ஒரு நாளைக்கு 5 மணி நேரத்தை 3 நிமிடங்களுக்குள் சேமிப்பது எப்படி தெரியுமா? 

Time saving Tips.
Time saving Tips.

எனக்கு தெரியும், இந்தக் கேள்வியைப் பார்த்ததும் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்தை சேமிக்கலாமா? அதுவும் 3 நிமிடத்திலா? எப்படி சாத்தியம்? என நீங்கள் நினைத்திருப்பீர்கள். இன்னும் சிலர் இவன் ஏதோ கதை விடப் போகிறான் என சிரித்திருப்பீர்கள். ஆனால் நான் சொல்வது உண்மைதான். சரி வாருங்கள் இது எப்படி சாத்தியம் எனப் பார்க்கலாம். 

ஒரு விஷயத்தை நன்றாக சிந்தித்துப் பார்த்தால், நீங்கள் ஒரு வீட்டை கட்ட முயற்சிக்கிறீர்கள் என்றால் முதலில் என்ன செய்வீர்கள்? அந்த வீட்டை எப்படி கட்டலாம் என பிளானிங் போட்டு ப்ளூ பிரிண்ட் எடுப்பீர்கள் இல்லையா? அதைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் செய்யப் போகிறோம். “இதைத்தான் நான் ஏற்கனவே டெய்லி பிளானிங் முறையில் செய்கிறேனே” என நீங்கள் கேட்கலாம். ஆனால் டெய்லி பிளானிங்கில் நீங்கள் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என மட்டுமே குறிப்பிடுகிறீர்களே தவிர, அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

இப்போது நான் சொல்ல போகும் முறையைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 5 மணி நேரத்தை நீங்கள் தாராளமாக சேமிக்க முடியும். அதுவும் வெறும் மூன்றே நிமிடத்தை செலவழித்து. 

முக்கியத்துவத்திற்கு முன்னுரிமை: நீங்கள் ஒரு நாளில் செய்ய வேண்டிய வேலைகளில் எதை செய்வது எளிது என்பதிலிருந்து, எதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதற்கு மாறுங்கள். எளிதாக செய்யக்கூடிய விஷயங்களால் உங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதுவே கட்டாயம் செய்ய வேண்டிய கடினமான செயல்களை ஒவ்வொரு நாளும் திறம்பட முயற்சித்தால் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும். இதை முடிவெடுப்பதற்கு உங்களுக்கு ஒரு நிமிடம் போதும். 

Time Blocking: முக்கியமானதை முடிவு செய்த பிறகு அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். எந்தெந்த குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்களோ அந்த நேரத்தை முக்கியமான வேலையை செய்ய ஒதுக்குங்கள். இந்த குறிப்பிட்ட நேரத்தில் எவ்வித கவனச் சிதறல்களும் இல்லாமல் நீங்கள் நிர்ணயித்த வேலையை முழுமூச்சுடன் செய்ய வேண்டும். 

Batching: மொத்தமாக செய்ய முடிந்த வேலைகளை ஒன்றாக முடிக்க முயலுங்கள். அதாவது உங்களால் ஒருவரிடம் போனில் பேசிக்கொண்டே இணையத்தில் ஈமெயில்களை சரி பார்க்க முடியுமென்றால், அதை திறம்பட ஒரே நேரத்தில் செய்ய முயலுங்கள். இவற்றையும் தனியாக பிரித்து எப்படி செய்ய வேண்டும் என வரையறுத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
Dumbo Octopus: இது ஆழ்கடலின் அழகான அதிசயம்! 
Time saving Tips.

மேலே சொன்ன மூன்று விஷயங்களை பிளான் செய்வதற்கு உங்களுக்கு மூன்று நிமிடம் போதும். ஆனால் இதனால் உங்களுக்கு குறைந்தது 5 மணி நேரமாவது ஒரு நாளில் மிச்சமாகும். ஆனால், நீங்கள் முடிவு செய்த காரியத்தை அந்தந்த நேரத்தில் சரியாக முடித்தால் மட்டுமே உங்களது நேரம் சேமிக்கப்படும். 

இந்த வழிமுறை உங்களுக்கு உண்மையிலேயே நல்ல பலனைக் கொடுத்து உங்கள் ப்ரொடக்டிவிட்டியை அதிகரிக்கும். இந்த செயல்முறையில்,

  1. உங்களுடைய நேரத்தை கொள்ளையடிக்கும் விஷயங்களைக் கண்டறிந்து ஒதுக்குங்கள்.

  2. எந்த செயலை செய்யும்போதும் அது உங்களுக்கு தேவைதானா? என்ற கேள்வியை கேட்டுக் கொண்டு செய்யுங்கள்.

  3. உங்களால் சில வேலைகளை ஆட்டோமேட் செய்ய முடியும் என்றால் தொழில்நுட்ப உதவியுடன் ஆட்டோமேட் செய்யுங்கள். 

  4. சரியாக பிளான் செய்து எல்லா வேலைகளையும் முறையாக Schedule செய்யுங்கள்.

  5. இப்போது இல்லை என்றால் வேறு எப்போது தான் செய்யப் போகிறேன் என நினைத்துக்கொண்டு எல்லா வேலைகளையும் செய்யுங்கள்.

"இதன் மூலமாக 5 மணி நேரத்தை சேமிக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லையே" என நீங்கள் நினைத்தால், சரியான இலக்கை நிர்ணயம் செய்து முழுமூச்சுடன் செயல்பட்டால், இதைவிட அதிக நேரத்தை முழுதிருப்தியுடன் சேமிக்கலாம். அந்த நேரத்தை வேறு ஏதாவது உங்களை மேம்படுத்தும் விஷயங்களில் செலவிடலாம். 

எனவே இதை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com