இந்திய பில்லியனர்கள்.. ஓய்வு நேரம்.. இப்படிதானா? 

Billionaire
How indian Billionaires Spend Their Free Time?
Published on

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பில்லியனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த பில்லியனர்கள் தங்கள் பணத்தை பல விஷயங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால், அவர்கள் தங்களின் ஓய்வு நேரத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பது பற்றி பலருக்குத் தெரியாது. இந்தப் பதிவில் இந்தியாவில் பில்லியனர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

பல இந்திய பில்லியனர்கள் தங்கள் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். தினமும் உடற்பயிற்சி செய்வது, யோகா, தியானம் போன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். சிலர் தனிப்பட்ட பயிற்சியாளர்களை வைத்துக்கொண்டு தங்கள் உடல் தகுதியை மேம்படுத்துகின்றனர். 

பயணம் என்பது பல பில்லியனர்களின் பொழுதுபோக்கு. அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து, புதிய இடங்களை ஆராய்ந்து, வெவ்வேறு கலாச்சாரங்களை அறிந்து கொள்கின்றனர். சிலர் தங்கள் சொந்த ஜெட் விமானங்களில் விரும்பும் நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர். 

சில இந்திய பில்லியனர்கள் கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் கலைக்கூடங்களை பார்வையிடுவது, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, நாடகங்களைப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் கலைப் பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

பெரும்பாலான பில்லியனர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடுகின்றனர். அவர்கள் குடும்ப விழாக்களில் கலந்து கொள்வது, நண்பர்களுடன் இரவு உணவுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 

சமூக சேவைகளில் ஈடுபடுவது பில்லியனர்களுக்கு அதிகம் பிடிக்கும். அவர்கள் தங்கள் செல்வத்தை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற சமூக நலத்திட்டங்களுக்கு நன்கொடையாக அளிக்கின்றனர். சிலர் தாங்களாகவே முன்வந்து சமூக நலத்திட்டங்களில் கலந்து கொண்டு பிறருக்கு உதவி செய்கின்றனர். 

இதையும் படியுங்கள்:
தக்காளியை சில நாட்கள் கெட்டுப்போகாமல் பத்திரமாக வைக்க சில டிப்ஸ்..!
Billionaire

குறிப்பிட்ட சில பில்லியனர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் புதிய தொழில் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது பற்றி தெரிந்து கொள்கின்றனர். புதிய தொழில்கள் மற்றும் சந்தை போக்குகளை ஆராய்ந்து புதிய தொழில் முனைவோர் நிறுவனங்களை நிறுவுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

இப்படி பல விதங்களில் இந்தியாவைச் சேர்ந்த பில்லியனர்கள் தங்களது ஓய்வு நேரத்தை செலவிடுகின்றனர். முடிந்தவரை அவர்களது வாழ்க்கைமுறை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்படியே தங்களின் நேரத்தை பயன்படுத்துகின்றனர். அதனால்தான் அவர்கள் பிறரை விட பணக்காரர்களாக இருக்கின்றனர்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com