நமது வாழ்க்கை நேரத்தால் ஆனது எப்படி?

How is our life made of time?
Time
Published on

காலம் பொன் போன்றது என்பார்கள். அது உண்மைதான். நாம் செலவழிக்கும் ஒவ்வொரு வினாடியும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். கால விரயம் செய்பவர்கள் என்றைக்குமே வாழ்க்கையில் முன்னேறவும் முடியாது. வெற்றியின் என்ற இலக்கையும் தொட முடியாது. 

நாம் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்லவேண்டும் என்றால், நாம் நிச்சயமாக நேரத்தின் மதிப்பை உணரவேண்டும். நாம் பொழுதுபோக்குக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கலாம் தவறில்லை. ஆனால் நேரமே பொழுது போக்காக ஆகிவிடக்கூடாது.

எனக்கு நேரமில்லை நான் ரொம்ப பிஸி என்று சொல்லி வீணாக பொழுது கழிப்பவர்கள் நம்மில் பலர் உண்டு. ஆனால், அவர்கள் பின்னால் வருத்தப்படுவார்கள். உரியதை உரிய நேரத்தில் செய்தால் நமக்கு நிச்சயம் எல்லாம் கிடைக்கும்.

வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில், வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும்.

இதோ! நேரத்தின் மதிப்பு என்ன என்று தெரிய ஒன்பது வழிகள்.

ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம்  வென்றவரைக் கேளுங்கள்.

ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று தூக்கில் இடப்படும் கைதியிடம் கேளுங்கள்.

ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று உயிர் காக்கப் போராடும் மருத்துவரிடம் கேளுங்கள். 

ஒரு நாளின் மதிப்பு என்னவென்று  அன்று வேலை கிடைக்காமல் போன தினக்கூலித் தொழிலாளரைக் கேளுங்கள்.

ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வாரப் பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்றுக் குறைப் பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.

ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று தேர்வில் தோல்வி அடைந்த மாணவனைக் கேளுங்கள்.

ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

நீங்கள் வாழ்க்கையை நேசிக்கிறீர்கள் என்றால், நேரத்தை வீணாக்காதீர்கள். நேரம் என்பது வாழ்க்கையால் ஆனது. உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே போதும்.

காலம் பொன் போன்றது என்பதை மனதில் உறுதிப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு வினாடியையும் நீங்கள் பொன்னான வினாடியாக நினைத்து வாழ்ந்து பாருங்களேன், வெற்றி உங்கள் பின்னால் வரும் வாழ்க்கையின் உச்சத்தையே தொடுவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com