மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி?

How to keep your mind happy?
Lifestyle stories
Published on

சில நேரங்கள் நம்முடைய மகிழ்ச்சியானது நம்மிடம் இருந்து மட்டுமே வருவதில்லை. நம்மை சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால், நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனவே, நம்மை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இதைப் பற்றி தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

அந்த நாட்டின் சிறந்த கோதுமையை உற்பத்தி செய்கின்ற விவசாயியை பேட்டி எடுக்க ஒரு நிருபர் சென்றார். ‘எப்படி அவரால் மட்டும் தரமான கோதுமையை விளைவிக்க முடிகிறது?’ என்று அந்த நிருபர் கேள்வி கேட்டதற்கு அந்த விவசாயி கூறினார், ‘என் பக்கத்து வயலில் இருப்பவர்களுக்கும் என்னுடைய கோதுமை விதைகளை கொடுத்து பயிரிட சொல்லுவேன். அதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்’ என்று சொன்னார். இதைக்கேட்ட நிருபருக்கு ஒரே குழப்பம்.

‘அது எப்படி? அவ்வாறு செய்தால் அவர்களும் உங்களுக்கு போட்டியாக வந்துவிடுவார்களே? அவர்களும் உங்களைப் போலவே தரமான கோதுமைகளை விளைவிப்பார்களே?’ என்று நிருபர் கேட்டார். அதற்கு அந்த விவசாயி சொல்கிறார், ‘காற்று அடிக்கும்போது ஒரு செடியில் இருக்கும் மகரந்தம் ஒரு காட்டில் இருந்து எல்லாக் காட்டிற்கும் பரவும். எனவே, என்னை சுற்றியுள்ளவர்கள் தரக்குறைவான கோதுமையைப் பயிறிட்டால் அது மகரந்த சேர்க்கையின் மூலமாக என்னுடைய கோதுமையையும் பாழாக்கிவிடும். ஆகவே, ‘நான் தரமான கோதுமையை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், என்னை சுற்றியுள்ளர்களும் தரமான கோதுமைகளை உற்பத்தி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

இந்த கதையில் சொன்னதுப்போலத்தான். இது எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். நாம் அர்த்தமுள்ள, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், நம்மை சுற்றியுள்ளவர்களையும் சாந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பது நம்மை மட்டுமே சார்ந்தது இல்லை.

இதையும் படியுங்கள்:
நம்முடைய மதிப்பை நாம் உணர்ந்தால் போதும்!
How to keep your mind happy?

மகிழ்ச்சியை நாம் மட்டுமே தனியாக உருவாக்கிவிட முடியாது. எனவே, சுயநல சிந்தனையோடு யோசிக்காமல், உங்களை சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com