யார் என்ன நினைப்பாங்கனு கவலையா? இந்த 5 டிப்ஸ் போதும், எல்லாரையும் கவரலாம்!

confidence
confidence
Published on

ஒருத்தரை முதல் தடவை சந்திக்கும்போது, அவங்க மனசுல நம்ம பத்தி ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தணும்னு நம்ம எல்லாருக்கும் ஆசை இருக்கும். நாம பேசுற விதம், நாம நடந்துக்கற விதம் இதெல்லாம் நம்மள பத்தி நிறைய விஷயங்களை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுக்கும். சில சமயம் நம்மள அறியாமையே நாம செய்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட நம்மள மத்தவங்ககிட்ட இருந்து தனித்து காட்டலாம். அப்படி, யாரை சந்தித்தாலும், அவங்களை கவரவும், அவங்க மனசுல நல்ல இடம் பிடிக்கவும் உதவும் சில பிராக்டிக்கலான வழிகள் என்னென்னனு இங்க பார்ப்போம்.

1. நீங்க மத்தவங்ககிட்ட பேசும்போது, அவங்க என்ன சொல்றாங்கன்னு முழு கவனத்தோட கேளுங்க. அவங்க பேசி முடிச்சதுக்கு அப்புறம் உங்க பதிலை சொல்லுங்க. நீங்க மத்தவங்க பேசுறதை கவனிக்கிறீங்கன்னு தெரிஞ்சா, அவங்களுக்கு உங்க மேல ஒரு மதிப்பு வரும். பேசறதை விட, கேட்கறதுதான் ஒரு பெரிய திறமை.

2. ஒருத்தரை சந்திக்கும்போது உங்க உடல் மொழியில தன்னம்பிக்கை இருக்கணும். நேரா நின்னு பேசுங்க, தோளை பின்னாடி தள்ளி, சிரிச்ச முகத்தோட பேசுங்க. மத்தவங்க கண்ணைப் பார்த்து பேசுறது ரொம்ப முக்கியம். தன்னம்பிக்கையோட இருக்கும்போது, மத்தவங்க உங்ககிட்ட பேசுறதுக்கு ஆசைப்படுவாங்க.

3. சிலர் அவங்களை பத்தி மட்டுமே பேசிட்டு இருப்பாங்க. அவங்க திறமை, அவங்க சாதனைகள்னு அவங்க மட்டுமே ஒரு மணி நேரம் பேசுவாங்க. இது மத்தவங்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். பேசும்போது நீங்க மட்டும் பேசாம, அவங்க என்ன செய்றாங்க, அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு கேளுங்க.

4. மத்தவங்களை கவரணும்னு செயற்கையா நடந்துக்காதீங்க. நீங்க நிஜமா எப்படி இருக்கீங்களோ, அப்படியே இருங்க. ஒருத்தங்க உங்ககிட்ட உண்மையா நடந்துகிட்டா, அதுவே அவங்க மேல ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும். பொய்யான நடிப்பு நீண்ட காலத்துக்கு இருக்காது.

5. மத்தவங்களை மனசார பாராட்டுங்க. ஒருத்தரோட டிரஸ்ஸிங் சென்ஸ், அவங்களோட நகைச்சுவை உணர்வு, அவங்களோட அறிவுனு ஏதாவது ஒரு விஷயத்தை பாராட்டுங்க. ஆனா, அந்த பாராட்டு உண்மையா இருக்கணும். உண்மையா பாராட்டும்போது, மத்தவங்களுக்கு உங்க மேல ஒரு நல்ல எண்ணம் வரும்.

இந்த சின்ன சின்ன விஷயங்களை நீங்க உங்க வாழ்க்கையில கடைபிடிச்சு பாருங்க. யார் என்ன நினைப்பாங்கன்னு கவலைப்படாம, நீங்க உங்க இயல்புநிலையில இருந்து, இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுனா போதும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com