எவரையும் தோற்றத்தை வைத்து மதிப்பிடாதீர்கள்!

Don't judge anyone by their looks!
Motivational articlesImage credit - pixabay
Published on

யாரையும், எவரையும் தோற்றத்தை வைத்து மதிப்பிடாதீர்கள்.

ஒரு மனிதரிடம் ஏராளமான விஷயங்கள் ஒளிந்து இருக்கலாம் அவற்றை தெரிந்து கொள்ளாமல் அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவது தவறு.

இவர் நல்லவர், இவர் மோசமானவர் இவரை நம்பலாம் என்று ஒருவரைப் பற்றி ஏதாவது ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அவரைப் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியும் என்று யோசியுங்கள்.

நம்மை இப்படி யாராவது நம் தோற்றத்தை உடையையும் பார்த்து மதிப்பிட்டால் நம் மனம் எப்படி வந்தது என்று சுய ஆய்வு விமர்சனம் செய்து கொள்ளுங்கள்.

ஒருவரைப் பற்றி முடிவெடுப்பதற்கு பதிலாக அவரை முழுமையாக புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் அப்படி புரிந்து கொண்ட பிறகு அவரின் நிறை குறைகளோடு அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு மனிதரை மதிப்பிடுவதற்கும், அவரின் செயல்களை மதிப்பிடுவதற்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள், ஒரு நல்ல மனிதர் கூட மோசமான செயல்களை செய்யலாம். கெட்டவரிடம் கூட சில நல்ல பண்புகள் இருக்கலாம்.

ஒருவரைப் பற்றி தவறாக மதிப்பிடும்போது அவருடனான உறவு எப்படி பாதிக்கப்படும் என்பதை கவனியுங்கள்.

ஒரு பிரபல விஞ்ஞானி தனியாக காரில் பயணம் செய்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அந்தப் பகுதியில் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை.

பக்கத்திலும் கடைகளும் இல்லை. வேறு வழியில்லாமல் தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்.

அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னிஎடுக்கும்போது கால் தடுக்கி கீழே விழ, கையில் இருந்த போல்ட்டுகள் அனைத்தும் உருண்டு பக்கத்தில் இருந்த சாக்கடையில் விழுந்தன.

என்ன செய்வது? என்று  யோசித்தபோது, கிழிந்த ஆடையுடன் ஒரு வழிப்போக்கன் அந்த வழியே வந்தான்.

அவரிடம், "ஐயா! என்ன கார் நின்றுவிட்டதே? என்ன ஆயிற்று? எனக் கேட்டேன்.

அந்த விஞ்ஞானி, மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன்தான் சரியான ஆள் என்றெண்ணி, அவனிடம், "இந்தச் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து தருவியா? எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.

அதற்கு வழிப்போக்கன், "இதுதான் பிரச்னையா? நான் எடுத்துத் தர  எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை" ஆனால் அதை விட சுலபமான வழி ஒன்று உள்ளது, என்றான்.

இதையும் படியுங்கள்:
'வாழ்வில் கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது' ஏன் தெரியுமா?
Don't judge anyone by their looks!

என்ன? என்றார் விஞ்ஞானி.

"மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி தயார் செய்து, பின் வண்டியை ஓட்டிச் சென்று அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டுங்கள்" என்றான் வழிப்போக்கன்.

விஞ்ஞானிக்கு ஆச்சரியமாகவும், தூக்கிவாரிப்போட்டது.

நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும், இந்த சுலபமான வழி தெரியாமல் போனதே, இவரைப்போய் 'தோற்றத்தை  வைத்து குறைத்து மதிப்பிட்டு விட்டோமே".... என தலை குளித்தார் விஞ்ஞானி.

இதிலிருந்து யாரையும், எவரையும் தோற்றத்தை, பேச்சை வைத்து மதிப்பிடாதீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com