எருமை மாட்டின் மேல் அமர்ந்து வந்த எமதர்மன்!

yama dharmaraja
yama dharmaraja-Image Credit- sanjeevkotnala
Published on

ந்த கிராமத்தில் வயதான கிழவி ஒருவர் தன் சிறிய வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினந்தோறும் இரவு 8 மணி ஆகிவிட்டால் வாசல் திண்ணையில் அமர்ந்துக் கொண்டு பெருங்குரலில் கூவ ஆரம்பித்து விடுவாள்.

"எனக்கோ வயதாகி விட்டது. தனிக்கட்டை. யாரும் இல்லை எனக்கு. எமதர்மா என்னை வந்து அழைத்து செல்..." என்று.

இவ்வாறு அவரது பெருத்த குரல் நடு இரவு வரையில் தொடரும். இதனால் அருகில் வசித்து வந்தவர்களுக்கு மிக்க தொந்தரவு. குழந்தைகளால் சரிவர படிக்க முடியவில்லை. பிறரால் அவர்கள் பணிகளை கவனம் கொண்டு செய்ய முடியவில்லை. என்ன சொல்லியும் அந்த வயதானவர் சிறிது நேரம் கூச்சலிடுவதை நிறுத்தவாரே தவிர, மீண்டும் தொடரும். எவ்வளவு நயமாக சொல்லியும் அவரது கூச்சல் நிற்கவேயில்லை.

காலையில் அக்கம் பக்கத்தவர்கள் எடுத்துக் கூறினால், "இன்று இரவிலிருந்து சத்தியமாக வாயே திறக்க மாட்டேன்," என்பார். இரவு 8 மணிக்கு அவரது ரொட்டீன் கூப்பாடு ஆரம்பித்துவிடும். காலையில் அவர் கூறிய சத்திய வாக்கு தண்ணிரீல் எழுதி வைத்தது என்று மக்கள் புரிந்துக் கொண்டனர்.

அன்று இரவு 8 மணி நெருங்கும் சமயத்தில், இவரது தொந்தரவு பொறுக்க முடியாமல் அந்த சிறிய தெருவில் இருந்தவர்கள் அவர்கள் வீட்டு கதவுகளை மூடி விட்டு உள்ளே சென்று விட்டனர். தெருவே வெறிச்சோடி கிடந்தது. மயான அமைதி. 8 மணிக்கு வழக்கம்போல் திண்ணையில் வந்து அமர்ந்த அந்த வயதானவர், தனது வழக்கமான பாட்டை துவக்கினார்.

அப்பொழுது அவர் திண்ணை அருகில் ஒரு கருத்த எருமை மாடு வந்து நின்றது. அதன் மேல் பருத்த ஒருவர் பெரிய மீசை, தலையில் கீரிடம், கையில் ஒரு பெரிய கயிறு சகிதம் தோன்றினார். இவரை நோக்கி பெரிய குரலில், "நான்தான் எமதர்ம ராஜா. தங்கள் விருப்பப்படி உங்களை எமலோகம் அழைத்து செல்ல வந்து இருக்கிறேன். புறப்படுங்கள் செல்லலாம்..!" என்று கையில் பிடித்து இருந்த கயிற்றை சுழற்றி அவர் மீது ஏறிந்தார். இந்த எதிர்பாராத அழைப்பையும் , தாக்குதலையும் சந்தித்த அந்த வயதானவர் நடு நடுங்கி போய் வேகமாக உள்ளே சென்று கதவை தாள் இட்டுக் கொண்டார். அந்த நிமிடத்தில் இருந்து அந்த வயதானவர் எமதர்மனை அழைக்கும் கூப்பாடு காணாமல் போய் விட்டது. அக்கம் பக்கத்தவர்களும் நிம்மதியாக இரவில் உறங்க ஆரம்பித்தனர்.

இதையும் படியுங்கள்:
எது முக்கியம் என்பதை உணர்ந்தால் வெற்றி நிச்சயம்!
yama dharmaraja

இப்படி நாடகம் ஆடி இந்த தொந்தரவிற்கு பர்மனெண்ட் முற்றுப் புள்ளி வைத்த அந்த கிராமத்து இளைஞர்கள் எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெற்றனர்.
சிந்தித்து, சரிவர பிளான் செய்து தேவைக்கு ஏற்ப செயல்பட்டால், எந்த வகை பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு காணலாம். கூட்டு முயற்சியும் சிறந்த பலன் அளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com