இன்டர்வியூ..!

self confidence story...
motivational storyImage credit - pixabay
Published on

னித்துவமான பிரச்னையை எதிர்கொண்ட ஒருவருக்கு தன்னம்பிக்கை அளித்து, ஊக்குவித்த உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது.

அந்த நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிய பலருக்கும் ஆசையும், ஆர்வமும். அன்று அங்கு இன்டர்வியூக்காக 20 நபர்கள் குழுமியிருந்தனர்.

அந்த நிறுவனத்தின் நிறுவனர் உழைப்பால் உயர்ந்தவர். வாழ்க்கையில். அனுபவம் மிக்கவர். கண்டிப்பானவர். அதே சமயத்தில் மனிதாபிமானம் உடையவர். அவரிடம் வேலை செய்பவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பார். அவர்கள் யோசனைகளுக்கு மதிப்பு கொடுத்து ஊக்குவிப்பார்.

வேலைக்கு தேர்ந்து எடுக்கும் இன்டெர்வியூ போர்டில் அவர் கண்டிப்பாக கலந்துக் கொள்வார். அன்று இன்டர்வியூ துவங்கியது.

நிறுவனர் அறையின் கண்ணாடி வழியாக இன்டர்வியூக்கு வந்த நபர்களை பார்வையிட்டார். வந்து இருந்தவர்களில் ஒரு பெண்மணி மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார். அடிக்கடி கை கடிகாரத்தை பார்த்தார். உடன் இன்டர்வியூ நடைபெரும் அறையை எதிர் பார்ப்புடன் கவனித்தார்.

இதை நோட் செய்த நிறுவனர் இன்டர்காமில் தன் செகரட்டரியிடம் சில விவரங்களுடன் உள்ளே வர சொன்னார்.

இதற்குள் போர்டில் இருந்த ஒருவர் கேள்விகள் கேட்க முதல் நபர் இன்டர்வியூ முடித்துக் கொண்டு வெளியேறினார்.

உள்ளே வந்த செகரட்டரி அவரிடம் விவரங்கள் அடங்கிய பேப்பரை கொடுத்தாள்.

வாங்கி பார்த்துவிட்டு, அந்த குறிப்பிட்ட பெண்மணியை இன்டர்வியூ அட்டென்ட் செய்ய அனுப்பும்படி கூறினார்.

அந்த பெண்மணி வந்தும் அவரைப் பற்றிக்கூற சொன்னார். அந்த மங்கை கூற ஆரம்பிக்கும் முன்பே அவரை அறியாமல் கண்களில் நீர் கொட்ட துவங்கியது. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

நிறுவனர் அந்த மங்கையை ஆசுவாசப்படுத்திக் கொள்ள டைம் அளித்தார். நிலைமையையும், சூழ்நிலையையும் புரிந்துகொண்ட அந்த பெண்மணி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

பிறகு சுதாரித்துக் கொண்டு அவரைப் பற்றி சுருக்கமாகவும், தேவையான விவரத்தை தெளிவாக கூறி முடித்தார்.

அதை கேட்டதும் நிறுவனர் மற்ற குழு நபர்களுக்கு அவரது பதட்டம், கண்ணீரின் காரணம் விளங்கியது.

நிறுவனர் நிலைமையையும், இன்டர்வியூவிற்கு வந்த காரணத்தையும் கருத்தில் கொண்டு அந்த பெண்மணியிடம், இப்பொழுது நீங்கள் செல்லாம். உங்களால் எப்பொழுது இன்டர்வியூவிற்கு தடங்கல்கள் இல்லாமல் வர முடியுமோ அப்பொழுது வந்து இன்டர்வியூ அட்டென்ட் செய்யுங்கள்.

எப்பொழுது வர முடியும் என்று யோசித்து, உங்கள் முக்கிய குடும்ப உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து கூறவும். மேலும் இப்போதையை சூழ்நிலையில் உங்களால் உடனே வேலையில் சேர முடியும் என்று தோன்றவில்லை. எவ்வளவு மாதங்கள் கழித்து ஜாயின் செய்ய முடியும் என்பதையும் சிந்துத்து கூறவும், என்றார்.

ஆனால் ஒன்று என்று தொடர்ந்தார், "அந்த இன்டெர்வியூவில் நன்றாக பெர்பார்ம் செய்யவேண்டும். பெஸ்ட் விஷ்..!" என்று முடித்தார்.

அந்த பெண் திக்குமுக்காடி போய்விட்டார். என்ன சொல்வது என்றே புரியவில்லை. எழுந்து நின்று வணங்கி கண்களில் நீருடன், "மிக்க மிக்க நன்றி..!" என்றாள். அவருடைய கான்டக்ட் நம்பரை கொடுத்து அந்தப்பெண்ணை தைரியத்துடன் அனுப்பி வைத்தார்.

அவள் அங்கிருந்து சென்றதும், நிறுவனர் செய்த செய்கைதான் இந்த நிகழ்வின்.ஹை லைட் மற்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக்.

மூன்று மாதங்கள் கழித்து அந்த பெண் மறுபடியும் இன்டெர்வியூ அட்டென்ட் செய்தார். கடினமான கேள்விகளுக்கும் தன்னம்பிக்கையோடு புத்திசாலித்தனமாக பதில்கள் அளித்தாள்.

தேர்ந்து எடுக்கப்பட்டு வேலையில் சேர்ந்து ஒரு சிறந்த ஊழியர் என்ற பெயரையும் பெற்றாள்.

முதல் முறை இன்டர்வியூவிற்கு வந்த அன்று நடந்தது இதுதான்.

அவளுக்கு முதல் குழந்தை பிறந்து மிகவும் குறைந்த நாட்களே ஆகி இருந்தன. கணவர், மாமியார், மாமனார் இவர்கள் கட்டாயப்படுத்தியதால் வேறு வழி இன்றி தாய்ப்பால் குடிக்கும் பச்சிளங் குழந்தையை மாமியார் பாதுகாப்பில் விட்டு விட்டு மனமின்றி இன்டர்வியூவிற்கு வந்தாள்.

நிறுவினர் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டி அவளை ஊக்குவித்தார். அவளுக்கு வேறு ஒரு நாளில் இன்டர்வியூ இருக்கும் என்று ஆறுதல் மட்டும் கூறாமல் உறுதி (assurance) அளித்து அதன் மூலம் மன அழுத்தத்தில் (stress) இருந்து விடுபடவும், தன்னம்பிக்கை (self confidence) வளர்த்துக் கொள்ளவும் வழி வகுத்தார்.

அந்த பெண்ணும் தனது நன்றி உணர்வை மிக நேர்த்தியாக வேலை செய்வதன் மூலம் நீரூபித்தாள்.

நிறுவனர் உண்மையான விவரங்கள் அடிப்படையில் உடனடியாக பொறுத்தமான முடிவு எடுத்து செயல்படுத்தி அந்த தருணத்திற்கு எதிர்பாரத உதவி செய்தார்.

அது என்ன மாஸ்டர் ஸ்ட்ரோக்.

முடிவு எடுப்பது பெரிதல்ல. எடுத்த முடிவினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கிரகித்து (antcipate possible issues) பிரச்னைகளை தவிர்க்க அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் அதைத்தான் செய்தார் நிறுவனர்.

இந்த பெண் சென்று கூறினாலும், அவள் கணவர் மற்றும் அவரது பெற்றோர் நம்பவேண்டும். இல்லாவிட்டால் இந்த பெண்ணுக்கு மேலும் மனஅழுத்தம் (stress) ஏற்படவும் வேறு பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். எனவே நிறுவனர் அந்த பெண்ணின் கணவரை போனில் கான்டாக்ட் செய்து விளக்கி அவரையும் மகிழ்ச்சியில் ஆழ்தினார்.

நிறுவனர் எடுத்த timely appropriate decision நிறுவனத்திற்கு ஒரு ஊக்குவிக்கப்பட்ட ஊழியரைப் (company got a motivated committed employee) பெற்று தந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com