
களைப்பும், முதுமையும் எந்தவொரு ஆன்மீக சக்தியின் மீதும் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பொறுமை, பரிவு, வாய்மை, அடக்கம், நல்லெண்ணம், சமாதானம், இணக்கம், மற்றும் சகோதரப் பாசம் ஆகிய இயல்புகளுக்கும், பண்புகளுக்கும் ஒரு போதும் முதுமை ஏற்படுவதில்லை. இப்பண்புகளை இல்வாழ்க்கையில் தொடர்ந்து உருவாக்கி கொண்டிருந்தால் எப்பொழுதும் மனதளவில் இளமையாகவே இருக்கலாம்.
சிதைவுகளுக்கும், அழிவுகளுக்கும் பொறுப்பு வயது மட்டுமல்ல. நம் மனங்களிலும், உடல்களிலும் தீங்கு விளைவிக்கும் முதுமை ஏற்படுவதற்குக் காரணம் காலம் அல்ல. காலத்தின் விளைவுகள் குறித்து நரம்புகளில் ஏற்படும் பயம்தான் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வயதாவதற்கு காரணம்.
வயது ஒரு பொக்கிஷம்
“யாருக்கும் நான் தேவைப் படவோ அல்லது வேண்டப் படவோ இல்லை. என்னால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. பிறக்கிறோம், வளர்கிறோம், முதுமையடைந்து இறந்து போகிறோம். அதுதான் வாழ்க்கை...” என்று நினைக்காமல் மனதில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
முதுமையடைதல் என்று சொல்லுவது உண்மையில் மாற்றம்தான். அதை பேரானந்தத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்க வேண்டும். மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையும் முடிவில்லா ஒரு பாதையில் நாம் முன்னெடுத்து வைக்கும் ஓர் அடி. நம் உடலின் சக்திகளுக்கு அப்பாற்பட்ட மாபெரும் சக்திகள் நம்மிடம் உள்ளன. நம் ஐம்புலன்களின் எல்லையையும் தாண்டிய மாபெரும் அற்புத புலன்கள் நம்மிடம் உள்ளன. நாம் வாழ்வது, எந்த காலத்திலும் வாழ்வை அதன் அனைத்து அழகோடும் புகழோடும் வெளிபடுத்துவதற்குதான்.
முதுமை என்று அழைக்கப்படும் பருவத்தை நாம் நளினமாய் ஏற்றுக் கொள்ள வேண்டும். முதுமைக்கென்று அதற்குரிய புகழும், அழகும், ஞானமும் இருக்கின்றன. சமாதானம், அன்பு, பேரானந்தம், அழகு, மகிழ்ச்சி, ஞானம், நல்லெண்ணம், புரிதல் போன்ற பண்புகளுக்கு முதுமையும் இல்லை, மரணமும் இல்லை. நம்முடைய நடத்தையும், மனதின் பண்பும், விசுவாசமும், நம்பிக்கையும் ஒரு நாளும் மக்கி போவதில்லை.
இளமை நம் எண்ணப்படிதான். தான் எவ்வளவு வலிமை வாய்ந்தவர், உபயோகமானவர் என்று ஒருவர் நினைக்கிறாரோ, அவர் அவ்வளவு வலிமை வாய்ந்தவராகவும், உபயோகமானவராகவும், விளங்குகிறார். நம் மனம் ஓர் நேர்த்தியான நெசவாளி, கட்டிட கலைஞன், வடிவமைப்பாளர் மற்றும் சிற்பி.
நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்டு ஷா தன் தொண்ணூறு வயதிலும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருந்தார். கலைநயமிக்க அவரது மனத்தின் இயல்பு தன் சுறுசுறுப்பான பணிகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்கவில்லை
டிபேக்கி தன் தொண்ணூறாவது வயதில் தன் தத்துவத்தை தொகுத்து கூறியது என்னவெனில் “உங்களுக்குச் சவால்கள் இருந்து நீங்கள் உடலளவிலும், மனதளவிலும் திடகாத்திரமாக இருக்கும் வரையில், வாழ்க்கை ஊக்குவிப்பதாகவும், உயிர்ப் பூட்டுவதாகவும் இருக்கும்.”