உங்களில் எத்தனை பேர் Fight Club திரைப்படம் பார்த்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்தத் திரைப்படம் எனது வாழ்வைப் பற்றிய பல விஷயங்களை புரிய வைத்தது. குறிப்பாக அத்த திரைப்படத்தில் வரும் Tyler Durden என்கிற கதாபாத்திரம் சமூகத்தின் பொய்யான முகத்தை வெட்டவெளிச்சம் போட்டு காட்டி இருக்கும். ஒரு தனி மனிதன் எதிர்கொள்ளும் போராட்டங்கள், பொருட்களுக்காக அவன் தன்னை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கிறான் என்பதனை துணிச்சலாக வெளிப்படுத்தும்.
ஃபைட் கிளப் திரைப்படத்தில் Tyler Durden ஒரு சாதாரண மனிதராகத் தோன்றினாலும், அவர் தன்னுடைய தனித்துவமான சிந்தனை மற்றும் செயல்களால் ஒரு சிறப்பான மனிதனாக எனக்குத் தெரிகிறார். Consumerism கலாச்சாரத்தின் பொய்யான வாழ்க்கை முறையை நமக்கு தெரியப்படுத்தி, அதிலிருந்து எப்படி வெளியேறலாம் என்பதை நமக்கு சொல்லித் தருகிறார். அவரது கருத்துக்கள் சமூகத்தில் நிலவும் பணம், பொருள், சொத்து சுகம் போன்றவற்றிற்கு கொடுக்கும் மதிப்பை எதிர்த்து போராட நமக்கு உத்வேகம் அளிக்கும்.
ஒரு மனிதன் இந்த சமூகத்தால் எவ்வளவு மன அழுத்தங்களை சந்திக்கிறான் என்பதை அந்த கதாபாத்திரம் நமக்கு கற்றுத் தரும். இதன் மூலமாக பலர் தங்களைத் தாங்களே புரிந்துகொண்டு, தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை வாழ உதவியாக இருக்கும். இந்த சமூகத்துடன் போராடுவதை விட, தனக்கு உள்ளே ஏற்படும் சிந்தனைகளுடன் போராடி வெல்வது ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான படி என்பதை அந்த கதாபாத்திரம் நமக்கு கற்றுத் தரும்.
எனக்கு Tyler Durden பிடிப்பதற்கு காரணம், அவர் இந்த சமூக விதிகளை மீறி வாழ்வதே ஆகும். இந்த சமூகத்தால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை உடைத்து தன்னுடைய சொந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்கிற முறையை அவர் உருவாக்குகிறார். இது பலருக்கு தங்கள் வாழ்க்கையை தாங்களே கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
நீங்கள் ஒரு சராசரி மனிதனாக சிந்தித்தால் நிச்சயம் இந்த கதாபாத்திரம் ஒரு சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் போலதான் தெரியும். அவர் கூறும் கருத்துக்களை அப்படியே நீங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கினால் சமூகத்தில் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். ஆனால், அவர் கூறும் எல்லா கருத்துக்களும் உங்களை ஆழமாக சிந்திக்க வைத்து, வாழ்க்கை பற்றிய புரிதலை வேறு விதமாக சிந்திக்க வைக்கும்.
உங்களுக்கு நேரம் கிடைத்தால் ஒருமுறையாவது டிஃபைட் கிளப் என்கிற திரைப்படத்தை பாருங்கள். குறிப்பாக, டெய்லர் டர்டன் கதாபாத்திரம் சொல்லும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து, உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் முயற்சியில் இறங்குங்கள்.