இவர்களுடன் வாதிட்டு நேரத்தை விரயம் செய்யாதீர்கள்!

Motivational story
Motivational story
Published on

ம்முடைய வாழ்க்கையில் நாம் வெற்றியை நோக்கி பயணிக்கும் போது தேவையில்லாத தடைகளையும், வீண் வாதங்களையும் சந்திக்க நேரிடும். அவ்வாறு உங்கள் வாழ்க்கையில் வீண் வாதம் செய்பவர்களை சந்தித்தால், அவர்களிடத்தில் நேர விரயம் செய்வதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அவர்களிடம் வாதிடுவது வீண் நேர விரயமாகும். இதைப்பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒரு அழகான காட்டில் வாழ்ந்து வந்த ஒரு குரங்கு நிலத்தில் உள்ள புற்கள் எல்லாம் சிவப்பு நிறத்தில்தான் இருக்கிறது என்று எல்லா விலங்குகளிடமும் சொல்லிக் கொண்டிருந்தது.

இதைப்பற்றி யாருமே பெரிதாக கண்டுக்கொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர் ஒரேயொரு புலியை தவிர. அங்கிருந்த புலி மட்டும் குரங்கு சொல்வதை ஏற்றுக் கொள்ளவேயில்லை. புற்கள் பச்சை நிறத்தில்தான் இருக்கிறது என்று புலி சொல்ல பதிலுக்கு குரங்கு புற்கள் சிவப்பு நிறத்தில்தான் இருக்கிறது என்று சொல்ல ஒருகட்டத்தில் இந்த வாதம் வலுத்துக் கொண்டேபோனது.

இப்போது காட்டுடைய ராஜாவான சிங்கத்திடம் இதற்கு தீர்வு கேட்கலாம் என்று இருவரும் முடிவு செய்து சிங்கத்திடம் செல்கின்றனர். அவர்கள் இருவருமே நடந்த அனைத்தையும் காட்டுடைய ராஜாவான சிங்கத்திடம் சொல்கிறார்கள்.

இதைக்கேட்ட சிங்கம் அந்த புலியைப் பார்த்து, ‘நீ ஐந்து வருடம் இந்த காட்டில் உள்ள எந்த விலங்குகளிடமும் பேசக்கூடாது’ என்று தண்டனைக் கொடுக்கிறார். இதைப் பார்த்த குரங்கு, 'தான் சொன்னது தான் சரி' என்று சந்தோஷமாக அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டது.

இப்போது புலி சிங்கத்தைப் பார்த்து, ‘நீங்கள் கொடுத்த தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், புல் பச்சை நிறத்தில் தான் இருக்கும் என்று உங்களுக்கும் தெரியும். பிறகு ஏன் எனக்கு இந்த தண்டனையை கொடுத்தீர்கள்?’ என்று புலி கேட்டது.

இதையும் படியுங்கள்:
'வாழ்வில் கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது' ஏன் தெரியுமா?
Motivational story

அதற்கு சிங்கம் என்ன சொன்னது தெரியுமா? ‘இப்போது புல் பச்சையா அல்லது சிவப்பா? என்பது முக்கியமில்லை. உன்னை மாதிரி ஒரு தைரியசாலி அந்த முட்டாள் குரங்கிடம் வாதிட்டு நேரத்தை வீணடித்தது மட்டுமில்லாமல் இங்கே வந்து என்னுடைய நேரத்தையும் வீணடித்திருக்கிறாய். அதற்காகத்தான் இந்த தண்டனை!’ என்று கூறியதாம்.

இந்தக் கதையில் வந்ததுப் போலதான் நம் வாழ்க்கையிலும் சில பேர், 'நான் சொல்வதுதான் சரி' என்று கூறிக்கொண்டு வீண் வாதம் செய்வார்கள். அவர்களிடமெல்லாம் எது சரி என்பதை விளக்கி நம் நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. இதைப் புரிந்துக்கொண்டு நடந்தால், வாழ்க்கையில் முன்னேறலாம். முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com