Elon Musk
Elon Musk

Elon Musk: பிறரை கவனி, ஆனால் வித்தியாசமாக செயல்படு!

Published on

இதுவரைக்கும் எத்தனை பேர் உங்ககிட்ட “நீ எதுல பெஸ்டா பெர்ஃபார்ம் பண்ணுவியோ அந்த ஒரு விஷயத்துல மட்டும் கவனம் செலுத்துன்னு” சொல்லி இருக்காங்க? நமக்கு சொல்லப்படும் பெரும்பாலான அறிவுரைகள் இப்படித்தான் இருக்கும். ஆனா இந்த ஒரு விஷயத்தை ஒடச்சி ஒரே நேரத்துல பல துறைகள்ல சாதிச்சி காட்டினவர்தான் நம்ம எலான் மஸ்க்

ஒரு விஷயத்துல மட்டுமே கவனம் செலுத்தினா கண்டிப்பா சாதிக்கலாம் அப்படிங்கற விதிய நான் ஏத்துக்குறேன். இந்த விதி பலமுறை பல பேருக்கு ஒர்க் அவுட் ஆகி, பலரால ஏத்துக்கொள்ளப்பட்டது தான். ஆனா ஒரு நாள் எலான் மஸ்க் அப்படின்னு ஒருத்தன் வந்து, ஒரே சமயத்துல பல விஷயங்கள்ல கவனம் செலுத்தி, பழைய விதிகள் எல்லாத்தையும் ஒடச்சு வெற்றியடைஞ்சு காட்டுனான் தெரியுமா? அப்ப புரிஞ்சுது மக்களுக்கு, சரியா பிளான் பண்ணி மல்டிடாஸ்கிங் பண்ணாலும் சாதிக்கலாம்னு. 

இதையும் படியுங்கள்:
Tesla Cybertruck விலை? வாக்கு தவறிய எலான் மஸ்க்!
Elon Musk

So, இது மூலமா நீங்களும் மல்டிடாஸ்கிங் பண்ணுங்க வாழ்க்கையில சாதிக்கலாம்னு நான் சொல்லல. ஒரு விஷயத்துல மும்முறமா இறங்கி வேலை செஞ்சிக்கிட்டே பலத்துறை சார்ந்த அறிவ வளர்த்து வச்சுக்கோங்க அப்படின்னுதான் சொல்றேன். ஏன்னா, பல விஷயங்கள் பத்தின புரிதல் நமக்கு இருந்தாதான் அத எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்தலாம்னு நம்மளால யோசிக்க முடியும். 

உதாரணத்துக்கு எலான் மஸ்க் சோலார் பவர் பிளான்ட் நிறுவுறாருன்னா, அத பயன்படுத்தி அவரோட டெஸ்லா கார்கள கனெக்ட் பண்ண முடியும். அதாவது சார்ஜ் போட்டுக்கலாம். அதேபோல AI தொழில்நுட்பத்தில் முதலீடு பண்றாருன்னா, அத பயன்படுத்தி தன்னோட கார்கள ஆட்டோமேட்டிக்கா ஓட வைக்க முடியும். அதே மாதிரிதான் Neuralink. மனித மூளையில சிப் பொருத்தும் ஆராய்ச்சி. இது மட்டும் சக்சஸ் ஆகிட்டா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமா இயங்கும் டெஸ்லா கார்கள, நேரடியா கார் டிரைவரோட மூளையோட கனெக்ட் செய்ய முடியும். இப்படி நடந்தா எப்படி இருக்கும்னு ஒருமுறை யோசிச்சு பாருங்க. 

இதனாலதான் எலான் மஸ்க் என்ன சொல்றாருன்னா,

எலான் மஸ்க்
உங்கள சுத்தி இருக்குறவங்கள நல்லா கவனிங்க, ஆனா அவங்க செய்யறதுக்கு எதிர்மாறான விஷயங்கள செய்யுங்க. மாத்தி யோசிங்க. அது உங்கள முற்றிலும் புதுமையான விஷயங்கள நோக்கி கொண்டு போகும்.

எலான் மஸ்க் மாதிரி வித்தியாசமா சிந்திச்சு, வித்தியாசமா செயல்பட்டா, வித்தியாசமான ரிசல்ட் நிச்சயம் கிடைக்கும். ஜஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க.

logo
Kalki Online
kalkionline.com