வரும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக்கொள்வது?

How to take advantage of opportunities?
Lifestyle stories
Published on

ம் எல்லோருக்குமே வாய்ப்புகள் என்பது வரும். ஆனால் அது எந்த ஒரு சூழ்நிலையிலும் வரும். அந்த வரும் வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் எந்தத் துறையிலும் வெற்றி பெற்றுவிடலாம். இந்த வாய்ப்பு தேவை இல்லை அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறோம் என மற்றும் நினைக்க வேண்டாம். சிறிய வாய்ப்பாக இருந்தாலும் அதை செம்மைப்படுத்தி அந்த வாய்ப்பை பெரிய வாய்ப்பாக உருவாக்கும் திறமை நம்மிடம் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த சின்ன கதை

ஒரு பணக்காரப் பெண்மணி வீட்டில் பழங்காலத்தைச் சேர்ந்த அழகான ஒரு பூந்தொட்டி இருந்தது. அதன் அழகான தோற்றத்திற்கேற்ப அது இருந்த அறையையும் அழகுபடுத்திட, வண்ணம் தீட்டச் சிறந்த வண்ணம் பூசுபவர்களைத் தேடினாள் அப்பெண்மணி. பலரும் முயற்சிசெய்து தோற்றுப் போனார்கள். செய்தியை அறிந்த ஒருவர் முயற்சிக்கலாம் என்று அனுமதி கேட்டார். அப்பெண்மணி அந்த அறையின் ஒரு பகுதியில் முதலில் மாதிரியாக வண்ணம் தீட்டிக் காட்டுமாறு கேட்டாள். அந்த மனிதனும் அவ்வாறே செய்தபோது சிறப்பாக அமைந்தது. பணக்காரப் பெண்மணி அந்த வண்ணம் தீட்டுபவனிடம் வீடு முழுவதும் அழகுபடுத்த அனுமதித்தாள். அவனுக்கும் அதிகப் பணம் கிடைத்தது. கூடவே, அவனுக்கு நிறைய வாய்ப்பும் வந்தது.

ஒரு காலக்கட்டத்தில் தன் தொழிலை மகனிடம் விட்டு விட்டு ஓய்வுபெற நினைத்தான். மகன் தன் தந்தையிடம் "எப்படி முதலில் அந்தப் பணக்கார பெண்மணி வீட்டில் சாதித்தீர்கள்?" என்று கேட்டான். தந்தை சொன்னார் "முதலில் நான் பூந்தொட்டியை மெருகூட்டினேன். அதன்பிறகு அதற்கு இணையாக அறையை மெருகூட்டினேன்" என்று கூறினார். சிறிய பூந்தொட்டியைச் சிறப்பாக அழகூட்டியதால் பெரிய வாய்ப்பினைப் பெற்ற உண்மையை மகனுக்கு உணர்த்தினார்.

இதையும் படியுங்கள்:
யாரையும் குறை கூறக் கூடாது ஏன் தெரியுமா?
How to take advantage of opportunities?

நல்ல வாய்ப்புகள் நமக்கு எங்கிருந்து தொடங்கும் என்று அறுதியிட்டு, தேதியிட்டுச் சொல்ல முடியாது. கண்ணுக்குத் தெரியாமல் அது நம்மிடம் வந்து சேரலாம். எனவே, செய்கின்ற ஒவ்வொரு சிறிய செயலையும் நல்ல வாய்ப்புக்கான செயல் என்று கருதிச் செய்தால் நல்ல வாய்ப்புகள் விரைவில் நம்மையடையலாம். எதுவும் எப்போதும் தன்னால் செய்ய முடியும் என்று நினையுங்கள் என மன உறுதியோடு செயல்படுங்கள் எல்லாம் எல்லாமே சக்சஸ்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com