தத்துவஞானி சுன் சூ பற்றிய தகவலும்-மிகச் சிறந்த பொன் மொழிகளும்!

best golden words
Philosopher Sun Tzu
Published on

த்துவஞானி 'சுன் சூ' என்பவர் படை வியூகங்கள் பற்றிய மிகவும் புகழ்பெற்ற பண்டைய சீன நூலான ‘போர்க்கலை’ (தி ஆர்ட் ஆப் வார்) என்னும் நூலை எழுதினார். போர்க்கலை நூலின் எழுத்தாளராகவும், வரலாற்று புகழ் கொண்ட ஒருவராகவும் சுன் சூ சீனாவிலும், பிற ஆசிய நாடுகளிலும் வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் போர்கலை நூல், மேல்நாட்டுச் சமூகத்திலும் பெயர் பெற்றதுடன் செயல்முறைத் தேவைகளுக்கும் பயன்பட்டது.

தத்துவஞானி சுன் சூ வின் பொன்மொழிகள்

1. சமாதானத்தின்போது  அதிக வியர்வையை சிந்துங்கள் அதே நேரம் போரின்போது குறைந்த இரத்தத்தை சிந்துங்கள்.

2. உங்கள் தவறை கண்டறிந்தவுடன் விரைவில் அதை சரி செய்யுங்கள்.

3. எப்போது சண்டை இட வேண்டும். எப்போது சண்டை இடக் கூடாது என்று யாருக்கு தெரியுமோ அவரே வெல்வார்.

4. காற்றைப்போல வேகமாக இருங்கள், காட்டைப்போல அமைதியாக இருங்கள், நெருப்பைப்போல வெல்லுங்கள்  மலையைப்போல உறுதியாக இருங்கள்.

5. நீங்கள் பலமாக இருக்கும்போது பலவீனமாகவும், பலவீனமாக இருக்கும்போது பலமாகவும் தோற்றம் அளியுங்கள்.

6. சண்டையிடாமலே எதிரிகளை தோற்கடிப்பது உச்சக்கட்ட போர்கலை ஆகும்.

7. வெற்றி பெற்ற வீரர்கள் முதலில் வென்றுவிட்டு பின்னர் போருக்கு செல்கிறார்கள். அதே சமயம் தோற்கடிக் கப்பட்ட வீரர்கள் முதலில் போருக்குச் சென்று பின்னர் வெற்றி பெற முற்படுகிறார்கள்.

8. நீங்கள் புலிக் குட்டிகளை பிடிக்க வேண்டும் என்றால் புலியின் குகைக்குள் நுழைந்துதான் ஆகவேண்டும்.

9. கடினமானதை எளிதாகவும், பெரியதை சிறியதாகவும் பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
சுயநலமில்லாத பற்று கொள்ளுங்கள்!
best golden words

10. பிரச்னைகளிலிருந்து  தீர்வுகளை கண்டுபிடிப்பின் மூலம்தான் வெற்றி என்பது நமக்கு கிடைக்கிறது.

11. போரிட விரும்புகிறவன் முதலில் போரால் ஏற்படப் போகும் சேதத்தை கணக்கிட வேண்டும்.

12. போரே இல்லாமல் கிடைக்கும் வெற்றிதான் மிகச் சிறந்த வெற்றி.

13. எதையும் புரிந்து கொள்ளாமல் செய்ய வேண்டாம் எதையும் திட்டமிடாமல் செய்ய வேண்டாம்.

14. தன்னையும் தன் எதிரி யையும் எவன் ஒருவன்  நன்கு அறிந்து வைத்திருக்கிறானோ  அவனை தோற்கடிக்கவே  முடியாது.

15. நல்ல  சேவைக்கான வெகுமதிகளை  ஒரு நாள் கூட தள்ளி போடக்கூடாது.

16. உங்கள் குறைகளைப் பற்றி தெரிந்தும் அமைதியாக இருக்கும் நண்பனை ஒருபோதும் நம்பாதே.

17. அறிவு திறம் கொண்ட தலைவர்  சூழ்நிலைகளை தன் பயனுக்காக மாற்றுவார்.

18. ஒரு நல்ல தலைவரின் முன்னுரிமை தனது படைகளை பாதுகாக்க வேண்டும்.

மேலும் இவரின் சிறந்த போர் தந்திரங்களாலும், போர்குணங்களாலும், 'சிஜி' என்ற மன்னர் வெற்றி பெற்றார். அந்த மன்னர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க போர்க்கலை சம்மந்தமாக அவர் எழுதிய புத்தகம்தான் “The art of war” இப்புத்தகம் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இவருடைய சிந்தனைகள் போரில் மட்டுமல்ல. வாழ்க்கையில் வெற்றி பெறவும்  உதவும் வகையில் அமைந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com