இந்தியாவின் வளர்ச்சி மற்ற வளரும் நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு!

India's monuments and Flag
India's monuments and Flag

சமீப காலமாக பல நாட்டு தலைவர்கள் தங்கள் மேடைப்பேச்சுகளில் நம் இந்தியாவை நல்ல விஷயத்திற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு வாழ்த்தாமல் இருப்பதே இல்லை. அதற்கு காரணம் கடந்த காலங்களில் நம் இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்களே. அப்படி எந்த வகையில் நம் இந்தியா மற்ற நாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்மாதிரியாக இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பொருளாதார வளர்ச்சி:

உலகின் வளர்ந்து வரும் வெகுவேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டு வரும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இந்தியா தன் சுதந்திரத்தின் நூற்றாண்டைக் அடையும் போது (2047 க்குள்) வல்லரசு ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்று கொண்டிருக்கிறது. சவால்கள் இருக்கிறபோதிலும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதை வலுவாக தான் உள்ளது மேலும் பல வளர்ந்த உலக நாடுகளுக்கு இணையாக மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் இந்தியா, பிற வளரும் நாடுகளுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது..

வறுமைக் குறைப்பு:

2011 மற்றும் 2019 க்கு இடையில், கடும் வறுமையில் வாழும் மக்கள்தொகையின் எண்ணிக்கையை இந்தியா பாதியாகக் குறைத்துள்ளது. இன்னும் வறுமையைக் குறைப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நம் நாடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, நம்மை போன்ற வளரும் பிற நாடுகளுக்கும் சரி மற்றும் பல வளர்ந்த நாடுகளுக்கும், நம் இந்தியாவின் இந்த செயல்பாடு அவர்களுக்கு ஒரு பெரிய உந்து சக்தியை உருவாக்கி தந்துள்ளது.

உலக நாடுகளுடன் ஒற்றுமை:

இந்தியா ஒரு தனித்துவமான ஜனநாயக நெறிமுறை மற்றும் வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்கிறது. இது நம் தேசிய நலன்களுக்கு மட்டுமல்லாமல், நம் உலக வளர்ச்சிக்கும் சேர்த்து தான். காரணம் நம் இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு நிலையான பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் மேம்பாடு மற்றும் காலநிலை தீர்மானத்திற்கு ஒர் எடுத்துக்காட்டாக அமைவதே.

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்:

இந்தியா ஒரு வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அதன் மொழிகள், மரபுகள், கலை வடிவங்கள் மற்றும் திருவிழாக்கள் பல நூற்றாண்டுகளின் வரலாறு மற்றும் வாழ்க்கை தரத்தை பிரதிபலிக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தின் மூலம் நம்முடைய பன்முக கலாச்சாரத்தையும் மற்றும் சகிப்புத்தன்மையையும் இந்த உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
நம்மைச் சுற்றி இருக்கும் சூழலில் இருந்து Positive vibes பெறுவது எப்படி?
India's monuments and Flag

விண்வெளி ஆய்வு:

இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) வருடா வருடம் புது புது சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. அதிலும் விசேஷம் என்னவென்றால் குறைந்த செலவில் எப்படி திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற மந்திரத்தை இந்த உலகிற்கு உணர்த்தி வருவது தான். இதன் மூலம் பல வல்லரசு நாடுகள் நம் மேல் நம்பிக்கை வைத்து அவர்களின் செயற்கைகோள்களை நம்மிடம் குடுத்து செலுத்த கேட்டுக்கொண்டன. இந்த நம்பகத்தன்மையை உருவாக்கியதற்காகவே நம் இந்தியா வளர்ந்து வளரும் பல நாடுகளுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும்.

சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு:

இயற்கை மூலமாக வரும் எரிசக்திக்கு இந்தியா வருகிற ஆண்டுகளில் 175GW அளவிற்கு சக்திகளை உற்பத்தி செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக சர்வதேச சோலார் கூட்டணி (ISA) உலகளவில் சூரிய சக்தியை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் இந்த திட்டத்தை தொடங்கியது.பல விதமான வேலை வாய்ப்புகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உருவாக காரணமாக இது அமைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com