
நல்லவற்றை நினைத்தால் நல்லவை மலரும். தீயவற்றை நினைத்தால் தீயவை பெருகும். நாம் நாள் முழுவதும் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம்.
உள் மனம், வெளிமனதில் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது. ஒரு பொருளையோ, நட்பையோ அல்லது செயலையோ “அது எனக்கு கட்டுபடியாகாது” என்று நாம் கூறுவோமாகில் அதை உண்மையாகவே உள்மனம் அதை ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படும்.
அதற்கு மாறாக ஒரு சிறந்த எண்ணத்தை தேர்தெடுத்து “நான் அதை வாங்குவேன், இந்த செயலை செய்து முடிப்பேன். அவர்கள் நல்லவர்கள். அவரோடு நட்புக்கொள்வேன், என்று மனத்தில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உள்மனம் அதை கண்டிப்பாக செயல்படுத்தும்.
நல்லவற்றை தேர்ந்தெடுக்கும் சக்தி நம்மிடம்தான் உள்ளது ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும், தேர்ந்தெடுப்போம். நட்பாக இருப்பதைத் தேர்வு செய்வோம். ஒத்துழைப்பாகவும், மகிழ்ச்சியாகவும், அன்பிற்கு உகந்தவராகவும், நட்பானவராகவும் இருப்பதை தேர்வு செய்வோம். இந்த உலகம் அவற்றை நம்மிடம் கொண்டு சேர்க்கும். ஒரு வியக்க தகுந்த ஆளுமையை வளர்த்துக்கொள்ள மிகச்சிறந்த வழி இதுதான்.
வெளிமனம் ஒரு வாயிற்காப்பாளனைப் போன்றது. அது உள்மனதை பொய்யான எண்ணப்பதிவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய பணியை செவ்வனே செய்து முடிக்கும். நாம் தேர்ந்தெடுக்கும் திறன்தான் நம்முடைய மாபெரும் சக்தி. மகிழ்ச்சியையும், வளத்தையும் தேர்ந்தெடுப்போம்.
நமக்கு துன்பம் விளைவிக்கும் சக்தி பிறருடைய தூண்டுதல்களுக்குக் கிடையாது. நம்முடைய எண்ண ஓட்டத்திற்குத்தான் அச்சக்தி உண்டு. மற்றவர்களின் எண்ணங்களையும், பேச்சுக்களையும் நிராகரிக்க வேண்டும் என்பதை நாம் தேர்வு செய்யலாம். மாறாக நல்லவற்றை மனதார மீண்டும் மீண்டும் சொல்லி வரலாம்.
நாம் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். உதாரணமாக “நான் தோற்று விடுவேன்; என் வேலையை இழந்துவிடுவேன்; என் உடல் நலம் தேறாது; போன்றவற்றை நாம் கூறக்கூடாது. உள்மனம் உண்மை எது என்று தெரியாமலே எல்லாவற்றையும் நம் வாழ்வின் அனுபவங்களைக் மாற்றிவிடும்.
இயற்கையின் எந்தவொரு சக்தியும் தீயது அல்ல. இயற்கையின் சக்திகளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நம்மை பொறுத்து தான் அமைகிறது. உலக மக்கள் அனைவரையும் நலமுடன் வாழ மற்றும் ஊக்கப்படுத்த நம் உள்மனம் பெரிதும் பயன்படுகிறது. “என் சொந்த உள்மனதின் சக்தி கொண்டு என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்று சொல்லிக் கொண்டிருப்பதனால் வெற்றி அடைய முடியும்.
நிலையான பேருண்மைகள் மற்றும் வாழ்வின் கொள்கைகளின் கண்ணோட்டத்தில் இருந்து சிந்திக்க துவங்கும். பயம், அறியாமை மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றை ஒழித்து கட்டுவோம். நமக்காக பிறரை சிந்திக்க அனுமதிக்க வேண்டாம். நமக்கு தேவையாதை நாமே சிந்தித்து நல்ல முடிவுகளை எடுக்கலாம்.
வெளிமனதில் நல்ல வாழ்க்கையை, அன்பை, ஆரோக்கியத்தை, ஆனந்தத்தை தேர்தெடுப்போம். நாம் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றையும் உள்மனம் உண்மை என்று ஏற்றுக்கொண்டு நம் அனுபவங்களாக வெளிபடுத்தும். நல்லதிர்ஷ்டத்திலும், வாழ்வில் அனைத்து ஆசீர்வாதங்களிலும் நம்பிக்கை வைப்போம், வளமாக வாழ்வோம்.