழிகாட்டியாக இருப்பதற்கு காரணம், அவர் தன் மனசாட்சிபடி வாழ்ந்த நேரிய வாழ்க்கை முறையாகும். ஆனால் மனசாட்சிபடி நடப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

ஆசை ,விருப்பம், நியாயமற்ற இச்சை இவை எல்லாம் சேர்ந்து மனசாட்சியின் வாயை பொத்தி அதைப் பேசவிடாமல் செய்துவிடும். பல நாள் திருடர்கள் ஒரு நாள் அகப்பட்டு சிறையிலே கம்பி எண்ணிக் கொண்டிருப்பதற்கு காரணம் அவர்கள் தங்கள் மனசாட்சியின் குரலை கேட்க மறுத்தவர்களே.

தவறு என்று தெரிந்தே தவறு செய்யும் ஒவ்வொரு மனிதனும் தன் மனசாட்சியை மதியாமல் நடப்பவனே. மனசாட்சியின் எச்சரிக்கை குரலுக்கு எதிரான வெற்றி எதுவும் நிலையானது அல்ல. மேலும் இத்தகைய முறை மூலம் செல்வம் சேர்த்தவர்களே, வேறு வகை பயனடைந்தவர்களே. பெரும்பாலும் மறைந்து வாழ்கிறார்கள். பிறருக்கு பயந்து வாழ்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
அதிசயம் ஆனால் உண்மை... இதுவும் பெரிய சாதனை!
motivation article

எனவே நமது எண்ணங்களின் மீது நாம் எப்போதும் ஒரு கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடு நமது வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகிறது. குடும்ப வாழ்க்கை, உடல்நலம், தொழில் முயற்சி, ஓய்வு கால மன அமைதி ஆகியவை அனைத்துக்கும் அடித்தளம் இந்த கட்டுப்பாடுதான்.

இறை நம்பிக்கை உள்ளவன் பக்தியினாலும் மற்றவர்கள் நற்பெயருடன் வாழ்ந்த முன்னோர்கள் பெரியோர்களை முன்மாதிரியாக கொண்டும் நல்வழியில் வாழ்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com