தனிமையை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது எப்படி தெரியுமா? 

How to use loneliness to our advantage?
How to use loneliness to our advantage?
Published on

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நம்முடைய வாழ்க்கை வேகமாகவும், பரபரப்பு நிறைந்ததாகவும் மாறிவிட்டது. நமது நேரம் மற்றும் கவனம் பல திசைகளில் இழுக்கப்படுகிறது. இதன் விளைவாக தனிமையை அனுபவிக்க நமக்கு குறைந்த நேரமே கிடைக்கிறது. பலர் தனிமை என்பதை ஒரு எதிர்மறையான விஷயமாகக் கருதுகின்றனர். ஆனால், அதை நமக்கு சாதகமாக பயன்படுத்தி வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முடியும். 

தனிமையின் நன்மைகள்: 

தனிமை நம்மைப் பற்றி சிந்திக்கவும், நமது வாழ்க்கையை மதிப்பீடு செய்யவும், நமது இலக்குகளை நிர்ணயிக்கவும் வாய்ப்பளிக்கிறது. நமது திறமைகள், மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளை நன்றாக ஆராய்ந்து சிந்திப்பதற்கு தனிமை பெரிதளவில் உதவுகிறது. 

தனிமை நம்மை புதிய யோசனைகளை உருவாக்கவும், புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், புதிய திட்டங்களைத் தொடங்கவும் ஊக்குவிக்கிறது. அதிகப்படியான சத்தம் மற்றும் குழப்பத்தில் இருந்து விலகி நமது கவனத்தை நம்மை சார்ந்த விஷயங்கள் மீது முழுமையாக செலுத்த தனிமையில் மட்டுமே முடியும். 

நமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களுடன் ஆழமான உரையாடலில் ஈடுபட்டு, உறவுகளை வலுப்படுத்த தனிமை ஒரு சிறந்த வாய்ப்பாகும். தனிமை நம்மைப் பற்றி நிறைய விஷயங்களை உணர வைக்கிறது. நமது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை கவனித்து வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய சரியான முடிவை எடுக்க நமக்கு உதவுகிறது. 

தனிமையை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகள்: 

நீங்கள் தனியாக இருப்பதை நினைத்து ஒருபோதும் கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு நாளும் அல்லது வாரத்தில் சில மணி நேரங்களை தனிமையாக இருக்க ஒதுக்குங்கள். இந்த நேரத்தில் நீங்கள் விரும்பும் விஷயங்களை செய்யுங்கள். புத்தகம் படித்தல், எழுதுதல், தியானம், நடைபயணம், ஓய்வு போன்றவற்றை தனிமையில் நீங்கள் செய்யலாம். 

தனிமையில் புதிய விஷயங்களை முயற்சி செய்யுங்கள். புதிய திறமைகளை கற்றுக்கொள்ள தயங்காதிர்கள். உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களைப் பற்றி சிந்திக்கவும். உங்களது திறமைகள், பலவீனங்கள், மதிப்புகள் போன்றவற்றை ஆழமாக சிந்தித்து அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான முயற்சியைப் பற்றி யோசிக்கவும். 

இதையும் படியுங்கள்:
தனிமை உணர்வை அனுபவிக்கும் பிள்ளைகள்… பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? 
How to use loneliness to our advantage?

தனிமையில் உங்களை சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்யுங்கள். தனிமை என்பது ஒரு வாய்ப்பு. அதை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்களின் உதவி இல்லாமல் உங்களது சொந்த எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளை உருவாக்குங்கள். 

எல்லா விஷயங்களுக்கும் பிறரையே எதிர்பாராமல், நீங்களாகவே சில விஷயங்களை செய்து அதன் உண்மையான அனுபவங்களை பெற்றுக் கொள்ளவும். இது உங்களை பல விஷயங்களை தைரியமாக செய்யும் உந்துதலைக் கொடுக்கும். இந்த உந்துதலைப் பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com