
நீங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே கண்டு வாழ்க்கையே வெறுத்துப்போன மனநிலையில் இருப்பவரா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குதான். எனக்கு புரிகிறது உங்களுடைய மனநிலை தற்போது எப்படி உள்ளதென்று. உங்களைச் சுற்றி உள்ளவர்களின் வெற்றியைக் காண்கிறீர்கள், பிறகு அவர்களோடு உங்களைப் பொருத்திப் பார்த்து நமக்கு இதற்கான தகுதி இல்லை என வருத்தமடைகிறீர்கள். இது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான உணர்வுதான்.
ஆனால் இந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள 5 பழக்கங்களை நீங்கள் கைவிட்டால், தோல்வி மனநிலையில் இருந்து நீங்கள் வெளிவரலாம்.
அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவது: உண்மை என்னவென்றால் நாம் நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கு பல பொய்களை மனதில் நினைத்துக் கொண்டு அதை உண்மை என நம்பி வாழ்க்கையை வீணடித்து விடுகிறோம். அதேபோல நாம் செய்யும் எல்லா விஷயங்களிலும் எதிர்மறையான எண்ணங்கள் நமக்குள் தோன்றுகிறது. அதை உண்மை என நம்பி பயந்துகொண்டு எதையுமே முயற்சிக்காமல் போவதால், நம்மால் எதையும் சாதிக்க முடிவதில்லை. எனவே உங்களுக்குள் தோன்றும் அனைத்தையும் உண்மை என நம்ப வேண்டாம்.
சமூகத்தின் வெற்றிக்கான வரையறை: நம்மைப் பொறுத்தவரை இந்த சமூகம் எதை வெற்றி என ஏற்றுக் கொள்கிறதோ அதுதான் உண்மையான வெற்றி என நினைக்கிறோம். உண்மையில் வெற்றி என்பது நாம் செய்யும் ஒரு விஷயத்தில் அடைந்த மேன்மையை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைவது தான். அதை இந்த சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பிறர் பற்றிய சிந்தனைகள்: தோல்வியை சந்திப்பவர்கள், பல தருணங்களில் பிறருடைய வெற்றியைக் கண்டு கவலைப்படுவார்கள். ஆனால் இதுபோன்ற சிந்தனைகளும், கவலைகளும் நமக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிறர் பற்றிய எண்ணங்களை உங்கள் மனதில் இருந்து நீக்கிவிட்டு, முழுவதும் உங்களுக்கான செயல்களில் இறங்குங்கள்.
தோல்வி மோசமானது என நம்புவது: தோல்வி அடைவது ஏதோ கொலை குற்றம் போல நாம் கருதுகிறோம். ஆனால் உண்மையில் தோல்வி அடைவதை எண்ணி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தோல்விதான் நம் முயற்சியின் சான்றுகள்.
வேகமாக முன்னேற வேண்டும் என நினைப்பது: வேகமாக வெற்றியடைய வேண்டும் என நினைத்து ஒரு செயலை செய்வதே, அதில் சாதிக்க முடியாதபோது பெரும் கவலையை நமக்கு கொடுத்து விடுகிறது. நமது வாழ்க்கையில் எதுவுமே நாம் நினைத்தது போல நடக்காது. ரேண்டமாக அது இஷ்டத்துக்கு தான் நடக்கும். இந்த புரிதல் உங்களுக்கு வந்துவிட்டால், தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்ற உத்வேகம் உங்களுக்கு வரும்.