
மகிழ்வோடு வாழ இவைகளை பின் பற்றினால் முடியும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாட்கள் வேகமாக மறைய வாழ்க்கை கடந்துபோகும்.
முடியும் என்ற உந்துகோல் உங்களுடன் எப்பொழுதும் பயணம் செல்லும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதன் மகிமை போகப்போக தெரியும்.
பிறர் சாதனைகளை மனதார பாராட்டி பழகுங்கள். அவர்கள் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு மகிழுங்கள். அவர்கள் வெற்றியை கண்டு உள்ளன்போடு பெருமை கொள்ளுங்கள். பொறாமை கொள்வதை அறவே தவிர்க்கவும்.
நம்பிக்கை, தன்னம்பிக்கை இவற்றை மேலும் மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் அவனம்பிகைக்கு இடமே கொடுக்காதீர்கள்.
எல்லா வேலைகளும், எல்லா விஷயங்களும் ஒருவருக்கே தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் சாத்தியமும் கிடையாது. எனவே அறிந்தவர்கள், தெரிந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயலுங்கள். ஆர்வம் காட்டுங்கள். தயக்கமும், கூச்சமும் வேலைக்கு உதவாது.
அதேபோல் உங்களுக்கு தெரிந்தவற்றை அடுத்தவர் களுக்கு கற்று தர யோசனை செய்யாதீர்கள்.
பகிர்ந்து கொள்வது என்பது ஒரு முக்கிய குணம். அதை கட்டாயமாக வளர்த்துக்கொண்டு பின்பற்றுங்கள் செயல்படுத்துவதில்.
அடுத்தவர் பற்றி உங்கள் கருத்து (opinion) கூற வேண்டியிருந்தால் அவரைப் பற்றிய உயர்வான குணங்களை (நிறைகள்) எடுத்துக்கூற தயங்கவேண்டாம்.
உங்களை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து சிறந்த அம்சங்களை கண்டு கவனித்து பழகிக்கொள்ள உண்மையான ஆர்வத்தோடு முற்படுங்கள்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருக்க போதிய ஓய்வு அவசியம்.
இன்றைய வேகம் நிறைந்த வாழ்க்கை ஓட்டத்தில் தனி நபருக்கு மட்டும் அல்லாமல் அவர் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக், எலெக்ட்ரிகல் உபகரணங்களுக்கும் நிச்சயமாக ரெஸ்ட் தேவை.
எனவே தேவைக்கு அதிகமாக மொபைல்போன் உபயோகிப்பது, டிவி யில் இடைவிடாமல் தொடர்ந்து பார்ப்பது போன்றவைகளுக்கு சுய கட்டுப்பாட்டின் அடிப்படையில் தடை விதித்துக்கொண்டு பின்பற்றவும். மொபைல் போன், டிவி போன்ற சாதனங்களுக்கு அடிமை ஆகாமல் இருந்தாலே மகிழ்ச்சி கெரண்டியா அமையும்.
உங்களால் முடிந்த அளவு தேவைப்பட்டவர்களுக்கு கொடுக்க பழகிக்கொள்ளவும். அது நிச்சயசம் மன நிறைவை அளிக்கும். அத்தகைய மன நிறைவு மகிழ்ச்சிபெற வழி வகுக்கும்.
அளவுக்கு அதிகமாக ஆசைப்படாமல், பிறருக்கு முடிந்த உதவி செய்து வருவதும் மகிழ்ச்சி அடைய உதவும்.
இவற்றைப் பின் பற்றி பழகிக்கொண்டால் கிடைக்கும் மகிழ்ச்சி வாழ்க்கை முன்னேறி செல்வதை சுயமாக அனுபவித்து மகிழலாம்.