எல்லோருக்குமே ஒரே அளவு ஆனந்தம்தான்!

Everyone has the same amount of happiness!
Happy family
Published on

பொறுப்புகள் எல்லாம் முடிந்து ஓய்வு பெற்றாயிற்று. எந்த குறையும் இல்லை. ஓய்வு ஊதியமும் வருகிறது. ஆனால் ஒரு வெறுமை இருக்கிறது என்று பலர் கூற பார்க்கிறோம். ஒரு யோகி கிராமத்திற்கு வந்தார். அவரிடம் மக்கள் ஏதாவது சொல்லிக் கொடுங்கள் என்றனர். வாழ்க்கையை ஆனந்தமாக வாழ் என்றார்.  மக்கள் அடுத்த நாளும் வந்தார்கள். அடுத்த போதனை என்ன என்றார்கள். ஆனந்தமாக வாழ் என்றார். அடுத்தடுத்து அவர்கள் வர திரும்பவும் ஆனந்தமாக வாழ் என்பதையே சொன்னார். கடைசியில் மக்கள் வருவதையே நிறுத்திவிட்டனர். இப்போது வீடு வீடாகச் சென்று யோகி அதே போதனையை சொல்ல ஆரம்பித்தார்.  ஐயா போதுமய்யா என்று மக்கள் ஓடி ஒளிந்தனர். ஊர் பஞ்சாயத்து கூடியது. யோகியை வரவழைத்தனர். 

அவரிடம், "உங்கள் முதல் போதனை  கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதையே எத்தனை முறை கேட்பது வேறு போதனைகள் தரலாமே என்றனர்.

யோகி "முதல் போதனையையே நீங்கள் சரியாகக் கடைபிடிக்க வில்லை. உணர்வுபூர்வமாக நீங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிவிட்டால்  அடுத்த போதனை தருகிறேன்" என்றார். மனித மனம் இப்படித்தான். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்என கேட்டுக் கொண்டேதான் இருக்கும். கிடைத்தாலும் நிறைவின்மையைத்தான் உணரும். உங்கள் உள் நிலைக்கு எல்லை இல்லாமல் போகவேண்டும் என்ற ஆசை, அது உடலின் கட்டுப்பாட்டிலும், மனத்தின் வளையத்திலும் சிக்கிக்கொண்டு விடுதலை பெற ஏங்குகிறது.

நம் நிறைவின் மைக்கு சமாதானம் செய்ய மகான்களின் தத்துவங்கள், புராண விளக்கங்கள் எல்லாம் பயன்படலாம்‌ ஆனால் மீண்டும் தவிப்பு ஏற்படும். அளந்து பார்க்கக் கூடிய எதைக் கொடுத்தாலும் உங்களுக்கு நிறைவு வராது. விரிவடைந்து, விரிவடைந்து  எல்லையற்றதில் கலந்து விடத் துடிப்பதால்தான் அந்த ஆசைத் தீ எதைக் கொடுத்தாலும் அடங்க மறுக்கிறது. இதை முறையான யோகா மூலம் எல்லைகளை உடைக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
தயங்காமல் பாராட்டி உற்றசாகப்படுத்துங்கள்!
Everyone has the same amount of happiness!

எல்லாவற்றையும் மறந்து தொலைக்காட்சிப் பெட்டி முன்பு உட்காரந்திருக்கிறீர்கள். முழு கவனமும் அதில் இருக்கும்போது தாற்காலிகமாக பிரச்னைகளை மறந்து போயிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தது போல் ஓடிவிட்டது. இப்பவும் தாமதமாகி விடவில்லை. இந்தக் கணத்திலிருந்து கூட வாழ்க்கையை முழுமையான ஈடுபாட்டுடன் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே அளவு பணம், பதவி, அதிகாரம், வசதி கிடைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் உள்ளுணர்வில் ஒரே அளவு ஆனந்தம் கிடைப்பதை யார் தடுக்க முடியும்?.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com