உங்களது இலக்கை அடைவதற்கான ஸ்மார்ட் வழிகள்! 

Goal setting
How to Fully Commit to a Goal

இலக்குகளை அமைப்பதென்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் வெறும் இலக்குகளை மட்டுமே நிர்ணயிப்பது போதாது. உண்மையிலேயே வெற்றிபெற அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு தேவை. ஒரு இலக்கில் வெற்றிபெற உங்களது நேரம், ஆற்றல் மற்றும் இலக்கிற்குத் தேவையான வளங்களில் முதலீடு செய்வது அவசியமானது. இந்த பதிவில் உங்களது இலக்கை அடைய எதுபோன்ற யுக்திகளை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். 

  • முதலில் ஒரு இலக்கை அடைய நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். எனவே, உங்களது இலக்கை முறையாக வரையறுக்க நேரம் ஒதுக்குங்கள். இந்த இலக்கு உங்களுக்கு ஏன் முக்கியமானது என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இது உங்களது இலக்குகளின் பின்னால் உள்ள உந்துதலை புரிந்துகொண்டு அதற்கு நேரத்தை செலவிட உதவியாக இருக்கும். 

  • பெரிய இலக்குகளை அடைவது கடினமாக இருக்கலாம். ஆனால் அதை சிறு சிறு இலக்குகளாக பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாக பெரிய இலக்கை நோக்கி நகர்த்திச் செல்லுங்கள். இந்த அணுகுமுறை உங்கள் முன்னேற்றத்தை கணிக்கவும், சிறு சிறு சாதனைகளைக் கொண்டாடவும் உதவும். ஒவ்வொரு சிறிய அடியும் உங்களது இறுதி இலக்கை அடைய கொண்டு செல்லும். 

  • ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்குங்கள். வடிவேலு சொல்வது போல நீங்கள் எதை செய்ய வேண்டும் என்றாலும் ப்ளானிங் மிக முக்கியம். பிளானிங் இல்லாமல் எதையுமே உங்களால் செய்ய முடியாது. இது உங்களது நேரத்தை எப்படி செலவிடப் போகிறீர்கள் என்பதற்கான தெளிவை ஏற்படுத்தும். 

  • உங்களது இலக்கை நோக்கிய பயணத்தில் ஏதேனும் பிரச்சனை என்றாலும், அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து செயல்படும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதை ஆங்கிலத்தில் Growth Mindset என்பார்கள். அதாவது நீங்கள் தோல்வி அடைந்தாலும், அது உங்களுக்கு பாடத்தை கற்றுத் தந்து, அடுத்த விஷயத்தை சிறப்பாக செய்வதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளது என சிந்திக்கவும். இந்த மனநிலை உங்களது இலக்கை நோக்கி நகர்ந்துச்செல்ல உதவியாக இருக்கும். 

  • நீங்கள் யாருடன் பழகுகிறீர்கள் என்பது உங்களது இலக்குகளை பாதிக்கலாம். எனவே உங்களது இலக்குகளுக்கு நெருக்கமான நபர்களுடன் பழகுங்கள். உங்களுக்கு உதவி செய்யும் நண்பர்களுடன் சேருங்கள். நீங்கள் துவண்டு போனாலும் உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நபர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களது நேர்மறையான சிந்தனை உங்களை தொடர்ந்து செயல்பட வைக்கும். 

இதையும் படியுங்கள்:
Retirement Planning Tips: உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! 
Goal setting
  • ஒரு இலக்கை அடைவதில் நேர நிர்வாகம் மிகவும் முக்கியமானது. நேரத்தை சரிவர பயன்படுத்துங்கள். உங்களது முன்னேற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகள் அல்லது கவனச் சிதறல்களைக் கண்டறிந்து அகற்றவும். உங்களது தினசரி வேலையை முறையாக கணக்கிட்டு, நேரத்தை வீணடிக்காமல் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள். 

உங்களது இலக்கை அடையும் வரை ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள். விட்டுக் கொடுப்பதால் உங்கள் வாழ்வில் எதுவும் மாறப்போவதில்லை. தொடர்ந்து முயற்சிப்பதால் ஏதோ ஒன்றை நீங்கள் அடையும் வாய்ப்புள்ளது. எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல், எல்லா சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு தைரியமாக முன்னேறுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com