மனிதர்கள் தங்கள் திறமைகள் மற்றும் திறன்களை பற்றி வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர். ஒருவர் தனது திறமைகள் பிறப்பிலிருந்து நிர்ணயிக்கப்பட்டது என நம்பினால், அவர் நிலையான மனப்பான்மை கொண்டவர் என அர்த்தம். ஆனால், ஒருவர் தனது திறமைகள் கடின உழைப்பு மற்றும் தொடர்ச்சியான கற்றல் மூலமாக மேம்படுத்தலாம் என நம்பினால், அவர் ஒரு வளர்ச்சி மனப்பான்மை கொண்டவர் என அர்த்தம். இந்த இரண்டு மனப்பான்மைகளும் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வளர்ச்சி மனப்பான்மை: வளர்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் திறமைகள் மற்றும் திறன்கள் எளிதாக மாற்றக்கூடியவை என நம்புகின்றனர். அவர்கள் தோல்விகளைக் கற்றலுக்கான வாய்ப்புகளாகக் கருதுகின்றனர். அவர்கள் புதிய சவால்களை ஏற்றுக்கொண்டு, தங்கள் வரம்புகளைத் தாண்டிச்செல்ல முயற்சிக்கின்றனர். இதனால், அவர்களால் தங்களது திறமைகளை மேம்படுத்த கடினமாக உழைக்க முடியும்.
நிலையான மனப்பான்மை: நிலையான மனப்பான்மை கொண்டவர்கள், வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டது என்பதை நம்புகின்றனர். நாம் என்ன செய்தாலும் நம்முடைய திறமைகளை ஒருபோதும் மாற்ற முடியாது என அவர்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாகவே அவர்கள் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள். அவர்கள் தோல்விகளைப் பற்றி அதிகமாக சிந்தித்து, அவை தங்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பயப்படுகின்றனர்.
வளர்ச்சி மனப்பான்மை Vs நிலையான மனப்பான்மை: வளர்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். கடினமான வேலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். மேலும், அவர்கள் தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்வார்கள். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு செயல்படத் தயாராக இருப்பார்கள். இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கை வெற்றியை நோக்கி நகரும் வாய்ப்புகள் அதிகமாகும். வளர்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள் மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும், தவறுகளை ஒப்புக் கொள்ளவும் தயாராக இருப்பார்கள். இதன் விளைவாக அவர்களால் ஆரோக்கியமான, நிலையான வாழ்க்கையை உருவாக்க முடியும். இதுவே நிலையான மனப்பான்மை கொண்டவர்கள், எதையும் முயற்சிக்காமல் ஒரே இடத்திலேயே இருப்பார்கள்.
ஒருவரின் மனப்பான்மை என்பது அவரது வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் வெகுவாக பாதிக்கிறது. வளர்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைகிறார்கள். இதுவே நிலையான மனப்பான்மை கொண்டவர்கள், எல்லா விஷயங்களையும் நினைத்து பயப்படுவதால், அவர்களால் வாழ்வில் முன்னேற முடிவதில்லை. எனவே, நாம் அனைவரும் வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி நாம் எப்போதும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். முதலில் நம் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். இவற்றை முறையாக செய்தாலே, வாழ்வில் நிச்சயம் நல்ல நிலையை அடையலாம்.