சில சமயங்களில் நமக்கு பெரிய முயற்சிகள் கூட வெற்றிக்கு மிக அருகில் வந்து அது தோல்வியில் முடிந்து விடலாம். ஆனாலும் இடைவிடாது அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு யார் ஒருவர் செயல்படுகிறாரோ தோல்விகளை தோற்கடிக்க போராடுகிறாரோ அவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியாளராக ஜொலிக்கிறார்கள்.
இடைவிடாது முயற்சி என்பதுதான் மிக முக்கியமான ஒன்று பெரிய முயற்சி. தோற்றாலும் சரி, சிறிய முயற்சி தோற்றாலும் சரி ஆனால் என்றைக்குமே விடா முயற்சி மற்றும் தோல்வி அடைந்ததாக சரித்திரமே இல்லை. விடாமுயற்சி மட்டுமே எப்படியும் நம்மை வெற்றியாளர் ஆக்கிவிடும். ஒரு விளையாட்டு வீரரின் உழைப்பு முயற்சி இவற்றை இந்த பதிவில் படியுங்கள்.
புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனை டான் ஃப்ரேசர் (Dawn Fraser) என்பவர். ஆஸ்திரேலியாவை சார்ந்த இந்த வீராங்கனை. பல சமயம் அபாரமாக நீந்தி முதலிடம் பெற்றவர். ஆனால் முக்கியமான பெரிய போட்டிகளில் இரண்டாமிடம் பெற்றார். இந்த நிலை அவருக்கு கஷ்டமாக இருந்தது. எனவே உடலில் சோர்வு இருந்தாலும், "நல்லதே நடக்கும்" என்று எண்ணிக்கொண்டு சிந்தனையில் பின்வாங்காமல் நீந்த ஆரம்பித்தார். இந்த விடாமுயற்சியால் 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் நீந்திய முதல் வீராங்கனை என்ற பெயர் பெற்றார்.
ஆங்கில அகராதியை முதலில் உருவாக்கியவர் சாமுவேல் ஜான்சன். இந்த அகராதியை உருவாக்க அவர் எடுத்துக்கொண்ட காலம் முப்பத்து ஆறு ஆண்டுகள். ஆனால், அவர் இறந்து 13 வருடம் கழித்துத்தான் இந்த அகராதியின் முக்கியத்துவத்தை உலகம் கண்டது. சாமுவேல் ஜான்சன் அடிக்கடிக் கூறியது, "வாழ்க்கையின் மகத்தான சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல, விடா முயற்சியினால் செய்யப்பட்டவையே" என்பதாகும்.
சில பெரிய முயற்சிகளும் வெற்றிக்கு அருகில் தோல்வியைத் தரலாம். ஆனாலும் இடைவிடாது முயல்பவர்கள்தான் அந்தத் தோல்விகளையும் தோற்கடித்து வெல்கிறார்கள். நாம் முயற்சி செய்து விட்டோம் அது பலன் அளிக்கவில்லை என்று மட்டும் நாம் சோர்வடைந்து விட்டால் போதும் அதுவே நமக்கு மிகப்பெரிய தோல்வி. கடுமையான உழைப்புடன் விடாமுயற்சி மட்டுமே நம்மை உயர்த்தும். உழைப்பையே வெல்லலாம். நாம் அறிந்துகொள்ள வேண்டியவற்றை அனுபவத்தின் மூலமாகத்தான் அறிகிறோம்.