நீங்கள் உங்கள் சிந்தனையாலும் உணர்வுகளாகும் உருவாக்கப்படுகிறீர்கள் என்பது உண்மை. மகிழ்ச்சிக்கு எளிதாக உட்படக்கூடிய, வருத்தத்திற்கு அவ்வளவு எளிதில் உட்படாத ஓர் உடலை உருவாக்குவதற்கான வழி மகிழ்ச்சியாக இருப்பதுதான். சரியான நம்பிக்கையை உங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டியது ஏன் அவசியம் என்பதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது.
ஒரு கரும்பலகையில் ஒரு சாக்பீஸ் உருவாக்குகின்ற கிறீச் சத்தத்தை கற்பனை செய்யும்போது சிலருடைய உடல் நடுங்கும்.ஒரு கனவில் உங்களை சில நிகழ்வுகள் அச்சுருத்தும்போது அவை உங்கள் வாழ்வில் நிஜமாகவே நிகழ்ந்தால் நீங்கள் எவ்வளவு பயப்படுவீர்களோ அதே அளவு பயத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஹார்வர்டு பல்கலைகழகம் செய்த ஆய்வில் மூளை ஸ்கேனர் பயன்படுத்தி சிலரை ஆய்வுக்கு உட்படுத்தியபோது , ஒரு மரத்தின் புகைப்படத்தைப் பார்ப்பதும், அந்த மரத்தைக் கற்பனை கற்பனை செய்வதும் மூளையில் ஒரே பகுதியைத் தூண்டியதைக் கண்டுபிடித்தனர்.
அதேபோல் உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு நோய் குணப்படுத்தக்கூடியது என்று நீங்கள் கற்பனை செய்யும்போது, உங்கள் உடலும் நோயெதிர்ப்பு அமைப்பு முறையும் உங்கள் மனமும் குணமாக்கும் ஆற்றலை விடுவித்து, உங்கள் நோய் குணமாவதற்கு வழி வகுக்கின்றன. ஒரு விஷயம் சாத்தியமாகும் என்று நம்பினால் அதை அடைவதை நோக்கி செயல்படுவீர்கள். சாத்தியமில்லை என்று நம்பினால் உங்களுக்கு உதவி கிடைத்தாலும் நீங்கள் நிராகரித்துவிடுவீர்கள்.
ஒரு 30 வயது இளைஞன் திருடனால் கத்தியால் தாக்கப்பட்டார். அவருடைய தசைகள், நரம்பு நாளங்கள், தமனிகள் அனைத்தும் அறுபட்டு. காயங்கள் ஆறி பல காலம் ஆகியும் அவருக்கு கையிலும் தோளிலும் வலி இருந்தது. வலி நிவாரணி தாற்காலிக வலியை குறைத்தது. மருந்தின் வீரியம் குறைந்தபோது மீண்டும் வலி வந்தது. பல மருத்துவர்களை. சந்தித்தும் அவர்கள் இவருக்கு வாழ்நாள் முழுவதும் வலி இருக்கும் என்று கூறிவிட்டனர்.
ஆனல், இவர் ஒரு சிகிச்சை மையத்தில் அக்குபஞ்சர், அக்குபிரஷர் போன்ற முறைகளால் அவர் மருந்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடிந்தது.
ஏனெனில் அவருக்கு வலியைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர் முன்பு சந்தித்திருந்த நிபுணர்கள் அவரிடம் கூறிய வியஷங்களை அவர் நம்பியிருந்தால் சிகிச்சைமையத்திற்கு குணமாவதற்காக வந்திருக்க மாட்டார். ஆனால் அவர்கள் கூறியதை செவிமடுத்தாததால் அவர் சிகிச்சை மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டதால் வலி குணமானது.
ஆகவே எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கக் தயாராகுங்கள்.