Motivation Image
Motivation ImageImage credit -pixabay.com

விழித்திருந்தால் வெற்றி நிச்சயம்!

Published on

மீன் கண்ணைத் திறந்து  கொண்டே தூங்குமாம். இதில் ஆச்சர்யம் இல்லை மனிதர்களில் பலர் விழித்துக் கொண்டிருக்கும்போதே தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது. எப்படி எல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம். சுரண்டப்படுகிறோம். கொள்ளையடிக்கப்படுகிறோம் என்ற விழிப்புணர்வே பலருக்கும் இருப்பதில்லை.

ஒவ்வொரு கணமும் விழிப்பாக உள்ளவர்களே உன்னதமான வர்கள். சரியானவர்கள். நீங்கள் அப்படியா? நம் அனுமதியில்லாமல் சிலர் அத்துமீறி  நம்மை ஆக்ரமிப்பார்கள். முட்டாளாக்குவார்கள். நாமும் கண்ணைத் திறந்து கொண்டே இவற்றைக் கண்டு கொள்ளாமல் தூங்கி வழிந்தால் என்ன ஆவது.?

பசித்திரு தனித்திரு விழித்திரு என்றார் இராமலிங்கம் அடிகளார். இப்படி மூன்றுமாக இருந்தால் மூன்றின் முதவலெழுத்தும் ஆன பதவி நமக்கு உண்டு என்பார்கள் விழித்திரு என்ற சொல்லை உத்திஷ்ட என்கிறது பகவத் கீதை. எழு விழி என்பதே இந்த அறைகூவலின் அர்த்தம். நமது அறியாமைகள் யாவும் இருளே. தூக்கமே.விழிப்பு ஒன்றே விடியல். வெற்றியின் பூபாளம். பலநேரம் பல நீதிபதிகளும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் சாமியார்களின் சாம்ராஜ்ஜியத்தின் ஏமார்ந்து போவதைப் பார்க்கிறோம்.

ஓரு சாமியார் பல பேர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பஞ்சாமிர்தத்தில் இருந்து முருகன் விநாயகர் பொம்மைகளைக். கொடுப்பார் என்று புகழ்ந்து தள்ளினார்கள். அகன்ற பாத்திரத்தில்  சாமியார் பழங்கள் வெல்லம் போட்டார். தேனும் நெய்யும் ஊற்றினார். கொத்து கொத்தாக ஒரு கிலோ பேரீச்சம்பழத்தையும் போட்டார். பிசைந்து இந்தா என்று ஒரு அதிகாரி கையில் முருகன் சிலை கொடுத்தார். அவர் கன்னத்தில் போட்டபடி முருகா முருகா என்று வாங்கிக் கொண்டார். கொத்து கொத்தான பேரீச்சம்பழத்தில் பத்து முருகன் பொம்மைகளை வைக்கலாம். கண்ணைத் திறந்து கொண்டே கனவான்கள் தூங்கும் தேசம் இது. நாமும் உறங்கிவிட்டால் என்ன ஆவது?. கண்ணைத்திற. தோளை நிமிர்த்து. உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எப்போதும் விழிப்பாக இரு. மதத்தின் பெயரால் ஏமாற்று வேலைகள் ஒருபுறம். மறுபுறம் இளைஞர்களை பல அரசியல் கோஷ்டிகள் அமுக்கக் காத்திருக்கின்றன. சிக்கி விடாதே இளைஞனே!

இதையும் படியுங்கள்:
அழகைக் கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள் - ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
Motivation Image

கொஞ்சம் தூங்கினால் உன் தலை கத்தரிக்கப்படும். இளமையே தூங்கி வழியாதே. விழிப்பாக இரு. காலையில் கண்முழித்தால் மட்டும் போதாது.  ஒவ்வொரு விஷயத்திலும் விழிப்பாக இரு. Alert, AwakeAware, AriseAlarm என்று ஆங்கிலத்தில் அடுக்கடுக்காக விழிப்புணர்வை உணர்த்தும் சொற்கள் உள்ளன. ஒவ்வொரு சொல்லின் அர்த்தமாக வாழ்ந்துபார். குழப்பம் கூட ஒரு தூக்கம் தான். மறதிசோம்பல், தயக்கம் இவை கூட உறக்கத்தின் விதவிதமான புனைப்பெயர்களே. குழப்பத்தில் தத்தளித்த  அர்ஜூனனை நோக்கி பகவத் கீதையில் கண்ணன் சொன்ன வார்த்தைகள்  உத்திஷ்ட. அதையேதான் நாம் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்கிறோம். விழிப்புடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.

logo
Kalki Online
kalkionline.com