மன அமைதியுடன் வாழ இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

Live with peace of mind
Meditation
Published on

ன அமைதியுடன் வாழ விரும்பும் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான மற்றும் தேவையான ஆசையாகும். நம்முடைய மன அமைதி வெற்றியும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கையை உருவாக்க உதவுகிறது. மன அமைதியை அடைய சில பயனுள்ள வழிகள்.

தியானம் செய்வது: தியானம் மனதை அமைதியாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலை மற்றும் மாலையில் குறைந்தது 15_20 நிமிடங்கள் தியானம் செய்வது மனதை சீராக வைத்துக்கொள்ள உதவும். மூச்சின் மீது கவனம் செலுத்தும் தியானம் (அனைத்துப் பாணிகளிலும் மூச்சு மற்றும் மனதின் சமநிலையை கண்டுபிடிக்க உதவும்).

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க:

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடல் பயிற்சி, போதிய உறக்கம் ஆகியவை உடல் மற்றும் மனதை அமைதியாக வைத்திருக்கும். ஆரோக்கியமான உடல் அமைதி தரும். இதனால் உடல் வலிமையும், மன உற்சாகமும் கூடும்.

நேர்மறை சிந்தனைகள்:

மனம் அமைதியாக இருக்க நிறைவான மற்றும் நல்வாழ்வை ஏற்படுத்தும் சிந்தனைகள் அவசியம். நம்மை கவரும், மகிழ்ச்சி அளிக்கும், மற்றும் நம்முடைய விடாமுயற்சியை ஊக்குவிக்கும் சிந்தனைகளை தவறாமல் கவனத்தில் எடுத்து பயில வேண்டும்.

ஏற்றுக்கொள்ளும் பக்குவம்:

வாழ்க்கையில் எதையும் எதிர்நோக்க நேரம் வரும்; எனினும், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் மன அமைதியை தரும். “இதுதான் இப்போது நடக்கிறது, நான் இதை ஏற்றுக்கொள்கிறேன்” என்ற தத்துவத்தை பின்பற்று வது பல இடர்பாடுகளுக்கு தீர்வாக இருக்கும்.

தோல்விகளையும் வெற்றிகளைப்போல் ஏற்றுக்கொள்தல்:

வாழ்க்கையில் தோல்விகள் பொதுவாகவே வரும், இதை சாதாரணமாகவே பார்க்கலாம். அதற்கும் காரணம் உண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். வெற்றியை மட்டுமே எதிர்பார்க்காத மனப்பாங்கு நம்முடைய மன அமைதியை நிலைநாட்ட உதவும்.

மற்றவர்களை மன்னிக்க கற்றுக் கொள்ளுதல்:

பிறரைப் பற்றிய கோபம், கேள்விக்குறிகள் போன்றவை மன அமைதியை குறைக்கும். மன்னிப்பு என்னும் குணம் இதை குறைத்து, நம் முடைய மனதை சுத்தப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்..!
Live with peace of mind

அதிகத் தொழில்நுட்பம், தொலை பேசிகளிலிருந்து ஓரளவு விடுபடுதல்:

ஒரு கட்டுப்பாடு இல்லாமல் சமூக ஊடகங்களில் செலவிடுவது மன அமைதியை பாதிக்கும். அதனாலே ஒரு காலக்கட்டுக்குள் இதைப் பயன்படுத்தலாம். இயற்கையில் பொழுதை கழிப்பது, புத்தகங்கள் படிப்பது போன்ற விருப்பங்களை உருவாக்கலாம்.

நன்றி உணர்வை வளர்த்துக் கொள்தல்:

நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றி உணர்வை காட்டுவது மன அமைதிக்கான சிறந்த வழி. கஷ்டங்களில் கூட நன்றியுடன் இருக்க முடிந்தால் மனம் அமைதியாக இருக்கும்.

எளிமையாக வாழ்தல், மனதில் மிகுதியான சுமையை சுமக்க வேண்டாம்:

எளிமையாக வாழும்போது மன அமைதி நிலைபெறும். அத்தனை தேவைகளை வெறுத்து, தனிமையில் இருந்தாலும் அமைதியுடன் இருக்க கற்றுக்கொள்வோம்.

தலைமைப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்தல்: ஒரு சிறிய பொறுப்பு மட்டுமே நமக்குள் அமைதியை உருவாக்கும். நம்முடைய சக அதிகாரத்தோடு வேலைப்பளுவைப் பகிர்ந்து கொள்வதால், மன அழுத்தம் குறையும்.

மனதை ஒரு முகப்படுத்துதல்: மனதை நன்றாக ஒருமுகப்படுத்தி செயலில் ஈடுபட்டால் உண்மை நிலையை உணரலாம். சுயநலம், வீண் ஆசை, பயனற்ற விருப்பங்கள் மன அமைதிக்கு தடையாக இருக்கின்றன. இந்த நிலையை மாற்றி மனதை ஒரு முகப்படுத்தினால் நம்முள் இருக்கும் ஒளியை காணலாம்.

மன அமைதியுடன் வாழ இந்த வழிமுறைகள் பயனளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com