நம் திறமைகளை சரியான இடத்தில் பயன்படுத்தாவிட்டால்? இழப்புகள் யாருக்கு?

Talent
Talent
Published on

இந்த உலகில் திறமைகள் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான திறமை இருக்கும். எரிந்து கொண்டிருக்கும் ஒரு விளக்குக்கு சிறிய தூண்டுதல் தேவைப்படுவதைப் போல திறமைகளை மீண்டும் மீண்டும் தூண்டிவிட்டு நன்கு பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் பிரகாசமான ஒரு வெளிச்சத்தை பெறுகிறார்கள்.  பயன்படுத்தாதவர்களின் திறமை மெல்ல மெல்ல அழிந்து நாளடைவில் பயனற்று போய்விடுகிறது. 

திறமைகளை வளர்த்துக் கொள்வதைப் போன்று அதனை சரியான இடத்தில் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம். அதனால்தான் சிறு வார்த்தையை பயன்படுத்துவதற்கு கூட இடம், பொருள், ஏவல் பார்த்து பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள் முன்னோர்கள். 

அப்படிநமது திறமைகளை சரியான இடத்தில் பயன்படுத்தாவிட்டால் என்ன ஆகும் என்பதை இப்பதிவில் காணலாம்.

நீச்சல் வீராங்கனை ஒருவர் வழக்கமாக காலை நேரத்தில் நடை பயிற்சி செய்வதை போல அன்றும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அன்று இரவு தான் அந்த ஊரில் நல்ல மழை பெய்து ஆறு எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அவ்வாறு நடை பயிற்சி செய்யும் போது அவர் அந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். நடைப்பயிற்சி செய்த அந்த வீராங்கனை பாலத்தை நெருங்கும் போது அந்தப் பாலத்தின் கீழ் உள்ள நீரில் வயதான பெண்மணி ஒருவர் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டு கத்திக் கொண்டே வந்தார்.

காப்பாற்றுங்கள்!காப்பாற்றுங்கள்! என அந்த பெண்மணி கதறியது அந்த வீராங்கனையின் காதுகளில் விழுந்தும் அவருக்கு  என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்த வயதான பெண்மணியோ ஆற்று வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த  அந்த நீச்சல் வீராங்கனை ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை கூறினார். பின் மக்கள் அனைவரும் வந்து நீரில் இறங்கி தேடிப் பார்த்தனர். ஆனால் அந்த வயதான பெண்மணியோ வெகுதூரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டாள்.

ஊர் பெரியவர் அந்த வீராங்கனையை அழைத்து சம்பவம் நடந்து எவ்வளவு நேரம் இருக்கும், நீ ஏன் அப்பெண்மணியை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை, உனக்கு நீச்சல் தெரியாதா என்று கேட்டார்? அந்த நீச்சல் வீராங்கனையோ  எனக்கு நீச்சல் நன்றாகவே தெரியும், நான் நிறைய நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவில் பல பரிசுகளை பெற்றுள்ளேன் என்று கூறினாராம்.

அதைக் கேட்ட ஊர் மக்கள் அனைவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "அப்படியானால் நீ ஏன் அந்த வயதான பெண்மணியை காப்பாற்றவில்லை? நீ ஏன் நீச்சல் கற்றுக் கொண்டாய்?" என்று கேட்டாராம் ஊர் பெரியவர்.

இதையும் படியுங்கள்:
பணக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த 13 ரகசியங்கள்! 
Talent

அதற்கு அந்த நீச்சல் வீராங்கனையோ "நான் நீச்சல் கற்றுக் கொண்டது பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளும் பாராட்டுகளும் வாங்குவதற்காகவே. இப்போது வரை அப்படியே பழக்கப்பட்டு விட்டேன். அதனால் அந்த வயதான பெண்மணி நீரில் அடித்துச் செல்லப்பட்டு கதறும் போது எனக்கு அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணமே தோன்றவில்லை" என்று கூறினாராம்.

இதைக் கேட்ட பொதுமக்கள் அனைவரும் கடும் கோபமடைந்து அந்த நீச்சல் வீராங்கனையை நாடு கடத்தி விட்டார்களாம். இந்த நீச்சல் வீராங்கனையை போல தான் நாமும் நம்மிடம் உள்ள திறமையை பல நேரங்களில் பயன்படுத்தாமல் விட்டு விடுகிறோம். அதனால் இழப்புகள் என்பது நமக்கு மட்டுமல்ல, நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கும்தான். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com