நாம் வெகுநாட்கள் காத்திருந்த நாள் வந்துவிட்டது. 2023ம் ஆண்டு உங்கள் வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள் வந்து ‘எப்படா’ இந்த ஆண்டு முடியும் என்று எண்ணும் அளவிற்கு கடந்த ஆண்டு அமைந்திருக்கலாம். 2024ம் ஆண்டின் முதல் நாளான புத்தாண்டை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த நாள் முடிந்தவுடன் வழக்கம்போல் நமது வேலைகளை செய்ய ஆரம்பிக்கும்போது பல சாவல்கள் மற்றும் பல பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேரிடும். அதற்கு நாம் தயாராவது அவசியமல்லவா?
சிலர் நினைப்பார்கள், இந்த வருடம் நிச்சயம் நமக்கு நல்ல வருடமாகத் தான் இருக்கும் என்று. நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், அந்த நம்பிக்கை உடையும் போது அதனை எப்படி சமாளிப்பது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளவது அவசியம். இந்த புத்தாண்டை சந்தோசமாக களிக்க இந்த தத்துவங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
1. உங்களுடைய கஷ்டங்களுக்கும், கஷ்டம் கொடுப்பவர்களுக்கும் “டாட்டா, டாட்டா “கூறி அனுப்பி வைய்யுங்கள்.
2. உங்கள் வளர்ச்சி, சிரிப்பு, மறக்கமுடியாத நினைவுகள் அனைத்திற்கும் நன்றி சொல்லிவிட்டு, இந்த ஆண்டிலும் கூடவே பயணிக்க பிரார்த்தனை செய்யுங்கள்.
3. இனி வரும் இந்த ஆண்டின் நாட்கள் உங்கள் வாழ்வில் நிறைய வாய்ப்புகளைத் தரும் என்ற நம்பிக்கையில் அடியெடுத்து வைய்யுங்கள்.
4. ‘நடக்காது’ அல்லது ‘செய்யமுடியாது’ போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கைவிடுங்கள்.
5. ஒவ்வொரு முடிவும் நல்ல தொடக்கத்திற்கே வழிவகுக்கும். பழைய ஆண்டிற்கு மட்டுமல்ல உங்கள் வாழ்வில் தேவையற்ற 'சிலவற்றிற்கும் முடிவைக் கொண்டு வாருங்கள்.
6.உங்களுடைய வெற்றியும் சாதனைகளும் உங்களிடம் தான் உள்ளது. அதற்கான சாவியைக் கண்டுப்பிடியுங்கள்.
7. இந்த ஆண்டு நன்றாக இருக்குமா இல்லையா என்பது உங்கள் கையில் தான் உள்ளது. ‘சூழ்நிலை’ எனக் கூறுவது உங்கள் தோல்விக்கு நீங்கள் சொல்லும் காரணமே.
8. எந்த சுபநாட்களிலும் உங்களுடைய வாழ்த்துக்களை மற்றவர்களிடம் தெரிவியுங்கள். நேர்மறை எண்ணங்களின் உறைவிடம் அதுவே.
9. இந்த ஆண்டு அதிகம் பயணம் செய்யுங்கள், மக்களிடையே நிறைய தொடர்புக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் சாதனைகளின் முக்கியமானப் படிக்கட்டுகள்.
10. வெற்றியும் தோல்வியும் நிரந்தரமில்லை, முயற்சியே நிரந்தரம் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
11. சோர்வாக இருக்கும்போது ஊக்குவிக்கும் பாடல்களைக் கேளுங்கள். மற்றவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சோர்வும் ஒரு தொற்று நோயே.
12. கோபப்படும் முன் விளைவுகளை எண்ணிப் பாருங்கள். ஒருவேளை விளைவு, உங்கள் மன அழுத்தம் தீர்வதற்கான வழியென்றால் கோபப்படுவதிலும் தவறில்லை.
13. முதலில் உங்களுக்கே முன்னுரிமைக் கொடுங்கள். அடுத்ததுதான் யாராயினும். இது சுயநலம் அல்ல சுயஅன்பு.
14. காயம் பட்டால் மற்றவரிடம் கூறி ஆறுதல் வார்த்தைகளைக் கேட்க நினைக்காதீர்கள். இங்கு சிரிப்பவர்கள் தான் அதிகம். அழுதாலும் தனிமையில் அழுங்கள். கூட்டத்தில் சிரியுங்கள்.
15. தன்னம்பிக்கை உணர்வை வளர்க்க உங்கள் உடையிலும், பேச்சிலும், நடையிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயம் போகும். பின் தன்னம்பிக்கை தானாக வளரும்.
இந்த 15 தத்துவங்களைப் புரிந்துக்கொண்டால் , இந்த புத்தாண்டு நிச்சயம் உங்களுக்குத் தரும் புது வாழ்வு.