நீங்கள் உறுதியோடு இருந்தால் விரும்பியதை அடைவீர்கள்!

Man's flight is against God
self confidence
Published on

து உங்களுக்கு வேண்டும் என்பதில் தெளிவும் உறுதியும் இருந்து விட்டால் நாம் ஆசைபடுவதை அடைவது எளிது. 100 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் நடப்பதை அக்கணமே  இங்கே இந்தியாவில் பார்க்க வேண்டும் என்றால் அது நடந்திருக்காது. ஆனால் அப்படி பார்க்க வேண்டும் என்று யாரோ விரும்பியதால்தானே தொலைக்காட்சி கிடைத்தது. ஜெர்மனியைச் சேர்ந்த  ஒட்டோலிலியந்த்தா என்ற விஞ்ஞானி முதல் முறையாக பறக்கும் இயந்திரத்தை தயாரித்தார். ஆனால் ஜெர்மன் சர்ச் பாதிரியார்கள் கொந்தளித்தார்கள். 

தேவர்களும், தேவதைகளும் மட்டுமே விண்ணில் பறக்கலாம். மனிதன் பறப்பது கடவுளுக்கு எதிரானது என்று ஓட்டோலினியந்த்தா தயாரித்த விமானத்தை இரவோடு இரவாக தீயிட்டு கொளுத்திவிட்டார்கள். ஆனால் ஓட்டோலினியந்த்தா தளரவில்லை. மீண்டும் விமானத்தை தயாரித்தார். அதைக் கட்டி முடிக்க நான்கு வருடங்கள் தேவைப்பட்டன. அதற்குள் ரைட் சகோதரர்கள் தயாரித்த விமானம் விண்ணில் பறந்து சரித்திரத்தை மாற்றிவிட்டது. மனிதனால் பறக்க முடியுமா என்று நம்பிக்கையயை , மட்டுமே  வளர்ந்திருந்தால் ஓட்டோலினியந்தாலோ, ரைட் சகோதரர்களாலோ விமானத்தைக் கண்டுபிடித்திருக்க முடியுமா.

பரிணாம வளர்ச்சியில் குரங்கின் வால் உதிர்ந்து மனிதன் பிறந்தான் என்று டார்வின் சொன்னது உண்மையாகத் தான் இருக்கவேண்டும். வால் உதிர்ந்துவிட்டது ஆனால் குரங்கு மனித உள்ளத்தில் உட்கார்ந்து விட்டது. அந்தக் குரங்கை கிட்டே சேர்க்காமல் மனதில் உறுதியாக இருந்த சிலரால்தான் மாற்றங்களை நடத்த முடிந்தது. புராணக் கதைகளில் நாம் பார்த்திருக்கிறோம். ஈசனை நினைத்து கடுந்தவம் செய்து அசுரன் இயற்கையான பெருமழை, காற்று, தேவலோக அழகிகள் என்று தவத்தை கலைக்க முயன்றும்  உறுதியாக இருந்து ஈசனிடம் வரம் பெற்றான். உறுதியான எண்ணங்கள் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டியதை கடவுளே நினைத்தாலும் தடுக்கமுடியாது.

இதையும் படியுங்கள்:
மறப்பதும் நல்லதே மன்னிப்பதும் நல்லதே!
Man's flight is against God

மகாத்மா காந்தி எளிமையான மனிதர். யாராலும் அசைக்க முடியாத பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை அசை‌த்துக் காட்டினார். எடுத்துக்கொண்ட பொறுப்பில் தீவிரம் காட்டினார் மகாத்மா. அவரை விட கல்வியும், செல்வமும், வசதியும், திறமையும் பெற்றவர்கள் அவரைப் பின்பற்ற தயாராக இருந்தனர்‌ காரணம் விரும்பியதை சாதிக்க அவர் முழுமையான மன உறுதியுடன் இருந்ததால்தான். தீவிரமாக விரும்புவர்களால்‌தான் இப்படி சாதிக்க முடியும்.

துரதிஷ்டவசமாக இன்றைக்குக் தங்கள் விருப்பத்தில் தீவிரமாக இருப்பவர்கள் ஆபத்தான சிந்தனைகளைக் கொண்டவராக இருக்கிறார்கள். மகாத்மா காந்தியும் தீவிரவாதிதான். ஆனால் வன்முறையை ஆதரிக்காத தீவிரவாதி. எதிர்மறை எண்ணங்களில் விருப்பம் காட்டாத தீவிரவாதி. யாராலும் அசைக்க முடியாத  உறுதியோடு நீங்கள் இருந்தால் விரும்பியதை நிச்சயம் அடைவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com