பிறர் சிரிப்பிற்கு பின் இருக்கும் அழுத்தத்தை எவ்வாறு உணரலாம்?

Smiling to hide sadness
Smile - Laughter
Published on

‘சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே’ - சிரிப்பு நம் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. அது பல நேரங்களில் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனதில் இருந்து தோன்றும் ஒருவித உணர்ச்சியின் வெளிப்பாடாகும். ஆனால், பலர் தங்கள் சோகத்தை மறைக்க இந்தச் சிரிப்பையே ஒரு கவசம்போல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது நல்லதா? கெட்டதா? எப்படி நாம் அதை உணரலாம்... வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

சிரிப்பிற்கு பின் இருக்கும் அழுத்தத்தை எப்படி உணரலாம்:

தொடர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருக்கும் ஒரு நபரின் மனதில் மறைந்திருக்கும் சோகத்தை அடையாளம் காண்பது சவாலான விஷயம். ஆனால், அவர்களிடமிருந்து வெளிப்படும் சில நுட்பமான குறிப்புகள் அவர்களின் உண்மையான உணர்ச்சி நிலையை வெளிப்படுத்தும். எடுத்துக்காட்டிற்கு வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருப்பது, கண் தொடர்புகளைத் தவிர்ப்பது அல்லது சில இடங்களில் தேவையற்ற கட்டாயப் புன்னகையைக் காட்டுவது போன்ற அவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பது இதன் குறிகாட்டிகளாகும். கூடுதலாக, அவர்களின் உடல் மொழியைக் கவனிக்கும்போது தேவையற்ற படபடப்பு போன்ற அவர்களின் உணர்ச்சி வேறுபாடுகளைக் கொண்டு அவரது மன அழுத்தத்தை நம்மால் கணிக்க முடியும்.

இந்த நடிப்பு சரியா தவறா?

சோகத்தை மறைக்கும் அவர்களின் செயல் சரியா தவறா என்பது அவரவர்களின் காரணங்கள் மற்றும் சூழலைப் பொறுத்தது. சிலர் ஒரு நேர்மறையான சூழ்நிலையைப் பராமரிக்க அல்லது மற்றவர்கள் தங்கள் பிரச்னைகளைச் சுமக்காமல் இருக்க புன்னகைக்கலாம். இருப்பினும், இந்த நடத்தை நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் அது அவர்களின் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். உணர்ச்சிகளை அடக்குவது காலப்போக்கில் அதிக மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.

மேலும், சோகத்தை மறைக்கும் செயல் நீடிப்பது அவர்களின் ஆதரவை தேடுவதற்கும் மற்றவர்களுடன் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் தடையாக இருக்கும். இது அவர்களைத் தனிமைப்படலாம்; பல விஷயங்களைச் சரியானதாகவே இருந்தாலும் தவறாக புரிந்துகொள்ள வைக்கலாம். இதுவே அவர்களின் சோக உணர்வுகளை மென்மேலும் அதிகப்படுத்தலாம்.

நம் ஆதரவை எப்படி வெளிப்படுத்தலாம்?

இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட மறைமுகமாக ஒருவருக்கு உதவ நுட்பமான மற்றும் ஆதரவான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். அவர்கள் விரும்பினால், அவர்கள் தங்கள் உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தால், நீங்கள் அதற்கான நேரத்தை ஒதுக்கலாம், அதற்கேற்ற பாதுகாப்பான சூழலை அவர்களின் விருப்பத்தின் பேரில் உருவாக்கிக்கொள்ளுங்கள். அவர்கள் ரசிக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். அதுவே அவர்களின் உற்சாகத்தை உயர்த்தும். அது நடைபயிற்சியோ, திரைப்படம் பார்ப்பதோ அல்லது ஒன்றாக பொழுதுபோக்கில் ஈடுபடுவது போன்று அவர்களின் நல்வாழ்வில் சற்று உண்மையான அக்கறை காட்டிக்கொண்டே இருங்கள்.

இதையும் படியுங்கள்:
நிபந்தனை இன்றி நேசிப்போமா!
Smiling to hide sadness

நேர்மறையான உரையாடல்களை ஊக்குவித்தல் மற்றும் மென்மையான ஆதரவை வழங்குவது ஆகியவை பிறர் மறைத்து வைத்திருக்கும் சோகத்திலிருந்து அவர்கள் விடுபட உதவியாக இருக்கும். அவர்களின் சுயமரியாதையை அவர்களுக்குள் அதிகரிக்க அவர்களின் முயற்சிகள் மற்றும் சாதனைகளைப் பாராட்டுங்கள், இது சில தருணங்களில் அவர்களின் பலத்தை அவர்களுக்கு நினைவூட்டும். சில சமயங்களில் பிறர் மேல் நாம் காட்டும் இரக்கம் மற்றும் மறைமுக பரிதாபம் போன்ற எளிய சைகைகள் ஒருவரின் உணர்ச்சி நிலையில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம். மேலும், அவர்களின் மனம் தனிமையாக உணர்வதிலிருந்து வெளியேறி, குணமடைவதை நோக்கிய பயணத்தில் அவர்களைக் கொஞ்சம்கொஞ்சமாக நகர்த்திச் செல்லும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com