விடா முயற்சியே வெற்றியை விருட்சமாக்கும்!

Motivativation article
Motivativation articleImage credit - pixabay
Published on

வெற்றி என்பது விடாமுயற்சியில் அடங்கி இருக்கிறது. முயற்சி என்பது வெற்றியின் முதல் படி. விடாமுயற்சி கடைசி படி. பலர் முயற்சி எனும் முதல் படியிலேயே வெற்றி வேண்டும்  என நினைக்கிறார்கள். பாதிப்படி ஏறியவர்கள்  மனம் சோர்வடைகிறார்கள்.  மீதிப்படி ஏறுகிறவர்  மட்டுமே வெற்றிப் படியைத் தொடுகிறார்.

இரு நண்பர்கள் பழனி பாத யாத்திரையாகச் சென்று முருகனை கும்பிட திட்டமிட்டனர். முதலாமவர் தனக்குப் பழனி செல்ல 3 நாட்கள் போதும் என்றார். இரண்டாமவரோ 5 நாட்கள் அவருக்கு ஆகும் என்றார். முடிவில் இருவரும் சேர்ந்து 3 நாட்களிலேயே முருகனை தரிசித்து வந்து விட்டனர்.

இரண்டாமவருக்கு ஒரே ஆச்சர்யம். அவர் நண்பரிடம் 3 நாட்களில் எப்படி இது முடிந்தது என கேட்க அவர் " மந்திரம் எதுவுமில்லை. இலக்கு ஒன்றுதான். ஆனால் மனம்தான் வேறு. நான் என் திட்டத்தின்படி உங்களை நடத்தினேன்.  என் மனம் 3 நாட்களில் முடியும் என திட்டமிட்டது. உங்கள் மனது 5 நாட்கள் என்றது.  நான் என் திட்டத்திற்கு உங்களை அனுசரித்து நடக்கச் செய்தேன். அவ்வளவுதான்" என்றார். 

நினைப்பதே செயலாகும். முதல் நண்பர் திட்டமிட்டதில் பின்வாங்க வில்லை. தன் எண்ணத்தின்படி தன் நண்பரையும் நடக்க வைத்தார். 3 நாட்களில் முடியும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். தூண்டுதல் நாட்களைக் குறைத்தது. தூண்டுதல் வெற்றியின் தூரத்தைக் குறைக்கும். எதிர் அலைகள் அற்ற கடலில் படகை செலுத்தி வெற்றி பெறுபவர்களின் வெற்றி பேசப்படாது. அலையை எதிர்த்து நீந்துபவன் தான் வெற்றி பெற்று கரையேறுகிறான்.

அவர் வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ளது. அவர் வீட்டில் தொலைபேசி இல்லை. ஒருவர் சொல்கிறார். கஷ்டப்பட்டு வீட்டைக் தேடி ஒரு வழியாகக் கண்டு பிடித்தால் அங்கு பெரிய பூட்டு தொங்குகிறது. அந்த வீட்டைக் கடந்து சற்றுத் தொலைவில் இன்னொரு வீடு. வந்தவர் யோசிக்கிறார். வந்தவர்  அந்த  வீட்டில் பூட்டு பற்றி விசாரிக்காமல் கூச்சம் தடுக்க திரும்ப நடை கட்டுகிறார். அவர் வந்த நோக்கம், செயல் முடியவில்லை. அவர் சென்ற பத்து நிமிடத்திற்குள் பிறகு, எந்த வீட்டில் அவர் விசாரிக்க விரும்பினாரோ  அந்த வீட்டில் அரட்டை அடித்துவிட்டு  அவர் தேடிய நண்பர் சாவியுடன் வீடு திரும்புகிறார்.

இதையும் படியுங்கள்:
வெற்றியாளர் ஆண்ட்ரூ கார்னகி கடைபிடித்த 10 விதிகள் மற்றும் அவரது கொடைகள்!
Motivativation article

சிலர் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்  வந்தவர் அந்த வீட்டில் சென்று விசாரித்து இருந்தால்தான் காண வந்த நண்பரையே சந்தித்திருக்கலாம்.  இப்படி ஆழ்ந்த நோக்கம் இல்லாத செயல் தோல்வியைத் தழுவும். வெற்றிக்கு உழைப்பு, நம்பிக்கை முக்கியம். ஆனால்  தொடர் முயற்சி அதைவிட முக்கியம். மலையேற்றம் என்பது பாதிவரை மலை ஏற்றிவிட்டு ஓய்வுக்காக கீழே இறங்கி திரும்ப ஏறுவது அல்ல. அப்படி ஏறுபவன் குன்றில் கூட ஏற முடியாது. வியர்த்தாலும், மூச்சு வாங்கினாலும், கால்கள் நடுங்கினாலும்,  மனவலிமையுடன் ஏறுபவன்தான் சிகரம் தொடுகிறான். 

சிந்தனைக்கு இடைவெளி விட்டு சற்று ஓய்வு கொடுக்கலாம்.  ஆனால் செயலுக்கு  ஓய்வு என்பது  வெற்றியை அடைந்த பின்தான். சாதனையாளர்கள் அந்த ஓய்வை கூட தமக்குக் கொடுப்பதில்லை. ஓய்வு கொடுத்தால் வெற்றியை யர் தக்க வைப்பது? வெற்றி என்பது  ஒரு முறை மட்டுமே  வெற்றியடைவதில் இல்லை.  தொடர் வெற்றிதான் வெற்றியை விருட்சமாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com