மனமிருந்தால் மார்க்கமுண்டு!

வேதாத்திரி மகரிஷி
வேதாத்திரி மகரிஷிimage credit - pinterest.com
Published on

னமிருந்தால் மார்க்கமுண்டு என்றொரு பழமொழி நமக்குத் தெரியும். எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் மனம் முக்கியம். அந்த மனம் இருந்தால், அந்தச் செயலைச் செய்ய ஏதாவதொரு மார்க்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக, பின்வரும் கதையைப் பார்ப்போம். 

வயதான ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு ஒரே மகன். தவறான தொடர்புகளால், குற்றங்களைச் செய்து, சிறைக்காலம் அனுபவித்துவந்தான். அப்போது பயிரிடும் காலம். விவசாயிக்கு வயதானபடியால், அவரால் தனது வயல்வெளியினை உழுவதற்கு போதிய தெம்பில்லை. எவ்வாறு தனது பெரிய வயல்வெளியினை உழப்போகிறேன் என்று வருத்தத்துடன் இருந்தார். அப்போது, அவருக்கு ஒரு கடிதம் வந்தது.

அன்புள்ள அப்பா,

நமது வயல்வெளியின் கீழே, நானும் எனது கூட்டாளிகளும், சேர்ந்து கொள்ளையடித்தப் பணங்களைப் புதைத்து வைத்துள்ளேன். இந்த முறை, நீங்கள் உழவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

உங்களின் வருத்தத்திற்கு காரணமான மகன்

இதைப் படித்தப் பின்பு, விவசாயியின் வருத்தம் இன்னும் அதிகமானது. முடிந்தால், உழமுடியும் என்று நினைத்த போதும். இப்படி தறிகெட்டுப்போன மகனால், உழமுடியவில்லையே என்று வருந்தினார்.

அப்போது, திடீரென, காவலாளிகள் படை, அவரது வயலில் நுழைந்தது. பெரிய பெரிய இயந்திரங்களுடன், அவர்கள், அவரது வயல்வெளியினை உழத்தொடங்கினர். ஆழமாக தோண்டினர். அப்போது விவசாயி, என்னவென்று வினவ, சிறையிலிருந்து வெளியேறும் எல்லா கடிதங்களையும் படித்துவிட்டுதான் நாங்கள் அனுப்புவோம். உங்களது மகனின் கடிதம் படித்தபடியால், இங்கு அந்தப் பணத்தினை உழுது தோண்டுகிறோம் என்றனர். ஓரிரு நாட்கள் உழுதுவிட்டு, ஏதும் அகப்படாத படியால், அவர்கள் வெளியேறினர்.

மகனிடமிருந்து, அடுத்தக் கடிதம் வந்தது.

அன்புள்ள அப்பா,

நான் உங்களுக்கு வாழ்க்கையில் எனது கடமையினை சரிவர செய்யவில்லை. இப்போது, சிறையில் வருந்துகிறேன். உங்களது வயதான காலத்தில், உழுவதற்கு சிறையிலிருந்து உதவ முடியாத படியால், வயல்வெளியில் பணத்தைப் புதைத்து வைத்துள்ளதாக பொய்யாக கடிதம் எழுதினேன். அதைக் காவலாளிகள் படிப்பார்கள் எனத் தெரியும். இப்போது, வயல்வெளி நன்றாக உழுதாகிவிட்டது. நீங்கள் இப்போது, தானியங்களை விதையுங்கள். அறுவடைக் காலத்திற்குள் நான் விடுதலை ஆகிவிடுவேன். இனி, உங்களுக்கு நல்லதொரு மகனாக கடமை ஆற்றுவேன்.

இப்படிக்கு,

உங்களது அன்புள்ள மகன்

இதையும் படியுங்கள்:
உங்கள் கனவை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வெற்றி!
வேதாத்திரி மகரிஷி

இந்தக் கதையினைப் படித்து, விவசாயி நெகிழ்ந்து போனார். இந்தக் கதையின் மூலம், சிறையிலிருக்கும் ஒரு மகனால் கூட, தந்தைக்கு உதவ வேண்டுமென்ற மனத்தின் காரணமாக, ஒரு மார்க்கத்தைக் கண்டுபிடித்து தந்தைக்கு உதவ முடிந்தது. 

இந்தக் கதையின் மூலம், ஒருவர் இன்னொருவருக்கு உதவ வேண்டுமென்று நினைத்தால், எங்கிருந்தாலும் உதவ முடியும். உதவ வேண்டுமென்ற எண்ணம்தான் முக்கியம். உடலால்தான் உதவ வேண்டுமென்பதில்லை. பணத்தாலும் உதவலாம். உடலாலும், பணத்தாலும் உதவ முடியாவிட்டால், பிரார்த்தனை கூட ஒரு வித உதவிதான். 

இதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். 

எண்ணம், சொல், செயலால் எல்லோருக்கும் எப்போதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிரு - வேதாத்திரி மகரிஷி

எனவே, நாம் எப்போதும் எவருக்கும் உதவி செய்ய நாட்டமாயிருந்து உதவ வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com