உத்வேகக் கதை: நந்தலாலா - நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி!

Honest IAS Officer tamil motivation story
Honest IAS Officer motivation story
Published on

.ஏ.எஸ். ஆவது அவ்வளவு சுலபம் அல்ல. கடினமான உழைப்பு அவசியம். அது மட்டுமல்ல. தற்போதைய நாட்டின் அரசியல், பொருளாதாரம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.

2 பரீட்சைகள். ஒன்று துவக்க பரீட்சை. பிரிலெமனரி பரீட்சை. பிறகு முக்கிய மெயின் பரீட்சை. இதில் தேர்ச்சி அடைவது மிகவும் கஷ்டமானது. தேர்ச்சி அடைந்தாலும் நேர்காணல் இருக்கும். படிப்படியாக முன்னேற வேண்டும்.

நந்தலாலா, டிகிரி வாங்கிய உடனே படிக்க ஆரம்பித்து விட்டார். துவக்க நிலை பரீட்சையில் 4 பாடங்கள் தேர்வு செய்ய வேண்டும். நந்தலாலா கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி விஞ்ஞானம் ஆகிய நான்கு பாடங்கைள தேர்வு செய்தார். அவர் அவசரப் படவில்லை. இந்த வருடம் எழுதுவது இல்லை என்று தீர்மானித்தார். தேர்வு செய்த பாடங்களில் சிறந்த அறிவு பெற வேண்டும் என்று நினைத்தார்.

படிக்க ஆரம்பித்தார். பக்கத்தில் புத்தகம், குறிப்பு எடுக்க நோட் எல்லாம் இருந்தது. தினமும் காலையில் 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தார். அம்மா, அப்பா தூங்கி கொண்டு இருந்தார்கள். நந்தலாலா ஒரு கப் காப்பி போட்டு குடித்துவிட்டுப் படிக்க ஆரம்பித்தார். அட்டவணை போட்டு பயிற்சி செய்தார்.

நந்தலாலாவின் படிப்பு அட்டவணை:

நேரம் செயல்பாடு

04:00 AM - 07:30 AM எழுதல், காபி & கணக்கு பயிற்சி

09:00 AM - 01:00 PM காலை நேரப் படிப்பு (11 மணிக்கு டீ)

02:00 PM - 04:30 PM மதிய நேரப் படிப்பு

05:00 PM - 08:00 PM மாலை நேரப் படிப்பு

08:30 PM - 10:00 PM அன்றைய பாடங்களை திருப்புதல் (Revision)

இப்படி ஒரு வருடம் படித்துவிட்டு துவக்க நிலை பரீட்சை எழுதினார். சராசரி 81 மதிப்பெண் பெற்றார். நந்தலாலா, அம்மா, அப்பா எல்லோருக்கும் சந்தோஷம். அடுத்து மெயின் எக்ஸம். பொது அறிவு, நாட்டு நடப்பு, தர்க்கம் போன்றவை உள்ள தேர்வு. நந்தலாலா எப்போதும் போல இந்த பரீட்சைக்கும் படித்தார். நன்கு எழுதினார். மதிப்பெண் 91%. இந்தியாவிலேயே முதல் ரேங்க். நந்தலாலா சந்தோஷம் அடைந்தார்.

அடுத்து நேர்காணல். சற்று கடினம். ஆனால், பயம் இன்றி தனது சிந்தனைகளை வெளிப்படுத்தினார். பதிலில் நேர்மை மற்றும் உண்மை இருந்தது. நேர்காணல் முடிந்த ஒரு வாரத்தில் நந்தலாலா ஐ.ஏ.எஸ். பட்டம் வாங்கி விட்டார். பயிற்சி முகாம். இதிலும் நந்தலாலா அசத்தினார்.

அவருக்கு முதல் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்தது. கல்வி அமைச்சகத்தில் செயலர் பதவி கிடைத்தது. ஜாயின் செய்து விட்டார். அது மே, ஜுன், ஜுலை பருவம். எல்லா கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடந்துகொண்டு இருந்தது.

கல்வி அமைச்சர் நந்தலாலாவிடம் ஒரு லிஸ்ட் கொடுத்து, "அவர்களுக்கு மெடிக்கல் சீட் தந்து விடுங்கள்" என்று சொன்னார். மேலும் ₹ 1 லட்சம் லஞ்சமாகக் கொடுத்தார். இது நந்தலாவிற்கு அடியோடு பிடிக்கவில்லை. தனது வேலையை நன்கு யோசித்து ராஜினாமா செய்தார். ராஜினமா செய்துவிட்டு அவர் சும்மா இருக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
இன்றே செய்யுங்கள்! - 'நாளை' என்ற மாயையை உடைத்தெறியுங்கள்!
Honest IAS Officer tamil motivation story

கல்வி அமைச்சர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். "இந்த அநியாயத்திற்காவே தனது வேலையை ராஜினாமா செய்தேன்" என்று வழக்கு போட்டார். இந்த வழக்கு ஊடகங்களில் வைரல் ஆனது. உயர் நீதிமன்றம் கல்வி அமைச்சரை கைது செய்ய சொல்லி உத்தரவு பிறப்பித்தது. அவருடைய வழக்கில் உண்மை தன்மை இருந்ததால், உயர் நீதிமன்றம் நந்தலாலவை மீண்டும் ஐ. ஏ. எஸ். ஆக உத்தரவு பிறப்பித்தது.

மீண்டும் நந்தலாலா (Honest) ஐ.ஏ.எஸ். அதிகாரி…!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com