நம்பிக்கை - உழைப்பு இதுவே வெற்றி பெற்றவர்களின் பாதை!

success formula...
Faith - work hard...
Published on

வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. வாழ்க்கை என்பது ஒரு தொடர் ஓட்டம். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

வெற்றி பெறுவதற்கான சிறந்த வழிகளை ஆராயந்து, நல்ல திட்டமிடல் வேண்டும். அந்த திட்டத்தில் எவ்வாறெல்லாம் செயல்முறைப்படுத்த வேண்டும். அதன் பின் விளைவுகள் எவ்வாறு இருக்கும். எதிர்ப்பார்த்ததை விட மாறான வகையில் விளைவுகள் இருந்தால் அதனை எவ்வாறு நேர்கொள்வது, அதற்கான சிக்கல் இல்லாத எளிய வழிமுறைகள் என்ன? போன்ற பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து திட்டமிடல் வேண்டும்.

திட்டம் தீட்டும்போது ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். அதில் நமக்கு நன்மை தருகின்ற சிறந்த திட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் எதிர்ப்பார்க்கும் லாபம் உறுதிப்படுத்தப்பட்ட மேற்கொண்டு செயல்பட வேண்டும். பின்னர்தான் மேற்கொண்டு செயல்பட வேண்டும். 

தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். ஏன் என்றால், மக்களின் விருப்பம், தொழில் போட்டி, அறிவியல் மாற்றங்கள், ஆட்சி மாற்றம், தொழில் புரட்சி, உள்நாட்டு வெளிநாட்டு தொழில் கொள்கை போன்ற பல்வேறு காரணங்களால் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தகரத்தால் உருவாக்கப்பட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், இப்பொழுது பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன.

வாழ்க்கையில் கடுமையான உழைப்பு என்பது, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சோர்வில்லாத உழைப்பு ஒருவரை, மிகவும் உன்னதமான உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வது உறுதி. உழைப்பை பொருளாதாரமாக மாற்றுவதே தொழில் என்று தெளிவாக கூறலாம். உழைப்பின் மூலம் உயர்ந்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அனில் அம்பானி சகோதரர்கள். 

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது பம்பாய் நகரத்தின் ஒரு தெரு முனையில் தொலைப்பேசி ஏஜெண்ட்டாக தொழில் தொடங்கிய அவர்கள், இப்போது இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் முதல் நபர். உழைப்புதானே இத்தகைய நிலைக்குக் கொண்டு வந்தது. ஆகையால் கடுமையான உழைப்பு வெற்றிக்குத் திறவு கோல்.

நம்பிக்கை - கடுமையான உழைப்பு -உயர்வு Trust-Hardwork -Excellence இதுவே வெற்றிபெற்றவர்கள் சென்ற பாதை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com