புத்தகங்களைப் படிப்பதற்கான எலான் மஸ்கின் 5 யுக்திகள்! 

Elon Musk's 5 Tactics for Reading Books!
Elon Musk's 5 Tactics for Reading Books!

டெஸ்லா, X மற்றும் ஸ்பேஸ் X போன்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், அனைத்தையும் புத்தகங்கள் வாயிலாக படித்து தெரிந்துகொள்ளும் திறனுக்காக அறியப்பட்டவர். ஒரு அதிதீவிர புத்தக வாசிப்பாளரான எலான் மஸ்க், தனது அறிவை வளர்த்துக்கொண்டு மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறுவதற்கு புத்தகங்களின் ஆற்றலை அதிகம் நம்புகிறார். புத்தகங்களை வாசிப்பதற்கு எலான் மஸ்க் தனித்துவமான சில யுக்திகளைப் பின்பற்றுகிறார். அவை என்னவென்று இப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம். 

  1. தரத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்: ஆழமான மதிப்புமிக்க அறிவை வழங்கும் உயர்தர புத்தகங்களைப் படிக்க வேண்டும் என எலான் மஸ்கட் வலியுறுத்துகிறார். அதிகப்படியான புத்தகங்களை படிப்பதை விட, உங்களுக்கு தனித்துவமான அறிவுத்திறனை வழங்கும், சிக்கலான விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும் புத்தகங்களை தேர்வு செய்து படிப்பதற்கு அவர் ஆர்வம் காட்டுகிறார். இதன் மூலமாக அளவைவிட, தரத்திற்கு அவர் முன்னுரிமை அளித்து படிப்பது தெரிய வருகிறது. 

  2. எல்லாவிதமான புத்தகங்களையும் படிக்கவும்: உலகில் பலருக்கு குறிப்பிட்ட  ஒரு விஷயத்தில் மட்டுமே ஆர்வம் இருக்கும். ஆனால் எலான் மஸ்க் பல்வேறு விஷயங்களில் ஆர்வங்களைக் கொண்டுள்ளார். மேலும் அவற்றை தனது வாசிப்பின் மூலம் அறிந்துகொள்ள முடியும் என நம்புகிறார். தன்னை ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளாமல், அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, தத்துவம் போன்ற அனைத்து புத்தகங்களையும் படிக்கிறார். இந்த அணுகுமுறை அவரை பல்துறை வித்தகராக மாற்றுகிறது. 

  3. வித்தியாசமாக சிந்திக்கவும்: எலான் மஸ்க் என்றுமே வித்தியாசமாக சிந்திக்கக் கூடியவர். அவரது சொந்த சிந்த சிந்தனையை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். பிறர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்ளாமல், தன்னுடைய உண்மையான கருத்துக்கள் என்ன என்பதை புரிந்துகொள்ள முயல்கிறார். எனவே வெவ்வேறு பின்னணிகள், கலாச்சாரங்கள் மற்றும் கண்ணோட்டங்களைக் கொண்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை அவர் தீவிரமாக தேடிப் படிக்கிறார். 

  4. குறிப்புகளை எடுக்கவும்: புத்தகங்களை படிப்பது ஒரு கலை என்றால், அவற்றிலிருந்து குறிப்புகளை எடுப்பது மற்றொரு கலை. அவர் புத்தகங்களை வெறுமனே படித்து அப்படியே விட்டுவிடாமல், அவர் படிக்கும் விஷயங்களை குறிப்பெடுத்து சேமிக்கிறார். புத்தகங்கள் படிக்கும் போது அவருக்கு ஏற்படும் எண்ணங்களையும் யோசனைகளையும் எழுதி வைக்கிறார். இந்த நடைமுறை அவருக்கு புத்தகங்களை ஆழமாக புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் தான் படித்ததை சிந்தித்துப் பார்க்கவும் அவர் நேரம் ஒதுக்குகிறார். 

  5. அறிவைப் பயன்படுத்துங்கள்: வாசிப்பு என்பது எலான் மஸ்கிற்கு அறிவை வளர்த்துக்கொள்ளும் ஒரு பயிற்சி மட்டுமல்ல, நிஜ உலக சவால்களுக்கு அவற்றை பயன்படுத்தும் கருவியாகவும் பார்க்கிறார். புத்தகங்களிலிருந்து தான் பெறும் அறிவை தனது வணிகங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கு பயன்படுத்துகிறார். இதன் மூலமாக புத்தகங்களைப் படித்து அப்படியே விட்டுவிடாமல், அதன் அறிவை நிஜ உலகில் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். 

இதையும் படியுங்கள்:
மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும் போது இந்தத் தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!
Elon Musk's 5 Tactics for Reading Books!

இந்த புத்தக வாசிப்பு முறைகளைப் பின்பற்றி, நீங்களும் உங்கள் வாழ்வில் எலான் மாஸ் போல மேன்மை அடைந்தவராக மாறலாம்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com