நல்ல விமர்சனங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்!

Good reviews help us improve!
motivational articles
Published on

மெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனது போர்ப்படைச் செயலாளராக ஸ்டோன்டான் என்பவர் இருந்தார். திறமைசாலி. போரின் நுணுக்கங்களையும், தந்திரங்களையும் நன்கு உணர்ந்தவர். சில காரணங்களால் இவர்கள் இருவரின் உறவில் விரிசல் வந்து விட்டது. நாட்டில் நெருக்கடியான நிலை. சமயம் பார்த்து லிங்கன் போர்ப்படைச் செயலரை இடம் மாற்றி ஆணை பிறப்பித்து விட்டு வெளியூர் சென்று விட்டார்.

மாறுதல் ஆணையை மதியாது, இடம் பெயர மறுத்துவிட்டார் செயலாளர் அத்தோடு நின்றாரா? “லிங்கன் ஒரு அடி முட்டாள்" என்ற கடுமையான வாசகங்களால் விமர்சித்தார். இந்த விமர்சனம் வெள்ளை மாளிகையில் ஓர் பூகம்பத்தையே உருவாக்கியது. சுற்றுப்பயணம் முடிந்து வந்த லிங்கனிடம் தகவல் தரப்பட்டது. செய்தி கேட்டவுடனேயே லிங்கன் தனது போர்ப்படை செயலரது வீட்டிற்கு நேரிடையாகச் சென்று - நடந்தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டு மாறுதல் ஆணையை ரத்து செய்தார் என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தனது தவறை உணர்ந்து திருத்திக்கொள்வது - மனிதநேயப் பண்புகளில் தலையாயது இந்நிகழ்ச்சிக் குறிப்பு என்று வாசகங்கள் அவரது நாட்குறிப்பில் கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றது.

சொற்களின் தாக்குதல் மீது கோபப்படாதீர்கள். தாக்கப்படுகின்றபோது காரணத்தைக் கண்டறியுங்கள். நியாயமான தாக்குதலாக இருந்தால், உங்களது தவற்றை உணர்ந்து - திருத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் வருத்தம் தெரிவியுங்கள். இதில் வெட்கப்படத் தேவை இல்லை. விமர்சனங்களை வரவேற்கின்ற பக்குவத்தைப் பெற்றுவிட்டால்- நியாயம் - நியாயமற்றது எது என்பதை உணரமுடியும்.

இதையும் படியுங்கள்:
நட்பில் ஈகோ பார்ப்பது சரியான செயலா?
Good reviews help us improve!

உலகச்சந்தையிலே இன்று வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கின்ற நிறுவனங்களான பெப்ஸோடெண்ட், போர்டு, பென்ஸ், யார்ட்லி போன்றவைகளுக்கு - இவர்களது பொருள்களின் தரம், தன்மையைப் பாராட்டி வருகின்ற கடிதங்கள் ஒருசில காலத்திற்குப் பிறகு அழிக்கப் படுகின்றனவாம். ஆனால் குறை, குற்றங்கள் கண்டு பிடித்து விமர்சித்து வருகின்ற கடிதங்கள் பாதுகாக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன என்கிறார் சார்லஸ் லுக்மேன் என்ற அமெரிக்க ஆய்வாளர்.

இங்கேயும் ஒவ்வோர் "பெரிய நிறுவனங்களிடத்திலேயும் புகார் புத்தகம்" தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். நல்ல விமர்சனங்கள் நமது முன்னேற்றத்திற்கும் ஆக்கத்திற்கும் உதவும்.

தகப்பனார் தனது பிள்ளையைக் கண்டித்து கடுஞ்சொற்களால் நாவாடும்போது - எத்தனை குழந்தைகள் ஏற்றுக்கொள்கின்றார்கள்?

கணவன் தனது மனைவியைப் பற்றி அவ்வப்போது விமர்சிக்கின்ற விமர்சனங்களை எத்தனை மனைவிமார்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்?

வந்து விழுகின்ற விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள். நியாயங்கள் தென்பட்டால் உங்களது முடிவைத் தள்ளிப்போடுங்கள்.

என்றுமே நல்ல விமர்சனங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com