பிறர் உங்களைப் பார்த்தவுடனேயே மதிப்பதற்கான தந்திரங்கள்! 

Effective Strategies to Earn Anyone's Respect
Effective Strategies to Earn Anyone's Respect

மரியாதை என்பது ஆரோக்கியமான உறவு மற்றும் பழக்கவழக்கங்களுக்கு அடிப்படை அம்சமாகும். மற்றவர் நம்மை எப்படி உணர்கிறார்கள், நம்மிடம் எப்படி பழகுகிறார்கள் என்பதைப் பொறுத்தே மரியாதை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒருவரின் மரியாதையைப் பெறுவதற்கு சில காலம் தேவைப்பட்டாலும், சில வழிமுறைகளைப் பின்பற்றி குறுகிய காலத்தில் உடனடி மரியாதையை நாம் பெற முடியும். அதற்கான உத்திகள் சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம். 

பிறர் சொல்வதைக் கேளுங்கள்:  ஒருவரிடம் உடனடியாக மரியாதையைப் பெறுவதற்கு சிறந்த வழிகளில் ஒன்று, அவர் சொல்வதை விருப்பத்துடன் கேட்பதாகும். யாரோ ஒருவரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அவர்கள் மீது முழு கவனத்தையும் செலுத்துங்கள். அவர்களின் கண்களைப் பார்த்து பேசுங்கள். நீங்கள் அவர்கள் சொல்வதை முழுதாக கவனிக்கிறீர்கள் என்பதைப் புரிய வைக்க தலையசைக்கவும். தேவையில்லாமல் குறுக்கிட்டு மறிப்பதைத் தவிர்க்கவும். அவர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களுக்கு உண்மையான ஆர்வத்தைக் காட்டுவதன் மூலம் நீங்கள் அவர்களின் விருப்பமான நபராக மாறுவீர்கள். 

உண்மையாக இருங்கள்: மரியாதையைப் பெறுவதற்கு நம்பகத்தன்மை முக்கியமானது. மக்கள் நேர்மையை என்றுமே பாராட்டுவார்கள். நீங்கள் இல்லாததை இருப்பது போல காட்டி பிறரை கவரை முயற்சிப்பதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக நீங்கள் எப்போதும் போல இயல்பாக இருங்கள். அது உங்களின் ஆளுமையை பிறருக்கு பிரகாசித்து வெளிப்படுத்தும். நீங்கள் உண்மையானவராக இருக்கும்போது மக்கள் உங்களை இயல்பாகவே மதிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

பிறரை புரிந்து கொள்ளுங்கள்: பிறரது இடத்தில் உங்களை வைத்து அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள முடியும். நீங்கள் பிறரை புரிந்து கொள்வதால் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் கவலைகள் பற்றி நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்துவதன் மூலம், நீங்கள் நம்பிக்கை மற்றும் மரியாதைக்குரிய நபராக மாறுவீர்கள். 

நேர்மையாக இருக்கவும்: நேர்மையாக இருப்பவர்களுக்கு என்றுமே சிறப்புகள் வந்து சேரும். நேர்மை இல்லாதவர்கள் வாழ்வில் முன்னேறுவது போல தோன்றினாலும், நேர்மையானவர்களுக்கே இவ்வுலகில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். நேர்மை உங்களை தலைநிமிர்ந்து நடக்கச் செய்யும். எல்லா சூழ்நிலைகளையும் கவலையின்றி கடந்து செல்ல உதவும். மற்றவர்கள் உங்களை நேர்மையானவராக பார்க்கும்போது மரியாதை இயல்பாகவே ஏற்பட ஆரம்பிக்கும். 

மற்றவர்களுக்கு மரியாதை கொடுங்கள்: மரியாதை என்பது இருவழிப்பாதை. நீங்கள் மற்றவர்களுக்கு அதை கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு திரும்பக் கிடைக்கும். திமிராக அல்லது மூர்க்கத்தனமாக பிறரிடம் பேசுவதைத் தவிர்க்கவும். எப்போதும் பிறரிடம் கனிவாகவும் மரியாதையுடனும் பேசுங்கள். மற்றவர்களுக்கு மரியாதை காட்டுவதன் மூலம், பிறர் எந்த பாரபட்சமும் பார்க்காமல் உங்களையும் மதிப்பார்கள். 

இந்த வழிமுறைகளை பின்பற்றி உங்களைப் பிறர் உடனடியாக மதிக்கச் செய்ய முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com