Develop your skills
yamaguchi karate master

வெற்றிகொள்ள அடுத்தவரைத் தாழ்த்த மூயற்சிக்காதே. உன் திறமையை வளர்த்துக்கொள்!

Published on

மகுசி கராத்தேயில் சிறந்த வீரர்.  பல வெற்றிகளைக் குவித்தவர். அவர் ஒருமுறை போட்டியில் குருவையே எதிர்கொள்ள வேண்டி இருந்தது.  தனக்குத் தெரிந்த அனைத்து முயற்சிகளில் ஈடுபட்டும் குருவை வீழ்த்த முடியவில்லை. பொறுமை இழந்த அவர் தன் குருவிடம் தன் தோல்விக்கான காரணத்தைக் கேட்டார்.  அவர் "நீ என்னை எப்படி பார்த்தாய். மகனே என கேட்க அவர், போட்டியென்று வந்துவிட்டால்  குரு, சிஷ்யன் எல்லாம் கிடையாது. உங்கள் பலவீனத்தை கண்டுபிடித்து  உங்களை வீழ்த்த நினைத்தேன். ஆனால் முடியவில்லையே குருவே" என்றார் யம‌குசி. 

குரு தரையில் ஒரு கோடு போட்டார். இதை சிறிதாக்க நீ என்ன செய்வாய்  என்றதும் யமகுசி கோட்டின் ஒரு பகுதியை அழித்துக் காட்டினார்.  இதேகோடு அழிக்க முடியாதபடி பாறையில் இருந்தால் என்ன செய்வாய் அவர் கேட்க, பதில் தெரியாமல் விழித்தார் யமகுசி. குரு அந்த கோட்டின் பக்கத்தில் அதைவிட பெரிய கோடு வரைந்தார். இப்போது முதல் கோடு சிறியதாகிவிட்டது அல்லவா.

யாரையாவது வெற்றிகொள்ள வேண்டுமென்றால் அவனைத் தாழ்த்த மூயற்சி செய்யாதே.  அவனை விட அதிகமாக உன் திறமையை வளர்த்துக்கொள். உனக்காக விளையாடு. அவனுக்கு எதிராக விளையாதே என்றார். எப்போதும் உங்கள் போட்டியாளரரை எதிரியாக பார்த்தால் உங்கள் நிம்மதி தொலைந்து போகும். தெருவில் நடந்து போகும்போது ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து முட்டாள் என்று சொல்லி போய்விடுகிறார்.

உங்கள் ரத்தம் கொதிக்கும். சிறியவராக அவர் இருந்தால் சண்டைக்குப் போவீர்கள். வலியவராக இருந்தால்? காலையில் எழுந்து ஜன்னலைத் திறக்கும்போது அவர் உங்களையே பார்த்துக் கொண்டு நிற்கிறார். இப்போது அவர் எதுவும் செய்யவேண்டாம். அவரைப் பார்த்தாலே படபடப்பு வரும் அல்லவா?. அவர் வலியவரோ, எளியவரோ சொன்னபடி உங்களை முட்டாளாக்கிக்  காட்டிவிட்டார் அல்லவா. யாரையாவது நீங்கள் எதிரி என்று நினைத்தால் அவர் ஆற்றல் மிகுந்தவராக ஆகிவிடுவதை கவனித்தீர்களா?.

இதையும் படியுங்கள்:
மனவாசலைத் திறக்கும் 5 வழிகள்!
Develop your skills

நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிய  வரவில்லை. ஒரு வேளை அழித்தால் இன்னொருவர் வருவார்.  உங்கள் ஆற்றலின் பெரும்பகுதி ஆக்கபூர்வமாகப் பயன்படாமல்  அழிப்பதிலேயே வீணாகிவிடும். 

அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள். பொறாமைப்படும், உச்சத்துக்குஇடம் கொடுத்தால்  உங்கள் திறமைதான் மழுங்கிப் போகும். எனவே நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காக இருக்கட்டும்.  இன்னொருத்தனுக்கு எதிராக இருக்க வேண்டாம். அப்போதுதான் சிகரத்தை சென்றடையும் பயணம் ஆனந்தமாக இருக்கும். முழுத் திறமைமும் வெளிப்படுத்தும் விதமாக செயல்படுவதில்தான் உண்மையான.  வெற்றி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com