நகைச்சுவையால் தேர்தலில் வெற்றி பெற்றவர்னு சொன்னா நம்புவீங்களா?

He won the election with jokes?
He won the election with jokes?
Published on

கைச்சுவை இல்லாதிருந்தால் உலகத்தில் யாருமே இன்பமாக வாழ்ந்திருக்க முடியாது. சிரித்து வாழ வேண்டும் என்று சொல்வதன் அவசியம் மனிதனுக்கு மூப்பு சீக்கிரமே எட்டிப் பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான். சிரிக்கும்போதுதான் ஒரு மனிதனின் முகத் தசைகள் செழிப்பு அடைகின்றன. ஒரு மனிதன் சிரிக்கும்பொழுது தான் முகச் சுருக்கம் நீங்கி முகமே அழகு பெறுகிறது. எந்த கடினமான இதயத்தையும் இலகுவாக்குவது நகைச்சுவைதான். எப்பொழுதும் எதையாவது சிந்தித்து கொண்டு இருப்பவர்களை சட்டென்று சிரிக்க வைப்பது நகைச்சுவைதான். 

சிறந்த தலைவர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் என்று நகைச்சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. ஒரு  நகைச்சுவை அரசியல் தலைவரை போட்டியில் வெற்றிபெற வைத்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் இது. 

ஒருமுறை அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் நிக்சனும் கென்னடியும் போட்டியிட்டார்கள். 

பெண்கள் நிறைந்த கூட்டம் ஒன்றில் நிக்சன் பேசும்போது கென்னடி சொல்வதை கேட்காதீர்கள். அவர் பேசுவதெல்லாம் பொய் என்றார். பின்னர் கென்னடி பேசும்போது இந்த 'கூட்டத்தில் உள்ள பெண்களைப் பார்த்து நீங்கள் அழகானவர்கள் என்று கூறுகிறேன். இதைத்தான் நிக்சன் பொய்யாக சொல்கிறார்' என்று நகைச்சுவையாக முடித்தார். 

இதைக்கேட்டவுடன் நிக்சன் மட்டுமின்றி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் கென்னடி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஒரு முறை 1846 ஆம் ஆண்டு ஆபிரகாம் லிங்கன் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது பீட்டர் கார் ரேட் என்ற புகழ்பெற்ற பாதிரியார் அந்த ஊரில் இருக்கிற சர்ச்சுக்கு பிரசங்கம் செய்ய வந்திருக்கிறார். லிங்கனும் பிரசங்கத்துக்கு போயிருந்திருக்கிறார். சொர்க்கத்திற்குச்  செல்ல விரும்புபவர்கள் யார் என்று பாதிரியார் கேட்க, எல்லோரும் எழுந்து நிற்க, லிங்கனைப் பார்த்து ஓஹோ இவர் நரகத்துக்கு போக விரும்புகிறார் என்று நினைத்து, நரகத்திற்கு போக விரும்புபவர்கள் யார் என்று கேட்க அப்போதும் லிங்கன் எழுந்திருக்கவில்லையாம். 

இதையும் படியுங்கள்:
எண்ணிக்கை முக்கியமல்ல... உற்சாகம் தரும் ஊக்கம்தான் முக்கியம்!
He won the election with jokes?

பாதிரியார் அவரைப் பார்த்து நீங்கள் சொர்க்கத்திற்கும் செல்ல விரும்பவில்லை. நரகத்திற்கும் செல்ல விரும்பவில்லை. அப்படி என்றால் எங்குதான் செல்ல விருப்பம் என்று கேட்க,

லிங்கன் தற்சமயம் தேர்தலில் ஜெயித்து பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது மட்டும்தான் என் விருப்பம் என்றாராம் சிரித்துக் கொண்டே. பாதிரியார் உட்பட அனைவரும் சிரித்து விட்டார்களாம். 

ஆக இப்படி எந்த கடின உள்ளத்தையும் மென்மையாக்குவது நகைச்சுவை ஒன்றே என்பதை நினைவில் கொள்வோம். சிரிப்பே வரவில்லை என்றால் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, நாகேஷ், போன்றவர்களின் ஜோக்கைக் கேட்டு சிரியுங்கள். செய்யும் வேலையை சிறப்புடன் செய்யலாம். நாம் சிரிப்பதோடு மற்றவர்களையும் நம் சிரிப்பு தொற்ற வைக்கும். அதற்கு நகைச்சுவைக்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வலம் வருபவர்களை சுற்றி ஒரு பெரிய நண்பர் கூட்டமே இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com