உங்களிடம் இந்த 5 பழக்கங்கள் இருந்தால் நீங்கள் மிகவும் பலவீனமானவர் என்று அர்த்தம்… உடனே மாற்றுங்கள்!

hidden-signs-of-insecurity
hidden-signs-of-insecurity
Updated on

வாழ்க்கையில் எல்லாருக்கும் எப்போதாவது ஒருமுறை நம்மால் இந்த வேலையை செய்ய முடியுமா என்ற சந்தேகம் வருவது சாதாரணமான ஒரு விஷயம்தான். ஆனால் எதற்கெடுத்தாலும் தேவையற்ற பயம், மற்றவர்களை பார்த்து ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை என்று எப்போதுமே இருந்தால் அது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பெரிய பிரச்சனை. 

இதை ஆங்கிலத்தில் இன்செக்யூரிட்டி (Insecurity) என்று சொல்வார்கள். நம்மில் பலருக்கும் நமக்குள்ளேயே இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே ஆரம்பத்தில் தெரிவதில்லை. வெளியில் நண்பர்களிடம் தைரியமாக இருப்பதை போல காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒருவிதமான பாதுகாப்பற்ற உணர்வு அவர்களை சைலண்டாக அரித்துக்கொண்டே இருக்கும். 

உங்களை நீங்களே தாழ்த்தி நினைக்கும் அந்த மோசமான மனப்பான்மை உங்களுக்குள் இருக்கிறதா என்பதை சில முக்கியமான அறிகுறிகள் மூலம் எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிடுவது!

சோஷியல் மீடியாவை திறந்தாலே மற்றவர்கள் போடும் டூர் போட்டோக்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பார்த்து உங்களுக்குள் ஒருவிதமான விரக்தி ஏற்பட்டால் அது முதல் அறிகுறியாகும். அவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அவர்களின் வாழ்க்கையோடு உங்களை அடிக்கடி ஒப்பிட்டு பார்ப்பது மிகப்பெரிய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. உங்கள் பலத்தை மறந்துவிட்டு மற்றவர்களின் வெற்றியை பார்த்து வருத்தப்படுவது உங்கள் நிம்மதியை முற்றிலுமாக கெடுத்துவிடும்.

மற்றவர்களை திருப்திப்படுத்த நினைப்பது!

எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக உங்களுக்கு துளியும் பிடிக்காத விஷயங்களை கூட மற்றவர்களுக்காக செய்வது இன்னொரு முக்கியமான அறிகுறி. நாம் இதை செய்ய மறுத்தால் யார் என்ன நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் உங்களுக்கு தேவையான உரிமைகளை கூட கேட்க தயங்குவீர்கள். நோ சொல்ல வேண்டிய இடங்களில் கூட தலையாட்டி வைப்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு மிகப்பெரிய தப்பாகும்.

இதையும் படியுங்கள்:
சுய மதிப்பீட்டின் மூலம் நம்மை அறிவது எப்படி?
hidden-signs-of-insecurity

எளிதில் கோபப்படுவது மற்றும் பொறாமை!

யாராவது உங்களைப் பற்றி ஒரு சிறிய குறை சொன்னால் கூட உங்களால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவே முடியாது. உடனே அவர்கள் மீது அதீத கோபப்படுவது அல்லது தற்காப்புக்காக பெரிய சண்டை போடுவது இன்செக்யூரிட்டியின் உச்சக்கட்டம். அதேபோல உங்களை விட மற்றவர்கள் ஒரு சிறிய விஷயத்தில் முன்னேறினால் கூட அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள் ஒருவிதமான பொறாமை உருவானால் நீங்கள் பாதுகாப்பற்ற உணர்வில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பாராட்டுக்களை ஏற்க மறுப்பது!

யாராவது உங்களைப் பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றோ அல்லது உங்கள் வேலை அருமையாக இருக்கிறது என்றோ மனதார பாராட்டினால் அதை உங்களால் நம்பவே முடியாது. அவர்கள் உங்களை கலாய்ப்பதற்காக ஏதோ பொய் சொல்வதை போல உங்களுக்கு தோன்றும். உங்களின் சொந்த திறமை மற்றும் அழகின் மீதே உங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லாததால் தான் இப்படிப்பட்ட நெகட்டிவ் எண்ணம் உருவாகிறது.

இதையும் படியுங்கள்:
பீதி வேண்டாம்! மாதவிடாய் வலி எப்போது ஆபத்தானது? இதோ அறிகுறிகள்!
hidden-signs-of-insecurity

இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களிடம் இருந்தால் உடனே பயந்துவிட வேண்டாம். உங்களை நீங்களே முதலில் மனதார நேசிக்க பழகுவதுதான் இதற்கான ஒரே மருந்து. உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் நிறைகள் மற்றும் குறைகள் இரண்டும் இருக்கவே செய்யும். மற்றவர்களின் விருப்பத்திற்கு வாழாமல் உங்களுக்காகவும் உங்கள் சந்தோஷத்திற்காகவும் வாழப் பழகுங்கள். 

தினமும் உங்களை கண்ணாடியில் பார்த்து நீங்கள் மிகவும் தைரியமானவர் என்று சத்தமாக சொல்லிக்கொள்ளுங்கள். உங்கள் மீதான முழுமையான நம்பிக்கை அதிகரிக்கும் போது இந்த தேவையற்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் உங்களை விட்டு நிரந்தரமாக ஓடிவிடும்.

logo
Kalki Online
kalkionline.com