you will succeed in anything!
patienceImage credit - pixabay

பொறுமை இருந்தால் எதிலும் வெற்றிதான்!

Published on

பொறுமை கடலினும் பெரிதும் என்பார்கள். பொறுத்தாரே பூமியாள்வார் என்பது பழமொழி. ஒரு செயலை சரியான நேரத்தில் சரியான முறையில் பொறுமையுடன் செய்பவன் செய்து முடிப்பான். அதுவே பொறுமை இழந்தவனிடம் இருக்காது. தன்னையும் வாழவைத்து, பிறரையும் வாழ  வைப்பது பொறுமைதான்.

ஒரு சிற்றூரில் பஞ்ச காலம் நிலவியது. மழையின்றி வயல்கள் வறண்டும், தண்ணீர் பற்றாக்குறைவால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அங்குள்ள பெரும் செல்வந்தர் இளகிய மனதுடையவர். அவரிடம் ஊர் மக்கள் தங்கள் நிலைமையை எடுத்துக் கூறினார்கள்.

தங்கள் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு ரொட்டித்துண்டு தருமாறு கேட்டனர். செல்வந்தரும் தனது வேலையாட்களிடம் ஊரிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து காலை, மதியம், மாலை என வழங்கினார்.

குழந்தைகள் ரொட்டியைப் பார்த்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு எனக்கு முதலில் பெரிய ரொட்டி  வேண்டும் என்று கூச்சலிட்டுக் கொண்டும், சண்டையிட்டும் வாங்கிச் சென்றனர்.

ஒரே ஒரு சிறுமி மட்டும் தினமும் அனைவரும் வாங்கிய பின் பொறுமையாக கடைசியில் வாங்கிச் சென்றாள். ஒரு நாள் மாலையில் அச்சிறுமி எல்லோரும் வாங்கி முடித்த பின் ரொட்டி வாங்கி வீட்டுக்குச் சென்று தன்  தாயிடம்  கொடுத்தான்.

இதையும் படியுங்கள்:
இரக்கம், அன்பு செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தெரியுமா?
you will succeed in anything!

அவளது தாய், அதனை இரண்டாக பிய்த்த பின் அதிலிருந்து இரு தங்க நாணயங்கள் விழுந்ததைக் கண்டு அதிர்ந்தாள். அதனை சிறுமியிடம் கொடுத்து அந்த செல்வந்தரிடம் கொடுத்துவிட்டு வரச் சொன்னாள். சிறுமியும், நாணயங்களைக் கொண்டு சென்று செல்வந்தரிடம் கொடுத்தாள்.

அதற்கு செல்வந்தர், இது உன்  பொறுமைக்கு கிடைத்த பரிசு! நீயே இதை வைத்துக்கொள்' என்று கூறி பாராட்டினார்.

சிறுமி, மகிழ்ச்சியுடன் தன் தாயிடம் அவற்றை கொடுத்தாள். பொறுமைக்கு கிடைத்த பரிசால் அவர்களது வறுமை தீர்ந்தது. நாம் அனைவரும் பொறுமைக்கு இலக்கணமாய் இருந்து, சோதனை வரும்போது, சுடச் சுட ஒளிரும் சங்கைப்போல ஒளிரலாம்.

logo
Kalki Online
kalkionline.com