செய்யும் வேலையை ரசித்து செய்யுங்கள்!

Motivation Image
Motivation Image

தோ ஒரு வேலையில் சேர்ந்து உழைத்துக் கொண்டு இருக்கிறோம். நமக்குப் பிடித்த வேலை என்றாலும் கூட சில சமயங்களில் மனச்சோர்வு ஏற்பட்டு அந்த வேலையில் நாட்டம் இல்லாமல் போகிறது. அப்போது எப்படி நம்மை மனதை மாற்றி சந்தோஷமாக ரசித்து வேலை செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

1. பொருத்தமான வேலை;

முதலில் உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் பொருத்தமான வேலையில் தான் இருக்கிறீர்களா என்று பாருங்கள். முழுக்க முழுக்க  உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்றாலும் கூட ஓரளவாவது அது உங்களுக்கு பிடித்த வேலையாக இருப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் உங்களால் ஈடுபாட்டுடனும் திருப்தியுடன் அந்த வேலையை செய்ய முடியும்.

2. சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்;

நீங்கள் வேலை செய்யும் இடம் அலுவலகமோ அல்லது வீடோ அதை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். மேசை மீது இருக்கும் தேவையில்லாத குப்பைகளை வெளியே எறிந்து விட்டு, தேவையானவற்றை மிகவும் அழகாக வைத்துக் கொள்ளவும். அதனால் மனமும் ஈர்க்கப்படும். டேபிள் மேல் மீதோ, அந்த அறையிலோ நல்ல அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த படங்களை ஒட்டி வைத்து கொள்ளுங்கள். அவை மனதிற்கு அமைதி தரும்.

3. இணக்கமாக இருப்பது;

டன் பணிபுரிவர்களிடம் எப்போதும் இணக்கமாக இருங்கள். அவர்களுடன் நல்ல உறவை மேம்படுத்துங்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் அவர்களுடன் பேசி அவர்களை உற்சாகமூட்டுங்கள். அலுவலகத்தில் கிசுகிசுக்கள், குறை சொல்லுதல் கூடவே கூடாது. மதிய உணவு நேரங்களில் அவர்களுடன் வேடிக்கையாய் சிரித்து பேசுவது நல்ல பலனைத் தரும்.

4. வேலையை அலுவலகத்தில் மட்டும் செய்ய வேண்டும்;

வ்வளவு தான் பிடித்த வேலையாக இருந்தாலும் அதை அலுவலகத்தில் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது அலுவலகச்சுமையை சுமந்து செல்லாதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிரித்து பேசி இருந்தால் தான் உங்களால் மன அழுத்தம் இல்லாமல் நன்றாக உறங்க முடியும். அப்போது தான் அடுத்த நாளை நீங்கள் உற்சாகமாக எதிர்கொள்ள முடியும்.

5 . அப்டேட் செய்து கொள்ளுங்கள்;

மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வேலையை உங்களால் ரசித்து செய்ய முடியும். புதிய மாற்றங்களை தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள் உங்களுடைய வேலைக்கு பொருத்தமான பயிற்சி அளிக்கப்பட்டால் முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொண்டு அவற்றை கற்றுக் கொள்ளுங்கள்

6. சவாலான பணிகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்

ங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதிகமான வேலைகள் கொடுக்கப்பட்டாலும் அதையும் சந்தோஷமாக செய்யுங்கள். புதிதாக  சிலவற்றை கற்றுக்கொண்டு சவாலான வேலைகளை செய்து முடித்தால் அலுவலகத்தில் பாராட்டும் உங்களுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
செரிமானப் பிரச்னை இருந்தால் தவிர்க்க வேண்டியவை!
Motivation Image

7. விரக்தி அடையாதீர்கள்;

சில சமயங்களில் உங்களுடன் பணியாற்றுபவர் திறமையாக வேலை செய்யத் தவறலாம் அதனால் உங்கள் மனம் விரக்தி ஆகும் அவர் தங்கள் வேலையை சரிவர செய்யாதபோது அதனால் நீங்கள் உங்களுடைய மனதை காயப்படுத்தி கொள்ள வேண்டாம்.ம் முடிந்தால் அவருக்கு உதவுங்கள். இல்லையெனில் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

8.  அவ்வப்போது இடைவெளி எடுங்கள்;

மிகவும் கடினமான வேலைகளை அலுவலகத்தில் செய்து கொண்டிருக்கும் போது சில நிமிடங்கள் இடையில் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தனியாக சென்று அமர்ந்து பிடித்த பாடலைக் கேட்பது, பிடித்தவருடன் பேசுவது போன்ற வேலைகளை செய்யலாம், மனதை அமைதிப்படுத்திக் கொண்டு மீண்டும் உங்கள் வேலையை தொடரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com