தவறு செய்தவர்களை மன்னிப்பது எப்படி? இந்த 6 வழிகள் உண்டு!

Two persons hug each other
Forgiveness

நமக்கு மனரீதியாக பிரச்சனையை ஏற்படுத்திய ஒருவரை மன்னிப்பது ஒரு சவாலான செயலாக இருக்கலாம். ஆனால் அது சில நேரங்களில் நமது சொந்த நல்வாழ்வுக்கு மிகவும் அவசியம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. தாக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்

பிறர் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறினால் உங்களுக்கு எந்தெந்த விதத்தில் தாக்கங்கள் ஏற்பட்டன என்பதை பற்றி சிந்தித்து பாருங்கள். உங்களை மனதளவில் பாதித்துள்ளதா, அதனால் பல நல்ல விஷயங்களை நீங்கள் இழக்க நேரிட்டதா போன்று, இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை எடைபோட்டு அதற்கேற்றவாறு உங்கள் முடிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

2. தவறு செய்தவரின் நிலையை புரிந்து கொள்ளுங்கள்

தவறு செய்தவரின் மனநிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்படி புண் படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள அவர்களை வழி நடத்தியது எது? போன்றவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் அவர்கள் மேல் காட்டும் பரிதாபம் அவர்கள் செய்த தவறுகளை மட்டும் மன்னிப்பது பற்றியது அல்ல, ஒரு மனிதாபிமான அடிப்படையில் அவர்களிடம் உள்ள குறைகளை பற்றி அறிவதே. யாரும் பிறப்பிலே கெட்டவனாக வருவதில்லை, ஏதோ ஒரு சூழ்நிலை தான் அவர்களை மாற்றுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

3. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

தவறு செய்தவர் உங்களை அணுகியதும் உங்களால் அவர்களை உடனடியாக மன்னிக்க முடியாவிட்டாலும், உங்கள் உணர்வுகளை தவறு செய்தவரிடம் தெரிவியுங்கள். அதற்கு நீங்கள் அவர்களை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும் என்று தேவையில்லை. மாறாக கடிதம் எழுதுவது, மெசேஜ் செய்வது போன்று, உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால், அவர்களை மேலும் சோதித்து பார்க்க முடியும். காலப்போக்கில் அவர்கள் உண்மையிலே மனம் மாறினார்களா என்பதில் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

4. மன்னிப்பு

மன்னிப்பு என்பது நாம் நல்ல சுயநினைவோடு இருக்கும் போது எடுக்கும் முடிவு. நம்முள் இருக்கும் மனக்கசப்பைக் கைவிடுவதற்கும், பிறரிடம் உள்ள உறவு விரிசலை குணப்படுத்துவதற்குமான பாதையை தீர்மானிக்கும் ஒரு கருவி போன்றதாகும். மன்னிப்பு என்பது ஒரு விஷயத்தை மறப்பது அல்லது மன்னிப்பது மட்டும் அல்ல. அது சில நேரங்களில் உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிச் சுமையை விடுவிக்கும் ஒரு செயலாக கூட இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அடுத்தவர்கள் என்ன செய்தாலும் அதையே நாமும் செய்வதில் என்ன பயன்!
Two persons hug each other

5. மனக்கசப்பை கைவிடுங்கள்

தவறு செய்தவர் உங்களின் மன்னிப்பை தேடி வரும் பட்சத்தில், பழிவாங்கல் அல்லது அநீதியை தட்டிக் கேட்க வேண்டும் போன்ற விஷயங்களை விட்டு விடுங்கள். ஏனெனில் இவை துன்பத்தை மட்டுமே நீடிக்க வைக்கும். அதனால் இந்நிலையில் இருந்து வெளிவர தியானம், பிரார்த்தனை போன்று மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளை செய்யுங்கள். இது உங்களை காயப்படுத்திய நபரின் மேல் தாங்கள் கொண்டுள்ள எதிர்மறை சிந்தனை மற்றும் உணர்ச்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் இருந்து வெளியேற்றிவிடும்.

6. தேவைப்பட்டால் பிறர் ஆதரவைத் தேடுங்கள்

ஒரு நல்ல முடிவை எடுக்க உங்களுக்கு தெரிந்த நல்ல ஆலோசகரை சந்திக்கலாம். காரணம் இது போன்ற வலியை அனுபவித்த மற்றவர்களுடன் பேசுவது உங்களால் ஒரு முடிவை அல்லது இதற்கு தேவையான வழிகாட்டுதலை பெற முடியும். சில நேரங்களில் மன்னிப்பு சம்பந்தமான சில சிக்கல்களைத் தீர்க்க தொழில்முறை உதவி (Professional counselors) கூட உங்களுக்கு நல்ல முடிவை எடுக்க உதவலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com