இந்த பத்து வழிகளை பின்பற்றினால் ஒவ்வொரு நாளும் அற்புதமே!

Every day is wonderful...
napoleon hill
Published on

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான நெப்போலியன் ஹில் எழுதிய ‘ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதம்’ என்கிற புத்தகம் வாழ்க்கை பல அற்புதங்கள் நிறைந்தது. அன்றாட வாழ்வில் அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்பதை அருமையாக விளக்குகிறது. இந்தப் புத்தகம் தொழில்முனைவோர், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட வெற்றிகரமான நபர்களுடன் நெப்போலியன் ஹில் எடுத்த நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள 10 முக்கியமான விதிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

 1. தினந்தோறும் அற்புதங்கள்;  

லாட்டரியில் கோடிக்கணக்கான பணத்தை வெல்வது அல்லது தொலைந்துபோன அன்புக்குரியவரை மீட்பது போன்ற அசாதாரணமான நிகழ்வுகள் மட்டும் அற்புதங்கள் அல்ல.அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறிய நிகழ்வுகள் கூட அற்புதங்கள்தான். புதிய நண்பரை சந்திப்பது, அதிக நெரிசலான பகுதிகளில் வாகன நிறுத்தமித்தைத் தேடிக் கண்டுபிடிப்பது போன்ற சிறிய நிகழ்வுகள் கூட அற்புதங்கள்தான் என்று வாதிடுகிறார் ஹில். 

2. நேர்மறை சிந்தனையின் சக்தி;

நேர்மறையான மனநிலையை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் நல்லதே நடக்கும் என நம்புவதையும் ஹில் வலியுறுத்துகிறார். நாம் நேர்மறையானவற்றில் கவனம் செலுத்தும்போது நம் வாழ்க்கையில் அதிக நேர்மறையான அனுபவங்களை ஈர்க்கிறோம் என்று கூறுகிறார். 

3. அனுமான விதி;

ஹில் அனுமான விதியை அறிமுகப்படுத்துகிறார். நமது எண்ணங்களும் அனுமானங்களும் நமது யதார்த்தத்தை வடிவமைக்கின்றன என்று கூறுகிறார். நல்ல விஷயங்கள் நடக்கும் என்று எண்ணி, என்ன சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதில் கவனம் செலுத்தி, அவற்றைப் பற்றி உறுதியான அனுமானங்கள் கொண்டிருந்தால் அவை வாழ்வில் நடந்தே தீரும் என்கிறார். 

4. நன்றியுணர்வு;

இறைவன் நமக்குத் தந்துள்ள விஷயங்களுக்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். நன்றியுடையவர் களாக இருக்கும்போது நமது வாழ்வில் அதிக நேர்மறையான விஷயங்கள், பொருட்கள், மனிதர்கள், சம்பவங்களை ஈர்க்கிறோம். எனவே தினந்தோறும் நமக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

5. காட்சிப்படுத்துதலின் பங்கு;

நமது ஆசைகளை காட்சிகளாக காண்பது மிகவும் முக்கியம். நமது இலக்குகளை காட்சிகளாக நாம் கற்பனையில் காணும்போது அவை மிக விரைவில் ஈடேறும். எனவே ஆசைகளை தினமும்  காட்சிப்படுத்தி பார்க்கவேண்டும்.

6.சந்தேகம் மற்றும் பயத்தை சமாளித்தல்

மனிதர்களுக்கு சந்தேகம் மற்றும் பயம் அதிகமாக உள்ளது. இதனால் தங்கள் இலக்குகளை அடையதற்கு அவர்கள் மிகவும் போராடுகிறார்கள். இந்த இரண்டு தடைக்கற்களையும் தாண்டி நாம் இவற்றை என்ன சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். 

7. நடவடிக்கை; 

விரும்பும் விஷயங்களை வெறும் ஆசைகளாக வைத்திருந்தால் மட்டும் போதாது. இலக்குகளை நோக்கி நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம். அப்போதுதான் அந்த இலக்குகள் நிறைவேறும். எனவே உறுதியான நடவடிக்கைகள் அவசியம்.

8. சமூகத்தின் சக்தி;

இலக்குகளை அடைய நம்மை ஊக்குவிக்கும் நேர்மறையான மற்றும் ஆதரவான நபர்களுடன் பழக வேண்டும். நம்மைச் சுற்றி நல்ல நேர்மறையான சமூகம் நிற்பது மிக முக்கியம் என்கிறார்.

9. ஆன்மீகத்தின் பங்கு;

வெற்றி மற்றும் மகிழ்ச்சி அடைவதில் ஆன்மீகத்தின் முக்கியத்துவம் மிகவும் அவசியம். வாழ்க்கையில் ஒரு நோக்கமும் அர்த்தமும் இருப்பது நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு அவசியம். அதற்கு ஆன்மீக நம்பிக்கையும் ஆன்மீக செயல்பாடுகளும் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார். 

10. அதிசய எண்ணம்; 

நாம் அதிசய எண்ணம் கொண்டவர் என்கிற கருத்தை நமக்குள் ஆழமாக விதைக்க வேண்டும். அப்படி இருந்தால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் நடக்கும் அற்புதங்களின் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும் என்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com