தினசரி செயல்பாட்டை இப்படி அமைத்துக் கொண்டால் வெற்றி உங்களுக்குத்தான்!

Motivation
Motivationpixabay.com

வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்து விடக்கூடிய ஒரு விஷயம் அல்ல. அதற்கு பல நாட்கள் பல மாதங்கள் ஏன் சிலருக்கு பல வருடங்கள் கூட ஆகும். தினசரி செயல்பாடுகள் மூலம் ஒருவர் எவ்வாறு வெற்றிடைய முடியும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். 

 1. தினசரி செயல்பாடுகளை கட்டமைக்கும் முன்பு எதை நோக்கி உங்கள் இலக்கு இருக்கிறது, இலட்சியம் என்ன, குறிக்கோள் என்ன என்பதை தெளிவாக நிர்ணயித்துக் கொள்வது மிகவும் அவசியம்.

2. நீண்டகால இலக்குகளை வடிவமைத்த பின்பு  ஒவ்வொரு நாளுக்கும் தேவையான சிறிய இலக்கை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இலக்கை பல பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, அன்று செய்ய வேண்டிய செயல் என்ன என்பதை தெளிவாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

3. தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வளர்ச்சிக்கு உதவும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முன்னுரிமை தர வேண்டும். மற்ற வேலைகளை அப்புறமாக செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டு வளர்ச்சிக்கான வேலைகளில் ஈடுபட வேண்டும்.

4. நேர மேலாண்மை கடைபிடிப்பது மிகவும் அவசியம். கவனச் சிதறல்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் சாதனப் பயன்பாடுகளை வெகுவாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். இலக்கு நோக்கிய பயணத்திற்கான  செயல்பாடுகளில் முழு கவனமும் வைத்து நேரத்தை அதற்கு ஒதுக்க வேண்டும்.

5. அன்றைய நாளைக்கான வேலைகளை செய்வதற்கு தேவையான உற்சாகமான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் நேர்மறை எண்ணத்தோடும் உற்சாகத்தோடும் வேலையை தொடங்கும் போது மிக எளிதாக அவரால் அதை முடிக்க முடியும். எனவே அந்த மகிழ்ச்சியான மனநிலையும் அணுகுமுறையும் மிகவும் அவசியம். 

6. உற்சாகமும் நேர்மறை எண்ணமும் எவ்வளவு முக்கியமோ அதுபோல உத்வேகத்துடன் ஊக்கமுடன் வேலை செய்வதும் மிகவும் அவசியம். அப்போதுதான் இலக்குகளை நோக்கிய முயற்சிகளை மிகுந்த நம்பிக்கையோடும் உத்வேகத்துடனும் ஊக்கத்துடனும் செய்ய முடியும். 

7.  ஒருவர் தன்னுடைய சுய ஒழுக்கத்தில் கவனம் வைப்பது மிகவும் அவசியம். அது அவரின் அன்றாட செயல் பாட்டுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தன்னுடைய சுய ஒழுக்கத்தில் அக்கறை செலுத்தும் போது அவரால் இயல்பாக தன்னுடைய இலக்கு நோக்கிய வேலைகளை சுலபமாக செய்ய முடியும். அந்த முயற்சியில் வளர்ச்சியும் காண முடியும். 

இதையும் படியுங்கள்:
Summer Holiday Plan ரெடியா?
Motivation

8.  அன்றன்று செய்த வேலைகளை பற்றியும் அவற்றுக்கான முயற்சிகள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் ஒரு டைரி அல்லது  நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைப்பது மிகுந்த நன்மை அளிக்கும். சில நாட்களில் மனம் சோர்வுறும்போது அந்த பக்கங்களை புரட்டிப் பார்த்தால் அது மனதிற்கு தனி ஊக்குவிப்பையும் உற்சாகத்தையும் அளிக்கும். 

ஒருவர் தனது தினசரி செயல்பாடுகளில் இந்த எட்டு வழிமுறைகளையும் கட்டமைத்துக் கொண்டால் அவர் வெற்றி பெறுவது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com